Advance System Care ஆண்டிராய்ட் மொபைலுக்கும் வந்தாச்சு


Advance System Care என்ற பிரபல மென்பொருள் ஆண்டிராய்ட் மொபைல்களுக்கும் வந்துவிட்டது. Advance Mobile Care என்ற பெயரில் வெளிவந்துள்ளது. புதியதாக வந்துள்ளதால் இதன் பயன்பாடு எப்படி உள்ளது என்பது தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக சிறப்பான முறையில் தான் இருக்கும். ஏனென்றால் கம்ப்யூட்டரில் உள்ள இந்த மென்பொருளின் பயன்பாடு அருமையாக இருப்பதால் மொபைலுக்கும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது. நான் உபயோகித்த வகையில் அருமையாக உள்ளது.









  • மென்பொருளை ஓபன் செய்ததும் ஸ்கேன் என்று வரும். ஸ்கேன் செய்தால் மொபைல் முழுவதும் ஸ்கேன் ஆகும்.

  • ஸ்கேன் முழுவதும் முடிந்த பிறகு ரிப்பேர் என்று வரும். ரிப்பேர் கிளிக் செய்தால் மொபைல் முழுவதும் ரிப்பேர் ஆகிவிடும்.





இதில் பல பயன்பாடுகள் உண்டு.

App Manager

Battery Saver

Task Killer

Privacy Locker





ஒவ்வொரு பயன்பாடும் மிக எளிதாக வடிவமைக்கபட்டுள்ளது.


ஒரே கிளிக்கில் எல்லா வேலைகளையும் முடித்து விடலாம்.













Privacy Locker என்று இருக்கும் பயன்பாடு அருமையாக உள்ளது. மற்ற மென்பொருட்கள் போட்டோகளை மறைத்து வைக்க மொத்த கேலரிகளை மறைத்து வைக்க வேண்டும்.

ஆனால் இந்த மென்பொருள் கொண்டு போட்டோ, வீடியோ என குறிப்பிட்டு மறைத்து வைக்கலாம். மறைத்துவைத்த போட்டோ கேலரியில் இருக்காது. மறைத்து வைத்ததையும் கண்டுபிடிக்க முடியாது.

இந்த மென்பொருள் கொண்டு மட்டுமே அந்த போட்டோகளை காண முடியும்.










No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற