ரமளான் - நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழிகள்?


ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், இறைவனின் அருட்கொடைகளும் நன்மைகளும் நிறைந்த புனிதமான ரமளான் மாதத்தை மீண்டும் ஒரு முறை பெறக்கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான். அதற்காக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இறைவனுக்குக் கட்டாயம் தங்கள் நன்றியினைச் சொல்லாலும் செயலாலும் அவனிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
 
இம்மாதத்தின் மகத்துவத்தினைக் குறித்து நபி(ஸல்) அவர்கள்,
 
'ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன".... - (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம் 1957) என்றும்,

'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 761) என்றும் அறிவித்தார்கள்.
ரமளான் மாதம் நன்மைகளை அதிகமதிகமாகப் பெற்றுத் தரும் மாதம். ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்குவரை நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் மாதம் என்பதை முஸ்லிம்களாகிய நாம் மிக நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம்.

இதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் ரமளானை எதிர்பார்த்து அதில் நோன்பு நோற்ற நிலையில் அதிகமான வணக்க வழிபாடுகள், தர்மங்கள், குர்ஆன் ஓதுதல், அதிகமாக மார்க்க விஷயங்களில் ஈடுபடுதல் போன்று நன்மைகளில் தமது நேரத்தை முஸ்லிம்கள் அதிகமாகக் கழிக்கின்றனர். தம்மிடமிருந்து சொல்லாலோ செயலாலோ பார்வையாலோ எந்த ஒரு தவறும் நிகழக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் எல்லாவித சிறிய பெரிய பாவங்களிலும் இருந்தும் நோன்பாளியான நிலையில் தவிர்த்துக் கொள்கின்றனர்.

முஸ்லிம் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நோன்பு நோற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். தமது ஐவேளைத் தொழுகைகளை மற்ற நாட்களில் சரியாக நிறைவேற்றாதவர்களும்கூட மிக ஆர்வமாக இம்மாதத்தில் நோன்பு நோற்பதையும் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவதையும் அதிகமாகக் குர்ஆன் ஓதுவதையும் காணலாம்.

அதிகமாக நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், முஸ்லிம்களிடம் இம்மாதத்தில் மிகுந்து இருப்பதைக் காணமுடியும். "எப்படியாவது அல்லாஹ்விடம் நன்மைகளைப் பெற்று கொள்ள வேண்டும்; தான் செய்த பாவங்களில் இருந்து மன்னிப்புப் பெற்று மீட்சி அடைந்திட வேண்டும்" என்று முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்கின்றனர்.

புனித ரமளானின் ஒரு மாத கால அளவில் காணப்படும் நற்செயல்களின் மீதான ஆர்வம் நோன்பு மாதம் முடிந்ததும் மீண்டும் தலைகீழாக மாறிவிடும் நிலையைச் சமூகத்தில் பரவலாகக் காண முடிகிறது. நோன்பின் சமயங்களில் செய்த நல்லறங்கள், பேணிய ஒழுக்கங்கள், காட்டிய நற்பண்புகளை அடுத்த பதினொன்று மாதங்களுக்குப் பூட்டி வைக்கும் நிலையைக் குறித்து இச்சமூகம் இன்னும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏன் இந்த நிலை? புனித ரமளான் மூலம் தான் அடைந்த நன்மை என்ன? அதற்கான பிரதிபலன் பெறும் தகுதி தனக்கு உள்ளதா? எனத் தன்நிலையைக் குறித்து சுயபரிசோதனை செய்ய முஸ்லிம்கள் தவறி விடுகின்றனர்
 
தொழுகை போன்ற கட்டாயக் கடமை முதல், குர்ஆன் ஓதுதல், அதிகமாக தர்மங்கள் செய்தல், பிறர் நலம் நாடுதல், மார்க்கச் சொற்பொழிவுகள், அழைப்புப் பணி நிகழ்ச்சிகள் என்று எல்லாவற்றிலும், தொடர்ந்து வரும் 11 மாதங்களில் ஈடுபாடும் கவனமும் குறைந்து காணப்படுகிற நிலையில்தான் பெரும்பாலானோர் வாழ்க்கை கழிகிறது.
 
ரமளான் தினங்களில் தினம் தோறும் அக்கறையாக கவனத்துடன் கூட்டாக ஃபஜ்ருத் தொழுகை எனும் அதிகாலை தொழுகையைக் கடைப்பிடித்தவர்கள், ரமளான் அல்லாத காலங்களில் ஃபஜ்ருத் தொழுகையைத் தொழாமல் தூங்கிவிடுவதும், மற்ற தொழுகைகளில் கவனக்குறைவாக அக்கறையின்றி செயல்படும் நிலையையும் பரவலாகக் காண முடிகிறது.
குர்ஆனை அதிகமாக ஓதியவர்கள், குர்ஆனை விட்டு தூரம் ஆகிவிடுவதும் அவரவர் வாழ்க்கையில் இருந்து குர்ஆனும் நபிவழியும் தூரமாகி விடுவது மட்டுமில்லாமல் மீண்டும் புறம், கோள், மோசடி, விரயமான கேளிக்கைகள் என்று ரமளானில் பெற்ற நன்மைகளை விடப்பல மடங்கு அதிகமாக சொல், செயல், செவி, பார்வைகளின் மூலம், தொடர்ந்து வரும் 11 மாத காலம் தீமைகளில் மூழ்கிவிடுகின்றனர்.
 
இதிலிருந்து கிடைக்கும் செய்தி என்ன? ரமளானில் குர்ஆனைப் படித்தவர்கள் தமது உள்ளத்தில் அதன் கட்டளைகள் பதியுமாறு அதனைப் படிக்கவில்லை என்பதை இதன் மூலம் பறை சாற்றுகின்றனர். ரமளான் மாத இரவுகளில் நின்று வணங்கியவர்கள் இறை அச்சத்துடன் தாங்கள் அத்தொழுகைகளை நிறைவேற்றவில்லை என்பதை உரக்க அறிவிக்கின்றனர்.

ரமளான் மாத நோன்புகளை நோற்றவர்கள் நோன்பை எந்த நோக்கத்திற்காக இறைவன் விதித்தானோ அந்நோக்கத்தை மனதில் ஏந்தி அந்நோக்கத்தில் முழுமை பெறுவதற்காக நோன்புகளை நோற்கவில்லை என்பதை உலகிற்குக் கூறாமல் கூறுகின்றனர்.
 
".... நீங்கள் (உள்ளச்சம் பெற்று) இறைபக்தி உடையவர்களாகலாம்." (அல்குர்ஆன் 2: 183)

ஒரு செயலைச் செய்யும் பொழுது அச்செயல் எந்த நோக்கத்திற்காகச் செய்யப்பட்டதோ அந்நோக்கம் முழுமை அடைவதைப் பொருத்து அச்செயலின் பிரதிபலன் கிடைக்கிறது. இது எல்லாச் செயல்களுக்கும் பொருந்தும். அதுபோலவேதான் நோன்பும். ரமளான் மாதத்தில், 29 அல்லது 30 நாட்களில் பகல் முழுவதும் உண்ணுவதையும் பருகுவதையும் தவிர்த்து, இன்னபிற இச்சைகளையும் அடக்கி வாழ்ந்தவர்களின் நோக்கம் இறைபக்தியை தம்முள் ஏற்படுத்தி/வளர்த்துக் கொள்வதே. ஒரு நோக்கத்துக்காகப் பலவற்றைத் துறந்த ஒருவர், அந்த நோக்கத்தை அடைந்து கொண்டாரா என்பதை எளிய சுயசோதனை மூலம் அறிந்து கொள்வது தேவையான ஒன்றாகும்.

கடந்த ஆண்டின் நோன்பு நாட்களில் அமைந்திருந்த தம் இறையச்ச நடைமுறைகள், கடந்த நோன்புப் பெருநாள் முதல் இந்த ரமளானின் முதல்நோன்பு வரைக்கும் எந்த அளவு தம் வாழ்வில் வெளிப்பட்டிருக்கின்றன? என்பதை ஒருகணம் அசைபோட்டுப் பார்த்தால், அல்லாஹ் கூறும் "இறையச்சம் உடையவர்கள்" ஆகிக் கொண்டிருக்கிறோமா? ஆகிவிட்டோமா? ஆகவேயில்லயா? என்பதை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். நோன்பிருந்ததன் நம் நோக்கம் எத்துணை அளைவு நிறைவேறி இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்
 
உறுதி ஏற்போம்!

