YouTube Facebook வீடியோவை மொபைலில் Download செய்ய




இன்டர்நெட் அதிகம் பயன்படுத்துவது மொபைல் போன் மூலமாக தான். Facebook, YouTube போன்ற தளங்களில் நாம் காணும் வீடியோவை டவுன்லோட் செய்ய மிகவும் சிரமமாக உள்ளது. நேரடியாக காண நேரம் இல்லாமல் டவுன்லோட் செய்து பிறகு காண்பவர்கள் தான் அதிகம். அதிலும் அலுவலக (ஓசி) இன்டர்நெட் மூலம் டவுன்லோட் செய்து வீட்டில் காண்பது ஒரு சுகம் தான். நானும் அப்படி தான்.. 😁😂😂.




மிக பிரபலமான டவுன்லோட் மென்பொருள் தான் இந்த Tubemate Downloader. Play Store ல் தடை செய்யப்பட்டு நீக்க பட்ட மென்பொருள். Play Store ல் இது கிடையாது. Play Store ல் இதே பெயரில் கிடைப்பது அனைத்தும் டூப்ளிகேட் தான்.














  • இதில் YouTube, Facebook, Metacafe, Dailymotion, Google போன்ற பிரபல இணையத்தளம் அனைத்திலும் டவுண்லோட் செய்யலாம். 



  • இடது பக்கம் மேலே மூன்று கோடு போல் இருப்பதை அழுத்தினால் அனைத்து இணையதளங்களையும் காணலாம். நீங்கள் விரும்பும் இணையதளத்தை தேர்வு செய்து அதில் உள்ள வீடியோகளை டவுன்லோட் செய்யலாம்.







  • இணையதளத்தை தேர்வு செய்தபின்பு, டவுன்லோட் செய்யவேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொள்ளுங்கள். வலதுபுறம் மேலே பச்சை கலரில் இருக்கும் டவுன்லோட் கோடை அழுத்தினால் டவுன்லோட் Option வரும். 

  • வீடியோவின் தரத்திற்கும், உங்கள் மொபைல் தரத்திற்கும் ஏற்ப Format களை தேர்வு செய்து கொள்ளுங்கள். 

  • டவுன்லோட் தேர்வு செய்துவிட்டால் போதும், தானாகவே டவுன்லோட் ஆகிகொண்டு இருக்கும். நீங்கள் வேற வீடியோ அல்லது வேற இணையத்தளம் சென்று பார்ப்பது என்றாலும் பார்க்கலாம். எவ்வித தடங்களும் இன்றி டவுன்லோட் ஆகிக்கொண்டு இருக்கும்.





  • டவுன்லோட் Options மூலமாக உங்கள் வசதிக்கேற்ப போன் அல்லது மெமரி கார்ட் என எதில் வேண்டும் என்றாலும் சேமித்து வைத்துக்கொள்ளலாம். 

 
  • டவுன்லோட் ஆகிக்கொண்டு இருக்கும் பொது இன்டர்நெட் தடங்கள் ஏற்பட்டாலும் எந்த பிரச்சனையும் இன்றி விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து டவுன்லோட் ஆகும்.

  • Pause செய்து கொண்டு நம் வசதிற்கு ஏற்ப கூட பிறகு டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


வீடியோ டவுன்லோட் செய்ய Mp3 Video Converter என்ற மென்பொருள் தேவை. Play Store லேயே கிடைக்கும். வீடியோ டவுன்லோட் செய்யும் போது கேட்கும் அப்போ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.



Play Store அல்லாது வெளியில் இருந்து டவுன்லோட் செய்வதால். Settings சென்று Security ல் Unknown Sources ல் டிக் செய்து கொள்ளவும்.




















No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற