நபி (ஸல்) அவர்களை பற்றி அவசியம் தெரிய வேண்டியவை!!

அஸ்ஸலாமு அலைக்கும்..

எத்தனை பேருக்கு நபி (ஸல்) அவர்களை பற்றிய விபரங்கள் தெரியும். நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே உள்ளன. படித்து தெரிந்து கொள்வதோடு மற்றவர்களுக்கும் தெரிய படுத்துங்கள்.

இறைதூதர் நபி (ஸல்) அவர்கள் தான் இறைவனால் அனுப்பபட்ட தூதர்களில் கடைசி தூதர் ஆவார்.

 அல்லாஹ்வின் தூதர்களில் மிக சிறந்த தூதரும், அல்லாஹ்விற்கு ரொம்ப பிடித்த தூதரும் நபி (ஸல்) அவர்கள் தான்.

நபி (ஸல்) அவர்கள் தான் முழுமையான இஸ்லாத்தை எத்திவச்சார்கள்.

அல்லாஹ் ஒருவன் தான் இறைவன் என்ற ஓர்இறை கொள்கையை மக்களுக்கு எத்திவைதார்கள்.

மக்களை நேரான வழியில் அழைத்து சென்றதோடு, நரக நெருப்பிலிருந்தும் தற்காத்து கொள்ள எச்சரித்தார்கள்.

தனக்கு முன் வந்த நபிமார்களை மதிக்கவும், பின்பற்றவும் மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் 570-ல் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12, மக்காவில் பிறந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் தந்தை ஹஜ்ரத் அப்துல்லாஹ் அவர்கள்.

நபி (ஸல்) அவர்களின் தாயின் பெயர் பிபி ஆமினா.

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய வாழ்கையை மிக மிக எளிமையாக கழித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு தனது நாற்பதாவது வயதில் தான் முதன் முதலில் அல்ல்லாஹ்விடம் இருந்து வஹி வந்தது.

மக்காஹ்வில் இருக்கும் ஹிரா என்ற குகையில் இருக்கும் போது தான் நபி (ஸல்) அவர்களுக்கு ஹஜ்ரத் ஜிப்ரியில் அலைகிவசல்லாம் அவர்கள் மூலம் அல்லாஹ்விடம் இருந்து வஹி வந்தது.

நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் வஹி மூலம் சொல்லப்பட்ட வார்த்தை (இக்ரா) "ஓதுங்கள்".

நாற்பது வயது முதல் நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை மொத்தம் 23 ஆண்டுகளில் குரான் முழுமையாக அருளப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தைகள், விஷயங்கள் பல ஹதீஸ் புத்தங்களாக தொகுக்கபட்டுள்ளது.

அல்லாஹ்வினால் அருளப்பட்ட புனித குரானை தான் உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் பின்பற்றுகின்றனர்.

நபி (ஸல்) அவர்களால் சொன்ன வார்த்தை, விஷயங்களை அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ் புத்தகங்களையும் இஸ்லாமியர்கள் பின்பற்றுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தனது 25 - வயதில் திருமணம் செய்துகொண்டார்கள்.

நாற்பது வயதான அன்னை ஹஜ்ரத் கதீஜா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள்.

நபி (ஸல்), அன்னை ஹஜ்ரத் கதீஜா ஆகிய இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகளும் (ஹஜ்ரத் பாத்திமா, ஹஜ்ரத் ஜைனப், ஹஜ்ரத் ருகாயா, ஹஜ்ரத் உம்மு குல்தும்) மற்றும் மூன்று ஆண் குழைந்தகளும் (காசிம், அப்துல்லாஹ், இப்ராஹிம்).

அன்னை ஹஜ்ரத் கதீஜா அவர்களின் மறைவிற்கு பின், அன்னை ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மறைவிற்கு பின் நான்கு கலிபாக்கள் ஆட்சியில் இருந்தார்கள். (ஹஜ்ரத் அபு பக்கர் சித்திக், ஹஜ்ரத் உமர் பாரூக், ஹஜ்ரத் உதுமான் கணி, ஹஜ்ரத் அலி முர்தஜா (ரலி)).

நபி (ஸல்) அவர்கள் குழைந்தைகள் மீது அதிக பாசம் உடையவர்களாக இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அனாதைகள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருந்தார்கள்.

எப்பொழுதும் மக்களிடம் பொறுமையாக, அன்பாக பேசும் பழக்கம் உடையவார்களாக இருந்தார்கள்.

நல்ல பண்பும் பழக்கமும், மற்றவர்களுக்கு முன் உதாரணமான மனிதராக வாழ்ந்தார்கள் நபி (ஸல்) அவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஏழை மக்களோடு இருப்பதையே அதிகம் விரும்பினார்கள்.

தன்னுடைய வேலையை மற்றவர்களிடம் ஏவி விடாமல், தான் வேலையை தானே செய்பவர்களாக இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தான் வாழ்நாளில் கோப பட்டதாக வரலாறு இல்லை.

தான் செய்த சத்தியத்தை ஒரு போதும் மீறவே இல்லை.

நபி (ஸல்) அவர்களுக்கு பல பெயர்கள் உண்டு. 

"முஹம்மது" என்ற வார்த்தைக்கு "பாராட்டுக்குறியவர்" என்று பொருள்.
"அஹமது" சொர்கத்தில் நபி (ஸல்) அவர்களின் பெயர் இதற்க்கு பொருள் "மிகவும் பாராட்டுக்குறியவர்".
எப்பொழுதும் உண்மையாகவே வாழ்ந்ததால் "உண்மைக்கு சொந்தமானவர்" "அஸ் சாதிக்" என்றும் அழைக்கப்பட்டார்கள்.
அல்லாஹ்வினால் தேர்ந்தடுக்கப்பட்ட கடைசி இறைதூதர் என்பதால் "அல் முஸ்தபா" "தேர்ந்தெடுக்கப்பட்டவர்" என்றும் அழைக்கப்பட்டார்கள்.  

அல்லாஹ்வினால் சொர்க்கத்தை காண அழைக்கப்பட்டார்கள். இதன் நிகழ்ச்சியை "மிஹ்ராஜ்" என்று பெயர்.

அனைத்து நபிமார்களில் அல்லாஹ்வை நேரடியாக கண்ட ஒரே இறைதூதர் நபி (ஸல்) அவர்கள் தான்.

மக்கஹ்வில் இருந்து மதீனாவிற்கு தனது 53 - வயதில் பயணம் செய்தார்கள். இதை தான் "ஹிஜ்ரா" அல்லது "ஹிஜ்ரி" என்று அழைக்கப்படுகிறது.

மதீனாவிற்கு சென்று "மஸ்ஜிதுல் நபவி" என்ற பள்ளியை கட்டினார்கள்.

தனது "ஷஹாதத் விரலால்"  அறிவியல் அதிசியமான நிகழ்வான நிலவை இரண்டாக பிளந்தார்கள். 

இவ்வுலகத்தில் நபி (ஸல்) அவர்களின் புகைப்படம் எங்கும் கிடையாது. 

நபி (ஸல்) அவர்கள் சுன்னத்தான நீண்ட தாடியை உடையவர்களாக இருந்தார்கள்.

தன்னுடைய நல்ல குணத்தாலும், பண்பாலும் அரபு நாடு முழுவதும் இஸ்லாத்தின் பக்கம் மக்கள் அலை அலையாக வந்தார்கள். புனித இஸ்லாத்தின் பக்கம் மக்கள் ஈர்க்கப்பட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய 63 - வயதில் இறைவனடி சேர்ந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கடைசி வாழ்கையை மதினாவில் "ரவுதா" (சொர்க்கத்தின் பூங்கா) எனும் இடத்தில் வாழ்ந்தார்கள்.

மறுமை நாளில், அல்லாஹ்விடம் தன்னுடைய மக்களுக்காக பாவங்களை மன்னிக்க வேண்டி துஆ செய்வார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தான் சொர்க்கத்தின் ராஜா .

உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் நபி (ஸல்) அவர்களை மனமார மதிக்க கூடியவர்களாக உள்ளனர்.

நபி அவர்களின் பெயரை நாம் உச்சரிக்க கேட்டால் "சல்லல்லாகு அலைஹி வசல்லம்" (நபி (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாகட்டுமாக) என்று கூற வேண்டும்.

நபி (ஸல்) அவர்களால் பரிந்துரைக்கப்படும் கூட்டத்தில் நம்மையும் சேர்ந்தருள்வானாக!! ஆமீன்!!!.

நபி (ஸல்) அவர்களின் வரலாறு (Wikipedia)

The 100: A Ranking of the Most Influential Persons in History - வீடியோ

நபி (ஸல்) அவர்களின் முழு வரலாறு தமிழில்பதிவுகளை ஈமெயிலில் பெற