எந்த நேரத்தில் எத செய்யணும்?? இந்த நேரத்தில் இத தான் செய்யணும்??


எத்தனை கோடி, கோடியாய் நாம சம்பாதிச்சாலும், நமது உடல் நலத்துடன்
இல்லையென்றால் , சவலைப் புள்ளை மாதிரி, எல்லாவற்றையும் ஏக்கத்தோட பார்த்து , பார்த்து பேரு மூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்...

நம்ம உடம்பை பற்றி , நாம தெரிந்து கொள்ள கீழே உள்ள தகவல்கள் நமக்கு
உதவியா இருக்கும்.... இப்போ , நாம எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்...
எதை சரி பண்ணலாம்னு சோதனை பண்ணிக்கோங்க....

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கு என்று தனித்தனியே
கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவுசெய்து கொண்டு
சுழன்றுகொண்டிருக்கிறது.


ஒவ்வொரு உறுப்புக்கும் அதன்பணியை செய்து முடிக்க இரண்டு மணிநேரம்
ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும்
அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.

இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண
சக்தியை உடலுக்குள்அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும்.
தொழுகைக்கு செல்ல ஏற்ற நேரம்இது.

ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.


விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.

காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும்
மலச்சிக்கல் உள்ளவர்கள்இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தைஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.
உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம்.

இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும்
காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள்
இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகி உடலில் ஒட்டும்.காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.

காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும்
ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக்
குடிக்கக்கூடாது.மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும்
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.

இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல்,
அதிகமாகக் கோபப்படுதல்,அதிகமாகப் படபடத்தல்கூடாது
இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.

பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம்

இந்த நேரத்தில்மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.

நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம். ( இடையிடையே வந்தால் சென்றுவரவும் )


மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்.

பகல் நேர பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற,
எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தொழுகை போன்ற செயல்பாடுகள் செய்ய சிறந்த நேரம்.


இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் நேரம்.

பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும்
ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber இரவுஉணவுக்கு உகந்த நேரம் இது.


இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை,

டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல,
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.

இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால்
பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.


இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.

இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது
கட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல்
தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது.
இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.
360 Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )

பிரபல 'The American Board of Orthopaedic Surgery' மருத்துவர்களின் இணையதளம்


தர்மத்தின் முக்கியத்துவம் பற்றியும், இறைவனை தியானிப்பது பற்றியும் இறைத்தூதர் சொல்லும் பல்வேறு அறிவிப்புகளில் இரண்டை மட்டும் தலைப்பு தொடர்பாக நாம் பார்ப்போம், வாருங்கள் சகோஸ்...!

முதல் ஹதீஸ்

"மனிதனுடைய உடலில் 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன.(அவை சரியாக இயங்குவதால், அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு...) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூட்டுக்காகவும் தர்மம் செய்ய வேண்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  உடனே நபித்தோழர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! இது யாருக்குச் சாத்தியமாகும்?' என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "பள்ளிவாசலில் எச்சிலைக் கண்டால் அதை மூடி விடுவதும், பாதையில் கிடக்கும் (கல், முள் போன்ற) பொருளை அகற்றுவதும் (தர்மம்) ஆகும். இது உனக்கு முடியவில்லை என்றால், லுஹா தொழுகையின் இரண்டு ரக்அத்துக்கள் உனக்குப் போதுமானது" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: அஹ்மத், ஹதீஸ் எண் - 21959

இரண்டாம் ஹதீஸ்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"ஒரு விஷயம் (சொல்கிறேன் கேள்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப் பட்டுள்ளனர். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவுக்கு அல்லாஹ்வை (தக்பீர் கூறி)பெருமைபடுத்தி, அல்லாஹ்வை (தஹ்மீத் கூறி) புகழ்ந்து, 'அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை' என்று (தவ்ஹீத்) கூறி, அல்லாஹ்வை (தஸ்பீஹ் கூறி) துதித்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு (இஸ்திக்ஃபார்) கோரி, மக்களின் நடைபாதையில் கிடந்த ஒரு கல்லையோ, முள்ளையோ, எலும்பையோ அகற்றி, (மக்களிடம்) நல்லதை ஏவி-தீயதை தடுத்தாரோ... அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திய நிலையிலேயே நடமாடுகிறார்".
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் - முஸ்லிம், ஹதீஸ் எண் - 1833

