ஆண்ட்ராய்ட் மொபைல்களில் நேரடியாக TV நிகழ்ச்சிகள் காண

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இணையதளத்தில் நேரடியாக TV நிகழ்ச்சிகளை எந்தவித மென்பொருளும் இல்லாமல் இணையதள முகவரிக்கு நேரடியாக சென்று காண Flash Player வசதி வேண்டும். ஆனால் ஆண்ட்ராய்ட் புதிய பதிப்புகளில் (4.0 பிறகு) Flash Player இயங்கவில்லை. Flash Player ஆண்ட்ராய்ட் 4.1, 4.2 மொபைல்களுக்கு இன்னும் வெளிவரவில்லை. நான் சோதித்துப் பார்த்தவரையில் இன்ஸ்டால் செய்தும் இயங்கவில்லை.
ஆண்ட்ராய்ட் 4.0 மொபைல்கள் மாடல் வரை எப்படி டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவேண்டும் என்பதை இங்கே சென்று தெரிந்துகொள்ளுங்கள்.ஆண்ட்ராய்ட் 4.0 பிறகு வெளியான மொபைல்களில் இந்த மென்பொருட்கள் மூலம் நேரடியாக நிகழ்ச்சிகளையும் காணலாம்.

இந்த மென்பொருளில் அனைத்து இந்திய மொழிகளிலும் உள்ள TV நிகழ்ச்சிகளை காணலாம். மென்பொருளின் மேலே அனைத்து மாநிலங்களின் பெயர்கள் இரண்டு எழுத்துக்கள் இருக்கும். உதாரணம் தமிழ்நாட்டிற்கு TN என்று இருக்கும்.


இந்த மென்பொருளை இயக்க இணையத்தளம் வேகமாக இயங்க கூடியதாக இருந்தால் எந்தவித தடைகளுமின்றி காணலாம். WiFi அல்லது 3G வசதி அவசியம் வேண்டும்.இதை நான் அறிய உதவிய எனது ரூமில் வசிக்கும் ஐயப்பன் அவர்களுக்கு நன்றி.
No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற