அனைத்துவிதமான வீடியோக்களையும் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் காண

நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் மொபைலும் ஒன்றாகிவிட்டது என்பது பழைய செய்தி. மொபைல் இல்லாத ஆளைக்கண்டால் உலக அதிசியத்தில் சேர்த்துவிட வேண்டும். நாம் பயன்படுத்தும் மொபைல்களில் புதிய தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் புதியதாக வந்துகொண்டு இருக்கிறது. கம்ப்யூட்டர் கொண்டு நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் மொபைல் கொண்டே செய்து விடலாம். இன்னும் என்னென்ன புதுமைகள் வரவிரிகின்றனவோ? நம்ம கொடுத்த வைத்த தலைமுறை தான்? மேட்டர் எதாவது எழுதனும்ல அதான்? வீடியோ பிளேயர் பற்றி இப்போ பார்ப்போம்.
வீடியோக்களை நாம் டவுன்லோட் செய்து மொபைலில் பார்க்க நினைத்து ஓபன் செய்தால் "video format is not supported" ன்னு வரும். அப்போ நமக்கு வருமே டென்ஷன். அப்புறம் அத கம்ப்யூட்டர்ல கன்வெர்ட் செய்ய ஒரு மென்பொருள் தேடி டவுன்லோட் செய்து பின்பு அத மொபைலில் ஏற்றி பார்க்கணும்.

இந்த பிரச்சினையே இல்லாமல் நேரடியாக மொபைலில் எல்லா வகையான வீடியோக்களையும் காணலாம். இதற்க்கு இந்த பிளேயர் அருமையானது.எந்தவகையான வீடியோவையும் கன்வெர்ட் செய்யாமல் காணலாம்.(.mkv, .flv, .vob etc..)

Blue Ray Video


Pop-Up-Videoஇதில் உள்ள சிறப்பம்சமே Pop-up-Video என்று அழைக்கப்படும் வசதி உள்ளது. Samsung Galaxy S3, Galaxy S4 போன்ற மொபைல்களில் மட்டுமே உள்ள வசதி இதில் உள்ளது. எந்த வகையான மொபைல்களிலும் இந்த வசதியை பயன்படுத்தலாம்.

Back பட்டனை அழுத்தினால் Pop up Video வில் வீடியோ ஓடிக்கொண்டு இருக்கும்.

Pop up Video வீடியோவில் ஒரு முறை தொட்டால் Pause செய்து கொள்ளலாம் அல்லது Close செய்து கொள்ளலாம்.

இரண்டு முறை தொட்டால் பெரிய திரையில் வீடியோ தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கும்.

இந்த வசதியை தேவையென்றால் பயன்படுத்திகொள்ளலாம். இதற்க்கு இந்த படத்தில் உள்ளதுபோல் Settings சென்று Activate செய்து கொள்ளவும்.


Menu --> Preferences --> Video Playback Preferences --> Background Playback --> Audio and Video files - pop up video.Sony Xperia மொபைல்களில் தமிழ் மொழி கொண்டு இயக்கலாம். புதிய மாடல்களில் வந்துவிட்டன.     எனது Xperia Z மொபைலில் தமிழ் மொழி கொண்டு பயன்படுத்தி வருகிறேன். இங்கிலீஷ் மொழியை விட கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது.. அவ்வ்வ்வவ்வ்வ்... நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற