ஜகாத் - கடமை, விளக்கம் மற்றும் முழு விபரம்



وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوْا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

இஸ்லாமின் சிறப்புக்களில் முக்கியமானதுவசதி படைத்தவர்களின் மீது தர்மத்தை கடமையாக்கியது.
  
முஸ்லிம் உம்மத்தின் சிறப்புதங்களது உழைப்பில் கிடைத்த பணத்தில் ஏழைகளுக்கு இருக்கிற பங்கை மனம் கோனாமல் கொடுப்பதுஈந்துவத்தலில் இன்பம் காணுகிற இயல்பு முஸ்லிம்களிடம் அதிகம்இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் அரபியருக்கு இந்த கட்டளை தான் சற்று சிரமாமக இருந்த்து.
ஹிஜ்ரி 9 க்குப் பிறகுதாயிப் நகர மக்கள் நாங்கள் இஸ்லாத்தை ஏற்கிறோம் ஆனால் ஜகாத் கொடுக்க முடியாது என்றனர்.அவர்கள் வரட்டும் ஜ்காத்தை கொடுத்து விடுவார்கள் என்றார் பெருமானார் (ஸல்) வந்தார்கள்வந்தவர்கள் எல்லோரும் வாரி வழங்கினார்கள்
பெருமானாரின் அறிவுரைகளும் நடைமுறைகளும் இந்த மாற்றத்தை நிகழ்த்தின.

عن أَبَي أُمَامَةَ َقُالُ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فِي حَجَّةِ الْوَدَاعِ فَقَالَ اتَّقُوا اللَّهَ رَبَّكُمْ وَصَلُّوا خَمْسَكُمْ وَصُومُوا شَهْرَكُمْ وَأَدُّوا زَكَاةَ أَمْوَالِكُمْ وَأَطِيعُوا ذَا أَمْرِكُمْ تَدْخُلُوا جَنَّةَ رَبِّكُمْ ق  - ترمذي


நாங்கள் இன்னும் அதிகமாக தரவேண்டுமா என்று சஹாபாக்கள் கேட்டார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَدَّيْتَ زَكَاةَ مَالِكَ فَقَدْ قَضَيْتَ مَا عَلَيْكَ
وَقَدْ رُوِيَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَيْرِ وَجْهٍ أَنَّهُ ذَكَرَ الزَّكَاةَ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ هَلْ عَلَيَّ غَيْرُهَا فَقَالَ لَا إِلَّا أَنْ تَتَطَوَّعَ

ஜகாத் வசூலிப்பவர்களிடம் நடுத்தரமானதை எடுங்கள என பெருமானார் சொல்லியனுப்ப கொடுத்தவர்களோ உயர்தரமானதை கொடுத்தார்கள்.

பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி  அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
நபி  அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி “தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி
நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகள் ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நபி  அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவுத், இப்னுமாஜா
நபி  காலத்தில் உணவுப் பொருட்களில் ஒரு “சாவு” ஃபித்ரா கொடுத்துக்கொண்டிருந்தோம் என நபித்தோழர் அபூசயீத் அல்-குத்ரி(ரலி) கூறும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மது, இப்னு மாஜ்ஜா போன்ற ஹதீஸ் நூற்களில் காணப்படுகிறது.
முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமாணவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தார்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரித்தம் பழம் ஆகியவற்றை ”தர்மமாக” கொடுக்கும்படி நபி அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
ரமளானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி  அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், நஸயீ
நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 3:93
நாம் விரும்பி உண்ணும் உனவுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் நாடிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன் 3:92
 நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன் பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்கு கொடுக்க முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்கவேண்டும்.
வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. நபித்தோழர் இப்னு உமர்(ரலி) தனது ஃபித்ரா தர்மத்தை பெருநாளைக்கு முன்பே அனுப்பி வைத்த நிகழ்ச்சி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது.
ஜகாத் கொடுத்தாவர்களிடம் கண்டிப்பு.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ آتَاهُ اللَّهُ مَالًا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ مُثِّلَ لَهُ مَالُهُ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ لَهُ زَبِيبَتَانِ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ يَأْخُذُ بِلِهْزِمَتَيْهِ يَعْنِي بِشِدْقَيْهِ ثُمَّ يَقُولُ أَنَا مَالُكَ أَنَا كَنْزُكَ ثُمَّ تَلَا لَا يَحْسِبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ الْآيَةَ    بخاري
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَتَانِ فِي أَيْدِيهِمَا أَسَاوِرُ مِنْ ذَهَبٍ فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتُحِبَّانِ أَنْ يُسَوِّرَكُمَا اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ أَسَاوِرَ مِنْ نَارٍ قَالَتَا لَا قَالَ فَأَدِّيَا حَقَّ هَذَا الَّذِي فِي أَيْدِيكُمَا- احمد
عَنْ أَبَي  هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فَمَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ أَنَّ اللَّهَ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ بِالْقِتَالِ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ

ஜகாத் யார் மீது கடமை எப்போது கடமைஎப்படி நிறைவேற்றப்பட வேண்டும்யாருக்கு தரவேண்டும்என ஜகாத்திற்குதிட்டமிட்ட வரையரைகளை மார்க்கம் விதித்துள்ளது. ஜகாத் வழங்கும் முஸ்லிம்கள் இந்த விதிமுறைகளை கவனித்து வழங்க வேண்டும்.

ஜகாத் பண வசதி படைத்தவர்கள் மீதே கடமையாகும். ஏழைகள் ஜகாத் கொடுக்கும் நிலையை எட்டாத நடுத்தர வர்க்கத்தினர் மீது ஜகாத் கடமையில்லை ஏழைகளும் ஓரளவு தன்னிறைவு பெற்றோரும் முடிந்த அளவு தர்ம்ம் செய்யலாம்.

யார் மீது கடமை

அடிப்ப்டை தேவைகள்கடன்எல்லாம் போக மேலதிகமாக சுமார் லட்சத்த்து 15 ஆயிரம் ரூபாய் கையிருப்பில் ஒரு வருடம் முழுவதும் வைத்திருப்பவர் மீது ஜகாத் கடமையாகும். ( 85 கிராம் தங்கத்தின் மதிப்பு)

(இன்றைய பொருளாதார முறையில் தங்கத்தை அடிப்படையாக கொண்டே நாணயத்தின் மதிப்பு முடிவு செய்யப்படுவதால்- 85கிராம் தங்கத்திற்கு நிகரான செல்வம் வைத்திருப்பவர் மீதே ஜகாத் கடமையாகும் என தற்கால அறிஞர்கள் பத்வா வெளியிடுள்ள்ளார்கள். 599 கிராம் வெள்ளிக்கு நிகரான தொகை சுமார் 40 ஆயிரம் ரூபாய் கையிருப்பில் வைத்திருப்பவர் கணக்கிட்டு ஜகாத் வழங்கினால் அது பேணுதலாக அமையும் )

இந்தக் கையிருப்பு தொகையாக இருந்தாலும் அல்லது வியாபார பொருளாக இருந்தாலும் ஜகாத் கடமையாகி விடும்.
பிக்செட் டெபாசிட்டுகள்முதலீடுகள்சேமிப்புத் தொகைகள்வாடகை வருமானம் கணக்கில் கொள்ளப்படவேண்டும.

கடனாக கொடுத்த பணம் திரும்பி வரும் என்ற உத்தரவாதமிருப்பின் அதுவும் கணக்கில் கணக்கில் கொள்ளப்படும். ஆயினும் பணம் கைக்கு வந்த பிறகு அதற்குரிய ஜகாத்தை வருடக் கணக்கிட்டு நிறைவேற்றினால் போதுமானது.

வீடு கடைகளுக்கு அட்வான்ஸாக கொடுத்திருக்கிற தொகை கணக்கில் வராது.

வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடுகார் ஆட்டோ போன்ற பொருட்களின் மதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள்  ஒரு ஆண்டிற்கான பரிமாற்றத்தில் மிக குறைந்த அளவாக ஆண்டு முழுவதும் வைத்திருந்த தொகைக்கு ஜகாத் செலுத்தினால் போதுமானது.

உதராணத்திற்கு தொடக்கத்தில் லட்சமாக இருந்து அது இடையில் லட்சமாக குறைந்து இறுதியில் அது லட்சமாக உயர்ந்திருக்குமெனில் லட்சம் தான் வருடம் முழுவதும் இருந்த தொகை என்ற வகையில் அதற்கு மட்டுமே ஜகாத் கொடுத்தால் போதுமானது. மற்ற வியாபார பரிமாற்றத்திலும் இதே போன்ற அளவீட்டை கை கொள்ள வேண்டும்.

பெண்கள் அணிந்திருக்கிற அத்தியவசிய நகைகளில் ஜகாத் கடமையாகாது.

அதிகப்படியான சேமிப்பு நோக்கிலான நகைகளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.

தங்கம் வெள்ளிக் கட்டிகள் பாத்திரங்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும். வைரக்கற்களுக்கு ஜகாத் இல்லை. 

வியாபார நோக்க மின்றி வீட்டு மனையாக தரிசி நிலமாக வைத்திருக்கிற சொத்துக்களுக்கு ஜகாத் இல்லை. அதன் சந்தை மதிப்பு அதிகமாக இருந்தாலும் சரி.

ரியல் எஸ்டேட் – வியாபார நோக்கில் வாங்கிப் போட்டிருக்கிற நிலத்தின் மதிப்புக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.

வங்கிகள் மற்ற நிதி அமைப்புக்க்களில் இருந்து நீண்ட கால தவனை 
திட்ட்த்தில் பெறப்படும் கடன தொகை வருமாணக் கணக்கில் சேர்ர்கப்படும். அந்த வருடம் கட்டும் தவனை தொகை மட்டும் கழித்து விட்டு எஞ்சிய தொகைக்கு ஜகாத் வழங்க வேண்டும்

எப்படி ஜகாத்தை கொடுப்பது,

அருள் கூர்ந்து ஏனோ தானோ வென்று ஜகாத் கொடுப்பதை நிறுத்துங்கள்.
நம்மிடமிருக்கிற பணம் சந்திர ஆண்டில் ஒரு வருடம் பூர்த்தியாவிட்டால் ஜகாத் கடமையாகி விடும்.

ஒவ்வொரு செல்வந்தரும் ஜகாத்தை கணக்கிடுவதற்காக ஒரு பிறைத் தேதியை உதாரணத்திற்கு ரமலான் 11 அல்லது ரஜப் 5என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் தனது ஜகாத்தின் அளவை அவர் முடிவு செய்திட வேண்டும்.

அப்போதே தன்னுடையை கடமையை அவர் நிறைவேற்றி விட வேண்டும். ஜகாத் கடமையான பிற்கு காலம் தாழ்த்துவது,அல்லது வருடம் முழுவதும் கொஞ்சம் கொஞ்டமாம ஜகாத்தை கொடுக்க நினைப்பது மார்க்க அடிப்படையில் பொருத்தமானது அல்ல. பின்னால் ஜகாத் கொடுக்க முடியாமல் போய்விடலாம். ஜகாத்தை கொடுத்து நம்முடை சொத்தை சுத்தப் படுத்தி விட்டோம் என்ற அந்தஸ்தும் கிடைக்காது.

இந்த ஆண்டு கொடுக்க வேண்டிய தொகையை முன்னதாகவே கணக்கிட்டு கொடுக்கலாம். கொடுக்கிற போது ஜகாத் என்ற எண்ணம் இருக்க வேண்டும். கொடுத்த தொகையைப் பற்றிய விவரக்குறிப்பையும் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஜகாத் கொடுப்பவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது,

ஜகாத் என்பது ஒரு அமல். நான் கொடுக்கிறேன் என்ற எண்ணத்தை விட நான் நிறைவேற்றுகிறேன். இதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனோநிலையில் ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்.
தற்பெறுமை ஏற்படாமல் இந்த எண்ணம் காக்கும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَعْطَيْتُمْ الزَّكَاةَ فَلَا تَنْسَوْا ثَوَابَهَا أَنْ تَقُولُوا اللَّهُمَّ اجْعَلْهَا مَغْنَمًا وَلَا تَجْعَلْهَا مَغْرَمًا –
إبن ماجة

யாருக்கு ஜகாத்

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَاِبْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنْ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

ஜகாத் யாருக்கு கொடுக்கப் பட வேண்டும் என்பதை மார்க்கம் அறுதியிட்டு கூறியுள்ளது. உரிய நபர்களுக்குத்தன் ஜகாத் வழங்க வேண்டும். நமது அவசரத்திற்கு அல்லது முகஸ்துதிக்காக தகுதி அற்றவர்களுக்கு கொடுத்தால் ஜகாத் கொடுத்த்தாதாகாது.

தாய் தந்தை மனைவி மக்கள் போன்ற உறவுகளை தவிர மற்ற சகோதர சகோதரிகள் பெரியத்தா சின்னதாக்கள் மற்ற நெருங்கிய உறவுக்கார்ர்களுக்கு ஜகாத்தை கொடுக்கலாம். உறவினர்களுக்கு ஜகாத் கொடுத்தால் தர்ம்ம் செய்த நன்மையும் உறவுகளை பேணிய இரட்டை நன்மை கிடைக்குக்ம்

அடுத்த்தாக நமக்கு பக்கத்தில்/ நமது ஊரில் இருக்கிற தேவையுடையவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

நமக்கு அருகிலேயே தேவைய்டையவர்கள் இருக்கும் போது வெளியூர்களுக்கு தூரத்திலிருப்பவர்களுக்கு ஜகாத்தை எடுத்துச் செல்லக் கூடாது.

அமைப்புக்கள் இயக்கங்களுக்கு ஜகாத் பணத்தை கொடுப்பவர்கள் முதலில் தங்களது உறவினர்களையும் அருகிலிருப்போரையும் 
கவனித்து விட்டார்களாஎன்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஜகாத் கொடுக்கிற போது வாங்கும் நபருக்கு அது முழு உரிமையானதாக ஆகி விட வேண்டும்



Extension Factory Builder




No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற