டேப்லெட் (Tablet) ஒரு அலசல்

Samsung Tab 2
 15 வருடத்திற்கு முன்பு கம்ப்யூட்டர் (Desktop Computer) வைத்து இருப்பதை கண்டாலே "அவன் பெரிய ஆள் பா கம்ப்யூட்டர்லாம் வீட்ல வச்சி இருக்கான்" அப்படின்னு பேசிப்பாங்க. ஒரு டேபிள் முழுவதும் இடத்தை அடைத்து கொண்டு இருக்கும் இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்??.
10 வருடத்திற்கு முன்பு கைஅடக்க லேப்டாப் கம்ப்யூட்டர் (Laptop Computer) வச்சி இருக்கவங்கள பார்த்தாலே பொறாமையா இருக்கும் எல்லாருக்கும். ரொம்ப வசதியான ஆள் போலன்னு பேசுவாங்க. இப்போ உள்ள ட்ரெண்டே வேற. லேட்டஸ்ட் தொழில்நுட்பம் வர வர எல்லாமே மாறும் தானே. எல்லாவற்றையும் 10 இன்ச்ல அடகிட்டாங்க. சகல வசதிகளுடன் லேப்டாப் கம்ப்யூட்டரில் இருக்கும் எல்லா வசதிகளும் டேப்லெட்டில் (Tablet) வந்து விட்டன. கம்ப்யூட்டரில் இல்லாத பல வசதிகளும் கூட உண்டு.


Ipad (1st Generation)
முதன் முதலில் டேப்லெட் (Tablet Personal Computer) வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். 2010 ம் ஆண்டு வெளியிட்டது.

கம்ப்யூட்டர் என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது Microsoft Windows. டேப்லெட்டின் மோகம் இந்நிருவனத்திர்க்கும் தொற்றி கொண்டுவிட்டது. வேறு வழியும் இல்லை? ஆரோக்கியமான போட்டியில் மைக்ரோசாப்ட் நிறுவனமே இப்போ டேப்லெட்டில் இறங்கிவிட்டது. முதன் முறையாக நவீன தொழில்நுட்பம் கொண்ட Windows 8 இயங்குதள டேப்லெட் (Surface Tablet) வெளியிட்டுள்ளது.மிக பிரபலமான சில வகை டேப்லெட் பற்றியே இங்கு பார்க்க போகிறோம். கிட்டத்தட்ட அனைத்து கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் நிறுவனங்கள் டேப்லேட்களை வெளியிட்டுள்ளன.

Samsung Note II (N7100)

சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன வெளியிடு. பல புதிய வசதிகளை அள்ளி கொடுத்துள்ளது சாம்சங். இன்னும் இதை புதிய வகையில் மாற்றமும் செய்யவுள்ளது.

Note II 5.5 Inch


 • ஆண்டிராய்ட் 4.1 Jelly Bean இயங்குதளம் கொண்டுள்ளது. 
 • இதன் வேகம் Quad-core 1.6 GHz Cortex-A9
 • இன்டர்நெட் வேகம் HSDPA(Download) 42 Mbps, HSUPA (Upload) 5.76 Mbps, 4G 
 • 2 GB RAM வசதி
 • போன் மெமரி 16/32/64 GB, External Memory Up to 64 GB
 • 5.5 Inches திரை, எடை 183g
 • பின்புற கேமரா 8 MP 1080p HD, முன்புற கேமரா 1.9 MP HD 720p
 • பேட்டரி 3100mAh
(HSDPA - High Speed Downlink Packet Access) (HSUPA - High Speed Uplink Packet Access)

Samsung Note 10.1 (N8000)


சாம்சங் நிறுவனத்தின் மற்றுமொரு அதிநவீன வெளியிடு. இதில் தான் முதன் முதலில்  பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகபடுத்தியது. 


Note 10.1 Inch

 • ஆண்டிராய்ட் 4.1 Jelly Bean இயங்குதளம் கொண்டுள்ளது. 
 • இதன் வேகம் Quad-core 1.4 GHz Cortex-A9
 • இன்டர்நெட் வேகம் HSDPA(Download) 21 Mbps, HSUPA (Upload) 5.76 Mbps, 4G
 • 2 GB RAM வசதி
 • போன் மெமரி 16/32/64 GB, External Memory Up to 64 GB
 • 10.1 Inches திரை, எடை 600g
 • பின்புற கேமரா 5 MP 1080p HD, முன்புற கேமரா 1.9 MP HD 720p
 • பேட்டரி 7000mAhSamsung Tab 2 (P3100) (7 Inch)

சாம்சங் நிறுவனத்தின் முதல் சிறிய வகை டேப்லெட். ஏப்ரல் வெளியிட்டது. அப்பொழுது உள்ள காலகட்டத்தில்?? புதிய தொழில்நுட்பத்தில் வெளிவந்தது.

Tab 2 7 Inch


 • ஆண்டிராய்ட் 4.1 Ice Cream Sandwich (Upgradable to Jelly Bean)  இயங்குதளம் கொண்டுள்ளது. 
 • இதன் வேகம் Dual-core 1 GHz 
 • இன்டர்நெட் வேகம் HSDPA(Download) 21 Mbps, HSUPA (Upload) 5.76 Mbps
 • 1 GB RAM வசதி
 • போன் மெமரி 8/16/32 GB, External Memory Up to 32 GB
 • 7 Inches திரை, எடை 345g
 • பின்புற கேமரா 3.15 MP, முன்புற கேமரா VGA
 • பேட்டரி 4000mAh

Samsung Tab 2 (P5100) (10.1)

சாம்சங் டேப் (10.1) 2011 ம் ஆண்டு வெளியிட்டது. இதன் அடுத்த படைப்பே இந்த சாம்சங் டேப் 2 (10.1). பிப்ரவரி 2012 ம் வெளிவந்தது. முதன் முதலில் அதிவேக டேப்லேட்டாக  வெளிவந்து அமோக வியாபாரமும் வரவேற்ப்பும் பெற்றது. சாம்சங் நிறுவனத்தின் அனைத்து டேப்லெட்களும் அதிக விலை கொண்டவை இல்லை என்பதே கூடுதல் சிறப்பம்சம்.

Tab 2 10.1 


 • ஆண்டிராய்ட் 4.1 Ice Cream Sandwich (Upgradable to Jelly Bean)  இயங்குதளம் கொண்டுள்ளது. 
 • இதன் வேகம் Dual-core 1 GHz 
 • இன்டர்நெட் வேகம் HSDPA(Download) 21 Mbps, HSUPA (Upload) 5.76 Mbps
 • 1 GB RAM வசதி
 • போன் மெமரி 16/32 GB, External Memory Up to 32 GB
 • 10.1 Inches திரை, எடை 588g
 • பின்புற கேமரா 3.15 MP, முன்புற கேமரா VGA
 • பேட்டரி 7000mAh

Sony Xperia Tablet S 3G

சோனி நிறுவனத்தின் அழகிய வடிவமைப்பில் வெளிவந்த முதல் 3G டேப்லெட். இதற்க்கு முன் இதே வகையில் Wi-fi வசதி மட்டுமே கொண்ட டேப்லேட்டை வெளியிட்டது. இதன் சிறப்பம்சம் வடிவமும் (Design) மற்றும் எடையுமே. சோனி நிறுவனத்தின் மிக பெரிய குறையே இயங்குதளங்களை தாமதமாக புதிப்பிப்பதே (Software Updates). 


Xperia Tablet S 3G


 • ஆண்டிராய்ட் 4.1 Ice Cream Sandwich (Upgradable to Jelly Bean??)  இயங்குதளம் கொண்டுள்ளது. 
 • இதன் வேகம் Quad-core 1.3 GHz 
 • இன்டர்நெட் வேகம் HSDPA(Download) 21 Mbps, HSUPA (Upload) 5.76 Mbps
 • 1 GB RAM வசதி
 • போன் மெமரி 16/32/64 GB, External Memory Up to 32 GB
 • 9.4 Inches திரை, எடை 585g
 • பின்புற கேமரா 8 MP HD 1080p, முன்புற கேமரா 1.3 MP 720p
 • பேட்டரி 6000mAh


என்ன தான் பல புதிய தொழில்நுட்பம் டேப்லெட்டில் இருந்தாலும் கம்ப்யூட்டரில் உள்ளது போல் பயன்பாடு வராது என்பதே உண்மை. டேப்லெட்டில் எல்லா வசதிகளும் 100 சதவிகிதம் இருக்குமா என்றால்? இல்லை என்பதே உண்மை. என்னுடைய பெரிய குறையே தமிழில் டைப் செய்ய ஏற்படும் சிரமமே. மிக விரைவில் கம்ப்யூட்டர் போல்  (Android) டேப்லெட் மற்றும் மொபைல்களில் எல்லா மொழிகளிலும் டைப் செய்யும் (Input Method IE) வசதியை கொண்டு வரவுள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது. கம்ப்யூட்டரில் உள்ளது போல் 100 சதவிகிதம் வசதிகள் கண்டிப்பாக டேப்லெட்டில் கூடிய விரைவில் வரும் என்றே நம்புவோம்.

No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற