Android மொபைல்களில் Flash Player இனி வேலை செய்யாது??

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இனி ப்ளாஷ் பிளேயர் (Flash Player) வேலை செய்யாது. Flash Player வேலை செய்யவில்லை என்றால் நேரடியாக எந்த நிகழ்ச்சியையும் இன்டர்நெட்டில் பார்க்க முடியாது. Flash Player கொண்டு இயங்கும் எந்த இணையதளத்தையும் மொபைலில் காண முடியாது. இது மிக பெரிய அதிர்ச்சியான விஷயம் ஆண்ட்ராய்ட் பிரியர்களுக்கு. காரணம் நூற்றுக்கு எழுபது சதவிகிதத்திற்கு மேல் Flash Player தேவைக்காக தான் வாங்குகின்றனர். ஏன் நானே அதற்காக தான் வாங்குனேன்.

கவலை வேண்டாம். Play Store இல் தான் தரவிறக்கம் செய்துகொள்ள முடியாது. வெளியிலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.






ஏற்கனவே உள்ள ப்ளாஷ் பிளேயர் இருக்குமென்றால், ஏதேனும் ஒரு இணையத்தளம் சென்று சோதித்து பாருங்கள். உதாரணம் webcric.com. இங்கு சென்றால் நேரடியாக கிரிக்கெட் ஒளிபரப்பு ஆகும். அதில் நேரடியாக கிரிக்கெட் கண்டீர்கள் என்றால், இது வரை உங்களுக்கு ப்ளாஷ் பிளேயர் கேன்சல் ஆகவில்லை. ஆண்ட்ராய்ட் 4.1.1, ஆண்ட்ராய்ட் 4.0.4 மொபைல்கள் அனைத்திலும் ப்ளாஷ் பிளேயர் வேலை செய்யவில்லை நான் சோதித்தவரை.




  • Play Store இல் இதை டவுன்லோட் செய்ய முடியாது.




  • Play Store அல்லாது வெளியிலிருந்து டவுன்லோட் செய்ய இதை பின்பற்ற வேண்டும்.




  • Settings சென்று Security இல் Unknown Sources என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.













  • டவுன்லோட் செய்து முடித்ததும் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.



  • இன்ஸ்டால் செய்து முடித்ததும் ஓபன் செய்யவேண்டிய அவசியம் இல்லை.










  • அவ்வளவு தான் எந்தவித பிரச்சனையுமின்றி வழக்கம்போல் நீங்கள் நேரடியாக இணையதளத்தில் வீடியோக்களை காணலாம்.




  • இந்த படத்தில் காண்பது இந்தியா பாகிஸ்தான் அணியிர்க்கு இடையில் நடந்த இருபது ஓவர் போட்டியினை நான் கண்டது. 





இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் Google Chrome இல் எந்த விதமான ப்ளாஷ் பிளேயர் கொண்டு இயங்கும் இணையதளத்தை காணவே முடியாது.

  • Firefox உலவியில் நன்றாக இயங்குகின்றன ஆனால் Full Screen இல் வீடியோ இயங்கவில்லை நான் சோதித்தவரை. 

  • Default (Internet) ப்ரௌசெரிலும் நன்றாக இயங்குகின்றன. Full Screen யிலும் நன்றாக இயங்குகின்றன. சில சமயங்களில் ஒழுங்காக இயங்காமல் உள்ளது. 

எதனால் இது போல் Play Store இல் இருந்து Flash Player வெளியேற்றினார்கள் என்பது தெரியவில்லை. இருந்தாலும் ஐபோன் போன்று இல்லாமல், ஆண்ட்ராய்ட் மொபைல்களில் வெளியிலிருந்து டவுன்லோட் செய்ய முடிந்ததே என்று சந்தோசப்பட்டு கொள்ளவேண்டியது தான். 

வெளியிலிருந்து டவுன்லோட் செய்ய முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இதை படிக்கும் நீங்களே அநேகமாக இப்பொழுது தான் சோதித்து பார்த்திறிப்பீர்கள். 

Flash Player இயங்கவில்லை என்றால் கண்டிப்பாக ஆண்ட்ராய்ட் மொபைல்களின் விற்பனை, மோகம் குறைய நிறைய வாய்ப்புகள் உண்டு. 

கூகிள் என்ன செய்யபோகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்??

இதை நான் அறிய உதவிய ஆயப்பாடி அஜீம் அவர்களுக்கு நன்றி.










4 comments:

  1. நண்பா நுங்கள் சோண்ன முறைப்படு முயற்ச்சித்தேன் அீனால் எண்னால் டவுண்ேலாட் சேய்ய மூடியல my mobile micromax a45 வேறூ வலி இறூந்தால் கூறூங்கள் நண்பா

    ReplyDelete
    Replies
    1. டவுன்லோட் லிங்க் வேலை செய்யவில்லையா? உங்கள் ஆண்ராய்டு version எது நண்பா? டவுன்லோட் செய்யும் போது ஒபேரா அல்லது Firefox கொண்டு செய்து பாருங்கள்.Chrome இல் டவுன்லோட் ஆகாது. இல்லை என்றால் கம்யூட்டரில் டவுன்லோட் செய்து மொபைலில் காபி செய்து இன்ஸ்டால் செய்து பாருங்க நண்பா.

      Delete
  2. டவுண்ேலாட் லிங் வெலை சேய்ய வில்லை நண்பா மை வேர்சன் 2.3 சிஞ்சர்பட்

    ReplyDelete
    Replies
    1. டவுன்லோட் ஆகுது நண்பா? webcric.com என்ற இணையதளத்திற்கு சென்று Flash Player வேலை செய்கிறதா என்று முதலில் சோதித்து பாருங்கள்.. வேலை செய்தால் தரவிறக்கம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. வேலை செய்யவில்லை என்றால் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். ஆண்டராய்ட் 4.0, ஆண்டராய்ட் 4.1 இல் தான் Flash Player வேலை செய்யவில்லை. உங்களுக்கு அநேகமாக வேலை செய்யும் நண்பா..?

      Delete

பதிவுகளை ஈமெயிலில் பெற