இந்த இரு அறிவிப்பிலும்... சொல்லப்பட்டு இருக்கும்... தர்மம், இறைசிந்தனை, தியானம், தொழுகை பற்றிய கருத்து, தமது உடலை சீரும் சிறப்புமாக இயங்க வைக்கும் இறைவனுக்கு நன்றிக்கடன் பட்டுள்ள முஸ்லிம்கள் தம் வாழ்வில் பின்பற்றுவதற்கு மிகவும் முக்கியமானது.
அதேநேரம்... இது ஒரு புறமிருக்க, இதே அறிவிப்புகளில், இன்னொரு மிக முக்கிய அம்சம் குறித்து மட்டும் இப்பதிவில் கவனிப்போம்..! அது....

//மனிதனுடைய உடலில் 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன.//

//ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளனர்.//

இதெப்படி சாத்தியம்..? 

ஏழாம் நூற்றாண்டின் ஓர் எழுதப்படிக்கத் தெரியாத மனிதர், அதுவும், அக்காலத்தில் மருத்துவ - அறிவியல் வளர்ச்சி அடைந்திராத ஒரு சூழலில் வாழ்ந்த ஒரு மனிதர், போகிற போக்கில் இப்படி ஒரு மருத்துவ அறிவியல் உண்மையை, இக்காலத்திய மருத்துவ பட்டப்படிப்புபடித்தவர் கூறுவது போல எப்படி இவ்வளவு துல்லியமாக கூற முடிகிறது..?
நான் இப்பதிவில் படிப்போரை சிந்திக்க வேண்டக்கூடிய விஷயம் இதுதான் சகோஸ்..! நிச்சயமாக, இது அந்த அத்தனை எலும்புகளையும் எண்ணி தேவைக்கேற்ப படைத்த அந்த ஏக இறைவனின்... இறைச்செய்தியின் வெளிப்பாடாக மட்டுமே இருக்க முடியும்..! வேறு சாத்தியக்கூறு இல்லை..!

குர்ஆன் மட்டுமே வேத வெளிப்பாடு அல்ல என்றும், முஹம்மத் நபி ஸல்... அவர்கள் இஸ்லாமிய மார்க்கமாக என்னவெல்லாம் சொன்னார்களோ-செய்தார்களோ-அங்கீகரித்தார்களோ அவையனைத்துமே இறைவாக்காக இறைவனிடம் இருந்து நபிக்கு வந்த இறைச்செய்தி(வஹீ)தான்... என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது..!
எனவே, அப்படியான ஒரு துல்லியமான வார்த்தையை மருத்துவ-அறிவியல் அறிவு அற்ற மனிதரால் விட்டு அடித்திருக்க முடியாது..! எனவே, இது இறைவன் புறத்திலிருந்து வந்த சரியான தகவலே..! எனில், அம்மனிதர் இறைத்தூதரே..! எனில், அவர் மூலம் மனித சமூகம் பெற்ற குர்ஆன் இறைவேதமே..! எனில், அதுவும் நபியும் இணைந்து தந்த மார்க்கமான இஸ்லாமே... அசல்..!
இவ்வுண்மைகளை சிந்தித்து உணரும்போது, நம்பிக்கையாளர்களுக்கு மேலும் நம்பிக்கையை அதிகரிக்க வைக்கிறது. நம்பிக்கை கொள்ளாதோரை நம்பிக்கை கொள்ள வைக்கிறது. இறைவனே மனிதர்களுக்கு தம் அத்தாட்சிகள் மூலம் தூய நேர்வழியை காட்டுகின்றான்..! இறைவன் தூயவன்..!

டியர் சகோஸ்...
 Please, refer... for human's 360 bone-joints with their names from several ortho medical science Thanks to Unknown Brother..?

எனக்கு வந்த மெயிலில் படித்த நல்ல விஷயத்தை பகிர்ந்துள்ளேன். இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை.


                                                                                     
No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற