ஆயப்பாடி பைத்துல் மால்- ஓர் அழகிய முன்மாதிரி ஊர்.


இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே இப்பதிவை அவசியம் படித்து நமது சமுதாயத்திற்கு உதவுங்கள்.
பைத்துல்மாலும் அதன் சிறப்பும்:
"பைத்"என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் வீடு,"மால்"என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் பொருள்.இந்த இரண்டுவார்த்தையின் கூட்டையும் சேர்த்து "பொருளகம்"என்று சொல்லலாம். பொருளகம் என்றால் என்ன?பொருட்களை சேர்த்துவைத்து அதை தேவையுடையோருக்கு பங்கிட்டுக் கொடுப்பது."எல்லாமும் எல்லோருக்கும்" என்ற அடிப்படையில் சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர் நபி(ஸல்) அவர்களால் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய வரலாற்று புரட்சி.
ஆயப்பாடி நோன்பு கஞ்சி முறை, நோன்பு திறக்கும் முறை, பைத்துல்மால் சதக்கா, இறை இல்லம் ஊழியர்களுக்கான நிதி வசூல் கமிட்டியாளர்கள் விபரங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நன்கொடை அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் மென்மேலும் செல்வத்தை அல்லாஹ் கொடுத்தருள்வானாக! மென்மேலும் நம் ஊர், சமுதாயம் சிறக்க அல்லாஹ் அருள்புரிவானாக! என்று துஆா செய்வோம் இன் ஷா அல்லா.


ஆயப்பாடியில் நடந்த மணாருள் ஹுதா மக்தப் மதரசா ஆண்டு விழா நிகழ்வுகள்.

நடைபெற்ற நாள் 06/07/2013


ஆயப்பாடியில் நடந்த பைத்துல்மால் கட்டிட திறப்பு விழா காட்சிகள்

திறப்பு விழா  நாள் :  06/07/13மீண்டும் ரமழான் மாதம்? நாம் என்ன செய்ய போகிறோம்?

அஸ்ஸலாமு அலைக்கும்..
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும்,அவர்களது தோழர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள்,மற்றும் உலக முஸ்லிம்கள்  அனைவர் மீதும் உண்டாவதாக! எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் இறைவனும் இறைத்தூதர் (ஸல்)அவர்களும் நமக்கு  தெளிவு படுத்தியுள்ளார்கள். இஸ்லாமியக் கடமைகளில் மூன்றாவது கடமையாகிய இந்த புனிதமிக்க  நோன்பு ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டுதான் கடமையாக்கப்பட்டது.இறைவனால் கடமையாக்கப்பட்ட ரமழான் மாதநோன்பு முஸ்லிமானவயது வந்தபுத்தி சுவாதினமுள்ளஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும.


பதிவுகளை ஈமெயிலில் பெற