Android இயங்குதளம் மொபைல்களுக்கு சிறந்த மென்பொருட்களின் தொகுப்பு - பகுதி 2

Android (ஆண்டிராய்ட்) இயங்குதளம் கொண்ட மொபைல்களுக்கான சிறந்த மென்பொருட்களின் தொகுப்பு - பகுதி 1 என்று ஏற்கனவே பதித்துள்ளேன். இங்கே சென்று பகுதி 1 பார்த்து கொள்ளுங்கள். இரண்டாவது பகுதியாக மேலும் சில மென்பொருட்களை தொகுத்துள்ளேன்.  Android (ஆண்டிராய்ட்)  இயங்குதளம் கொண்ட மொபைல்கள் தான் இப்பொழுது அதிகம் விற்பனையாகி முதலிடத்தில் உள்ளன. Android (ஆண்டிராய்ட்)  இயங்குதளத்தில் 95% இலவசமாக மென்பொருட்களை பெறலாம். Iphone மொபைலில் இல்லாத சிறப்பம்சம் Android (ஆண்டிராய்ட்) இயங்குதள மொபைல்களுக்கு ஒன்று உண்டு.


டவுன்லோட் செய்யும் முறை

பெயரின் மேல் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

உங்களது மொபைல் போனில் எந்த இமெயிலில் கூகிள் ப்ளே உள்ளதோ, அதே இமெயில் கொண்டு கம்ப்யூட்டரில் கூகிள் ப்ளேயில் லாகின் செய்து இன்ஸ்டால் செய்தால் தானாகவே உங்களது மொபைலில் டவுன்லோடாகி இன்ஸ்டால் ஆகிவிடும்.


Android (ஆண்டிராய்ட்) மொபைல்களில் நேரடியாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை காண முடியும். Adobe Flash Player உதவியோடு இயங்கும் அனைத்து தளத்திலும் Android (ஆண்டிராய்ட்) மொபைல்கள் மூலம் காணலாம். Iphone மொபைலில் இந்த வசதி இல்லை. பெரும்பான்மையான Android (ஆண்டிராய்ட்) மொபைல்களில் Adobe Flash Player வருகின்றன. இல்லையென்றால் இங்கே சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

1. Google Chrome

மிக மிக பிரபலமான ப்ரௌசெர் இப்பொழுது Android மொபைல்களில் அறிமுகபடுத்தயுள்ளனர். Android 4.0 (Ice cream Sandwich) இயங்குதளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.


சிறப்பம்சம் : கம்ப்யூட்டரில் நீங்கள் சேமித்து வைத்து இருக்கும் தளங்களின் விபரங்களை (Bookmarks) மொபைளிலும் சுலபமாக பயன்படுத்தலாம்.

குறிப்பு : எந்த ஜிமெயில் அக்கௌண்டில்கம்ப்யூட்டரில் நீங்கள் சேமித்து வைத்தீர்ந்தீர்களோ அதே ஜிமெயில் அக்கௌண்ட கொண்டு மொபைலை பயன்படுத்தினால் மட்டுமே Bookmarks - களை பயன்படுத்த முடியும்.

2. Nimbuzz

99% வெளிநாட்டில் வாழும் நபர்களின் மொபைல்களில் இருக்க கூடிய மிக பிரபலமான மென்பொருள். இந்தியாவிலும் அதிகமானவர்கள் இப்பொழுது பயன்படுத்துகின்றனர்.


சிறப்பம்சம் : Nimbuzz to Nimbuzz இலவசமாக போன் பேசி கொள்ளலாம். மெசேஜ் அனுப்புவதும் இலவசம் தான். ஜிமெயில், யாஹூ போன்ற அக்கௌன்ட்களையும் இதில் பயன்படுத்தி இலவசமாக மெசேஜ் அனுப்பலாம்.

3. Teamviewer

இது அனைவருக்கும் தெரிந்த மிகபிரபலமான மென்பொருள். விசயமே இப்போ இது மொபைலுக்கும் வந்ததுதான். கம்ப்யூட்டர் உதவி இல்லாமலேயே Android மொபைல் மூலமாகவே மற்ற கம்ப்யூட்டரில் தொடர்பை ஏற்படுத்தி பயன்படுத்தலாம்.

சிறப்பம்சம் : கம்ப்யூட்டர் பயன்படுத்தி பயன்படுத்துவது போலவே  மொபைலிலும் அதே சிறப்புகளுடன் வடிவமைக்க பட்டுள்ளது. உங்கள் இன்டர்நெட் வேகத்தை பொறுத்து மென்பொருளின் வேகமும் இருக்கும்.

குறிப்பு : மொபைல் டூ கம்ப்யூட்டர் மட்டுமே பயன்படுத்த முடியும். மொபைல் டூ மொபைல் பயன்படுத்த முடியாது.

4. Tamil Typing Keyboard

இந்த மென்பொருள் பற்றி ஏற்கனவே பதிவு உள்ளது. இங்கே சென்று பார்த்துகொள்ளுங்கள்.



5. Flight Schedule Landing Details

வெளிநாட்டில் வாழும் நபர்களுக்கு மிக உபயோகமான மென்பொருள். நாம் பயணிக்கும் விமானத்தின் எண், செல்லவேண்டிய இடம் அல்லது கிளம்பும் இடம் ஆகியவற்றின் மூலம் முழு விபரங்களையும் ஒரே நிமிடத்தில் பெறலாம்.

சிறப்பம்சம் : விமானம் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்துவிட்டதா? இடையில் தரஇறக்கப்பட்டதா? தாமதம் ஆகிவிட்டதா? போன்ற விபரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

6. Stick Cricket

கிரிக்கெட் பிரியர்களுக்கு அருமையான மென்பொருள். விளையாட விளையாட தூண்டி கொண்டே இருக்கும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் பைசா கொடுத்தே வாங்க வேண்டும் இது தான் இதில் குறையே?

சிறப்பம்சம் : அருமையான கிராபிக்ஸ்களுடன் மிக மிக எளிதான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

7. Talking Tom


சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் என்று சொன்னால், நானும் சிறுவனே என்று சொல்ல தூண்டும் வகையில் நகைச்சுவையான மென்பொருள். குழைந்தைகளின் பிரியமான மென்பொருள்.

சிறப்பம்சம் : இதில் நாம் பேச பேச இந்த பூனையும் வித்தியாசன முறையில் பேசும். நாம் பேசுவதை வீடியோவாக பதிவாக்கி அதை யூடுயுப் (YouTube) பதிவேற்றி கொள்ளலாம்.

8. MP3 Quran

பிரபலாமான இமாம்களின் அழகிய குரலில் குரானில் உள்ள அனைத்து சூராக்களும் உள்ளது. நாம் இதை ஓபன் செய்து விட்டு, அடுத்து அடுத்து அனைத்து சூராக்களும் தானாகவே ஒலிக்க விட்டு அமர்ந்துகொண்டே குரானை கேட்டுக்கொண்டு இருக்கலாம்.

சிறப்பம்சம் :  சூராக்கள் அனைத்தையும் நாம் தரவிரக்கமும் செய்து கொள்ளலாம். நம் தேவைர்க்கு ஏற்ப இமாம்களின் குரலையும் மாற்றிக்கொள்ளலாம்.

9. Shahih Bukhari Tamil
ஒவ்வொரு தலைப்பாக, பாகம், ஹதீஸ் எண், என்று தெளிவான ஹதீஸின் தொகுப்பு. 97 தலைப்புகளின் கீழ் ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சம் : நம்முடைய விருப்பத்திற்கு தேவையான ஹதீஸ்களை Bookmark செய்து கொண்டு, பின்பு நமக்கு தேவைப்படும் நேரத்தில் எடுத்து படித்து கொள்ளலாம். நேரடியாக குறிப்பிட்ட ஹதீஸ் எண்ணையும் கொடுத்து படித்து கொள்ளலாம்.

10. Tamil Quran

அரபியில் உள்ள குரானின் அர்த்தத்துடன் எளிய முறையில் படிக்க மிக உபயோகமான தர்ஜுமா குரான். இதிலும் Bookmark செய்து கொண்டு தேவையான போது பயன்படுத்தி கொள்ளலாம்.

சிறப்பம்சம் : ஆடியோ மூலமும் தமிழில் குரானை கேட்கலாம். சூரா எண், ஆயத்தின் எண்கள் மூலமாகவும் Search செய்து நேரடியாக செல்லலாம்.







No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற