Whatsapp ஐ கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் முறை


மொபைல்களில் பயன்படுத்தும் மிக பிரபலமான Whatsapp மென்பொருள் கம்ப்யூட்டர்க்கும் வந்துடுச்சு. அதாவது நம்மள சும்மாவே இருக்க விட கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.

தற்சமயம் Google Chrome ல் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிமைக்கபட்டு இருக்கு.

இதை ஆக்டிவேட் செய்வது மிக சுலபமே.




முதலில் Computer ல Google Chrome ஓபன் செய்து web.whatsapp.com னு டைப் செய்துகோங்க.

படத்தில் உள்ளது போல் வரும்.


Scan பன்றதுக்கு உள்ள QR Code காண்பிக்கும். 





 பிறகு, உங்கள் மொபைலில் உள்ள Whatsapp ஐ ஓபன் செய்துகோங்க.

படத்தில் உள்ளது போல் மெனு அழுத்தினால் Whatsapp web னு வரும்.



 Camera ஆன் ஆகும். கம்ப்யூட்டரில் காண்பிக்கும் QR Code யில் கரெக்ட்டா Scan பண்ணுங்க.

சரியா Scan செய்ததும் கம்ப்யூட்டரில் Google Chrome ல் கனெக்ட் ஆகும்.




 அவ்வளவு தான் உங்கள் மொபைலில் உள்ள Whatsapp மெசேஜ் அனைத்தும் கம்ப்யூட்டரில் லோட் ஆயிடும்.

இடது பக்கம் கடைசியா நீங்க Chat செய்த நம்பர்கள் காண்பிக்கும்.

(போட்டோல நான் அழிச்சிட்டேன் என் நம்பர் லிஸ்ட்டை)

நீங்கள் Chat செய்ய வேண்டிய நம்பரை கிளிக் செய்தால் வலது பக்கம் மெசேஜ் அனைத்தும் காண்பிக்கும்.

போட்டோ, வீடியோ அனைத்தும் கிளிக் செய்தால் தான் டவுன்லோட் ஆகுது.



Google Chrome ஐ நீங்க க்ளோஸ் செய்தால் Whatsapp ஆன்லைன்ல காமிக்காது.
 
Leave the Page னு கொடுத்தா ஆன்லைன்ல காட்டாது. மெசேஜ் வருவதும் காண்பிக்காது.

Minimize செய்து வைத்தால் தான் ஆன்லைன் காட்டும்.

Whatsapp லேட்டஸ்ட் அப்டேட் செய்தால் தான், கம்ப்யூட்டரில் இணைக்கும் Whatsapp Web ஆப்சன் காண்பிக்கும்

 Whatsapp Web ஓபன் செய்து எந்தந்த கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்து இருக்கோமோ அதை படத்தில் உள்ளது போல் Logged in Computers னு காண்பிக்கும். 



லாக்அவுட் செய்யனும்னா. திரும்பவும் Whatsapp Web ஓபன் செய்தால், படத்தில் உள்ளது போல் வரும்.


Logout from all computers க்ளிக் செய்தால் லாக்அவுட் ஆயிடும்.





 புதிதாக மற்றுமொரு கம்ப்யூட்டரை இணைக்க,

Whatsapp Web ஓபன் செய்து, வலது பக்கம் மேலே இருக்கும் + சிம்பிளை அழுத்தினால் முன்னாடி கம்ப்யூட்டரில் இணைத்த அதே முறையில் புதிதாக வேறு கம்ப்யூட்டரை இனைத்து கொள்ளலாம்.









No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற