Android இயங்குதளம் மொபைல்களுக்கு சிறந்த மென்பொருட்களின் தொகுப்பு. பகுதி - 3

Samsung Galaxy S3
ஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட மொபைல்களுக்கான வரவேற்பும் விற்பனையும் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய முறையில் வடிவமைத்து கொண்டே இருக்கிறது கூகிள்.   ஆண்ட்ராய்ட் போன்கள் உபயோகிக்கவும்  மிகவும் எளிதாக உள்ளன. புதிய வரவான Jelly Bean இன்னும் பல புதிய தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. குறிப்பாக பேட்டரியின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. மொபைல் கம்பனிகளும்  ஆண்ட்ராய்ட்  தொழில்நுட்பத்திற்கு தகுந்தாற்போல் தங்களுடைய படைப்புகளிலும் புதிய தொழில்நுட்பத்தை வெளியிடுகின்றன. போட்டி போட்டு கொண்டு இன்டர்நெட் பயன்பாட்டின் வேகத்தை அதிகரித்து கொண்டே இருக்கின்றன.

ஏற்கனவே  ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கு சிறந்த மென்பொருட்களின் தொகுப்பு பகுதி 1 மற்றும் பகுதி 2 என பதித்துள்ளேன். இது மூன்றாவது பகுதி. புதிய மென்பொருட்கள் வந்து கொண்டே தான் உள்ளன.







டவுன்லோட் செய்யும் முறை


பெயரின் மேல் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

உங்களது மொபைல் போனில் எந்த இமெயிலில் கூகிள் ப்ளே உள்ளதோ, அதே இமெயில் கொண்டு கம்ப்யூட்டரில் கூகிள் ப்ளேயில் லாகின் செய்து இன்ஸ்டால் செய்தால் தானாகவே உங்களது மொபைலில் டவுன்லோடாகி இன்ஸ்டால் ஆகிவிடும்.

1. கூகிள் ட்ரான்ஸ்லேட் (மொழிபெயர்ப்பு)

கூகுளின் மற்றுமொரு அருமையான மென்பொருள். முதலில் கம்ப்யூட்டரில் நேரடியாக வெப்சைட்டில் சென்றால் மட்டுமே மொழிபெயர்த்து பார்க்க முடிந்தது. இந்த மென்பொருள் மூலம் நேரடியாக நாம் விரும்பிய மொழிகளில் மொழிபெயர்த்து கொள்ளலாம்.



சிறப்பு : அனைத்து மொழிகளும் உள்ளன. படிக்க தெரியாத மொழிகளை ஆடியோ மூலமாகவும் நாம் கேட்டுக்கொள்ளலாம்.

2. ஸ்மார்ட் ரேம் பூஸ்டர்

மிக அவசியமான மென்பொருள். நம்முடைய ரேம் மெமரி மென்பொருட்கள் தொடர் இயக்கித்தினால் குறைந்து கொண்டே இருக்கும். ரேம் மெமரி குறைந்தால் போனின் வேகம் குறையும். இந்த மென்பொருள் கொண்டு ஒரே கிளிக்கில் மெமரியை கிளியர் செய்யலாம்.




சிறப்பு : மென்பொருளை திறந்து கிளியர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.  போனின் மேல் பகுதியில் ஒரு சிறிய கோடு போல் இருக்கும் அதை கிளிக் செய்தாலே போதும் தானாகவே கிளியர் ஆகிவிடும். (நெட்வொர்க் படத்திற்கு அருகில் பார்க்கவும்) சிகப்பு நிறம் மெமரி பிடித்து கொண்டு இருப்பவை, நீலம் நிறம் மிச்சம் இருப்பவை. அனைத்தையும் கிளியர் செய்ய மென்பொருளை திறந்து சிகப்பு நிறத்தை கிளிக் செய்து "Kill All" கொடுத்தால் அனைத்தும் கிளியர் ஆகிவிடும்.



3. டிராப்ஸ்டெர் (GPS வழிகாட்டி)

நாம் செல்லும் இடங்களில் GPS உதவி கொண்டு வழிகளை மிக துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும். வழிகளில் உள்ள மோசமான வளைவுகள், விபத்துகள், சோதனை சாவடிகள் என பல பயனுள்ள எச்சரிக்கையை கொடுக்கும். எத்தனை தூரத்தில் இவை உள்ளன என்றும் காட்டும்.

சிறப்பு : ஆடியோ மூலமாகவும் எச்சரிக்கை கொடுக்கும். வழிதெரியாமல் செல்லும் போது இதன் மூலம் மிக துல்லியமாக வழியை தெரிந்துகொள்ளலாம்.

குறிப்பு : இதை தேவை ஏற்படும் போது மட்டுமே பயன்படுத்தவேண்டும். காரணம் பேட்டரி திறன் குறைந்து கொண்டே இருக்கும் இதை பயன்படுத்தும் போது. தேவை இல்லாத நேரத்தில் அடைத்து வைக்கவும்.

4. இன்ஸ்டாகிராம் (போட்டோ டிசைன்)

நம்முடைய போட்டோக்களை பல வண்ணங்களில், பல வடிவுகளில் வடிவமைத்து கொள்ள சிறந்த மென்பொருள். மிக பிரபலமான மென்பொருளும் கூட.




சிறப்பு : மிக மிக எளிதான முறையில் டிசைன் செய்து கொள்ளலாம். ஒரே கிளிக்கில் தேவையான வடிவத்தில் மாற்றி சேமித்து கொள்ளலாம். இதில் உறுப்பினரானால் இன்னும் பல வசதிகள் உள்ளன.

5. பிக்ஸ்ஆர்ட் (போட்டோ டிசைன்)

இந்த மென்பொருள் எத்தனை நபர்களுக்கும் தெரியும் என்று தெரியவில்லை. போட்டோ வடிவமைப்பதில் மிக சிறந்த மென்பொருள். போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு அள்ளி அள்ளி கொடுக்கிறது. இது முற்றிலும் இலவசம் என்பது மற்றுமொரு சிறப்பம்சம்.



சிறப்பு : எண்ணற்ற பேக்கிரௌண்ட்களில் உங்களது போட்டோக்களை இணைத்து வடிவமைத்து கொள்ளலாம். இரண்டு அல்லது அதற்க்கு மேலயும் போட்டோக்களையும் இணைத்து கொள்ளலாம்.

6. பார்கோட் ஸ்கேனர்

அவசியமான மென்பொருள். நீங்கள் வாங்கும் பொருளில் பார்கோட் என்று அழைக்கப்படும் நம்பர் இருக்கும். அதை கொண்டே நாம் பொருளின் தரம், நாடு போன்றவையை தெரிந்து கொள்ளலாம். இதை கேமரா மூலமாக ஸ்கேன் செய்து தெரிந்துகொள்ளவதே இந்த மென்பொருளின் வேலை.

சிறப்பு : இந்த மென்பொருள் கொண்டு மென்பொருட்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஸ்கேன் செய்த பொருளை பற்றி இன்டர்நெட்டிலும் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய மெசேஜ், மென்பொருள், புக்மார்க்ஸ் என அனைத்தையும் கோட் மூலம் பகிர்ந்தும் கொள்ளலாம்.

7. கிரிக்கெட் (கேம்)

கிரிக்கெட் பிரியர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்கு கேம்.  அழகான கிராபிக்ஸ்களுடன் எளிய முறையில் வடிவமைக்கபட்டுள்ளது. விளையாட விளையாட தூண்டி கொண்டே இருக்கும்.



சிறப்பு : தேசிய அணிகள், உள்நாட்டு அணிகள் என இரண்டு வகைகளில் பிரித்து விளையாடலாம். நம் விருப்பத்திற்கு ஏற்ப வீரர்களின் பெயர்களை வைத்து கொள்ளலாம்.

8. கேட்ச் (கேம்)

டெம்பிள் ரன் போல மற்றுமொரு விளையாட்டு. இதில் கிராபிக்ஸ் அருமையாக உள்ளன. சிறுவர்களை கவரும் வகையில் உள்ளது. டெம்பிள் ரன்னை விட சற்று கடுமையாக உள்ளது. ரொம்ப தூரம் விளையாடுவது சிரமமே.



சிறப்பு : மிகவும் எளிய முறையில் உள்ளது. சிறுவர்கள் எளிதாக விளையாடலாம்.

9. சப்வே (கேம்)

இதுவும் டெம்பிள் ரன் போல் தான். ஆனால் டெம்பிள் ரன்னை மிஞ்சிய விளையாட்டு. சிறப்பான முறையில் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. போனை திருப்பாமல் கை கொண்டே இடது, வலது என திருப்பும் வகையில் உள்ளது. அதனால் எளிதாகவும் உள்ளது.



சிறப்பு : இதுவும் சிறுவரை கவரும் வகையில் உள்ளது. பெரியவர்களையும் விளையாட தூண்டும் வகையில் உள்ளது. மணி கணக்கில் விளையான்டாலும் அலுப்புதட்டவில்லை.

10. யூடுயுப் டவுன்லோட்

யூடுயுப் வீடியோக்களை டவுன்லோட் செய்வது சிரமமான காரியாமாக இருந்தன. யூடுயுப் டவுன்லோடர் இதற்கு முன்பு கூகிள் ப்ளேயில் இருந்தது. ஆனால் இப்பொழுது இல்லை. இந்த மென்பொருள் கூகிள் ப்ளேயில் இல்லை. வெளியிலிருந்து தான் டவுன்லோட் செய்ய வேண்டும். எந்தவித தடையுமின்றி டவுன்லோட் ஆகிறது.

கூகிள் ப்ளே அல்லாது வெளியில் டவுன்லோட் செய்வதற்கு முன்பு இதை பின்பற்ற வேண்டும்.




Android 4
Android 4.0

Setting--> Security--> Unknown Sources --> Click Tick

Android 2 or 3

Setting-->Applications--> Unknown Sources--> Click Tick

சிறப்பு : வீடியோ மற்றுமின்றி ஆடியோவாகவும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். டவுன்லோட் செய்வதற்கு முன்பு ப்ளே செய்தும் பார்த்து கொள்ளலாம்.




2 comments:

  1. Assalamu alaikum thaufiq bro neenga potu irukura youtube downloder download agamatengudhu na check panten....

    ReplyDelete
  2. Alaikkum salam..download ahuthu brother.. open saithu second link download sainga. First link amazon app download Aana thaan aahum. I checked. Sorry for the deeeelaaaaay...

    ReplyDelete

பதிவுகளை ஈமெயிலில் பெற