நோன்பின் பிரதிபலனை இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு, நோன்பு நோற்றவரிடம் காணப்பட வேண்டிய மாற்றம்தான் என்ன? நோன்பு முடிந்து, தொடரும் அடுத்த 11 மாதங்களில் நோன்புக் காலங்களில் உரிய காலத்தில் நிறைவேற்றிய தொழுகைகள், கடைப்பிடித்த ஒழுக்கங்கள், நற்பண்புகள், இன்னபிற நற்செயல்களை விட்டு விலகி வாழ்வதா? அல்லது நோன்புக் காலங்களில் தன்னைக் கண்காணித்த அதே இறைவன்தான் இப்போதும்-எப்போதும் தன்னைக் கண்காணிக்கின்றான் என்ற உணர்வுடன் அந்நற்பண்புகளை விட்டு விலகாது தொடர்ந்து அவற்றை மேம்படுத்துவதா? என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு மாதத்தில் பழகிப் பக்குவப் பட்ட ஒழுக்க வாழ்க்கையை உதறித் தள்ளி விட்டு, "பழைய குருடி ..." உவமையாக வாழத் தலைப் பட்டவர்களுக்கு,

"அந்நாளில் அவர்களுடைய நாவுகளும் அவர்களுடைய கைகளும் அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததைப் பற்றி சாட்சியம் கூறும்"".  (அல்குர்ஆன் : 24:24);
 
"அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும கண்களும் அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்". (அல்குர்ஆன் : 41:20).
 
நாளை மறுமையில் தமது சொல், செயல், செவி, பார்வைகள் அனைத்தும், கேள்விக்கு உட்படுத்தப்படும் என்பதை மறந்து ரமளானைத் தொடர்ந்து வரும் அடுத்த 11 மாதங்களில் குர்ஆன் போதனைகள் மற்றும் நபிவழிக்கு மாற்றமாகத் தமது வாழ்கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு மேற்கண்ட இரு வசனங்களும் எச்சரிக்கை விடுக்கின்றன. அடுத்த ரமளானில் இக்காலகட்டத்தில் செய்பவற்றுக்குப்  பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என இறுமாந்து இருப்பவர்கள், அடுத்த ரமளான் வருவதற்குள் இலட்சியமற்ற அலட்சிய வாழ்க்கை வாழும் நிலையில் மரணித்தால் தன் நிலை என்னவாகும் என்று சற்றும் கவலையற்றவர்களாக இருக்கின்றனர். அல்லாஹ் அருள் புரிந்து பாதுகாப்பானாக.
 
இனிமேலாவது இந்நிலையிலிருந்து தான் மாற வேண்டும் என்று ஒவ்வொருவரும் தன் மனதில் சங்கல்பம் எடுத்துக் கொண்டு இந்த புனித ரமளான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். உலகில் புத்தாண்டு தீர்மானங்கள், பழைய ஆண்டு தீர்மானங்கள் எனப் பல தீர்மானங்கள் (resolutions) நிறைவேற்றப் படுவதைப்போல் இப்புனித ரமளானின் ஆரம்பத்திலும் நம் இம்மை-மறுமை வாழ்க்கை செம்மையடைய சில தீர்மானங்களை ஒவ்வொருவரும் மனதில் எடுக்கலாம்.
 
இன்ஷா அல்லாஹ்!

·         இந்த ரமளான் முதல் நான் தினம் ஐந்து வேளை தொழுகைகளையும் ஜமாஅத்தோடு தொழுவது முதல், வாழ்வின் எல்லா காலகட்டத்திலும் எனது செயல்கள் எல்லாவற்றிலும் முறையாக குர்ஆன்-நபிவழியில் வாழ்ந்து வருவேன்.

·         எல்லாவித தவறுகளில் இருந்தும் விடுபட்டு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து இம்மை மறுமை வெற்றிக்கு உழைப்பேன்; அதற்காக அல்லாஹ்விடம் பிராத்திப்பேன்.

·         அதிகமதிகமாக நன்மைகளை, தர்மங்களைச் செய்வேன்.

·         மார்க்கப் பணிகளில் எனது உபரி நேரத்தைச் செலவழிப்பேன்.

·         அல்லாஹ்விடம் அதிகமாகப் பாவமன்னிப்புத் தேடுவேன்.

·         தீய பழக்கங்கள் / தீய காரியங்களில் ஈடுபடமாட்டேன்.

·         இறைச் சிந்தனையுடன், எப்போதும் இறையச்சத்துடன் வாழ்வேன்.

·         குர்ஆனைப் பொருள் உணர்ந்து படிப்பேன், அதை எனது வாழ்க்கையில் செயல் படுத்துவேன்.

·         செய்யும் எந்த நற்செயலையும் தொடர்ந்து இடைவிடாமல் செய்ய முயல்வேன்.

போன்ற பல தீர்மானங்களை மனதில் நிறைவேற்றி உறுதியான ஈமானுடனும் இறை நம்பிக்கையுடனும் வாழ்ந்து மரணிக்க சங்கல்பம் செய்து கொண்டு இப்புனித ரமளானை ஆரம்பிக்க வேண்டும். இதுவே நிரந்தரமான, முறையான பயனாக அமையும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்; பிறருக்கும் இதை உணர்த்தும் வகையில் தன் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுத்தி முன்னுதாரணமாகத் திகழ இயன்றவரை முயல வேண்டும். இத்திட சங்கற்பத்தை மனதில் ஏந்தியவர்களாக இவ்வரிய புனித ரமளானை நாம் ஆரம்பிப்போம்
 
வருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது நம் வாழ்வில் இனித் திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து செல்கின்றது. இதைக் குறித்த எவ்விதச் சிந்தனையும் இல்லாமல் இருப்பவர்கள் உண்மையில் மிகப்பெரிய நஷ்டவாளிகளே. இம்மாதத்தின் சிறப்பு என்னவென்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தால் ரமளான் கடந்து செல்லும் பொழுதும் அடுத்த ரமளான் வரும் பொழுதும் எவரும் தம் வாழ்வில் பெற வேண்டிய நல்ல மாற்றங்களைக் குறித்துச் சிந்திக்காமல் எவ்வித உணர்ச்சியுமற்று இருக்க மாட்டார்கள்.

கடந்து வந்த பாதை

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரமளான் மாதம்தான் தற்போது நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கிறதுஒவ்வொரு வருடமும் கடந்துசெல்வதுபோல் இவ்வருடமும் நம்மில் நல்ல மாற்றங்களை அது விளைவிக்காமல் சாதாரணமாகக் கடந்து செல்ல விடுவது அறிவுடைமை ஆகாது.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதலில் ஒரு சுய பரிசோதனை அவசியம்கடந்த வருடமும் இதேபோல் ஒரு ரமளான் ஒவ்வொருவரையும் கடந்து சென்றிருக்கிறதுஅப்பொழுதுஇப்புண்ணிய ரமளானைக் கிடைக்கப் பெற்றவர்களில் எத்தனை பேர் இந்த ரமளானை அடைந்திருக்கின்றனர்நம்மைச் சுற்றி வாழ்ந்தவர்களுள்எத்தனைபேர் இப்போது இவ்வுலகில் நம்மை விட்டுப் பிரிந்து சென்று விட்டனர்இருப்பவர்களுள் சென்ற ரமளானைப் பெற்றதன்பின் அதனைத்தொடர்ந்து வந்த இந்த 11 மாதங்களில் என்னென்ன மாற்றங்களைப் பெற்றிருக்கின்றனர்என்பதனைத் தெரிந்து கொண்டால் மட்டுமே சுயசோதனைமுழுமை அடையும்அதற்காகசென்ற ரமளானிலிருந்து கடந்து வந்த பாதையை நோக்கி ஒரு வேகமான நினைவோட்டம் தேவைப் படுகிறது.
சென்ற ரமளான் கிடைக்கப் பெற்ற ஒவ்வொருவரும்அந்த ரமளான் மூலம் பெற்ற நல்லருள்களால் சென்ற ரமளான் நம்மீது ஏற்படுத்தியதாக்கத்தினால் நமது தொழுகையில்நமது பிராத்தனையில்வணக்க வழிபாடுகளில்வாழ்க்கை நடைமுறையில் என்ன மாறுதல்களைஎந்த நல்லஅமல்களைநல்ல விஷயங்களைத் தொடர்ந்து
முறையாக செயல்படுத்தி பயனடைந்து இருக்கின்றோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஏக இறைவனாகிய அல்லாஹ் ஏவியவற்றையும்விலக்கியவற்றையும் முறையாகக் கடைப்பிடித்து அழகாக விளக்கி வாழ்ந்து காட்டிய இறுதிஇறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளின்படி நம் ஆன்மீக வாழ்க்கை மற்றும் அன்றாட அலுவல்கள்இருந்தனவாஇருக்கின்றனவா?

எவற்றை எல்லாம் சரிபார்த்து சீர்திருத்திக்கொண்டோம்எவற்றை எல்லாம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்எவற்றை எல்லாம்அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக செயல்படுத்தினோம்எவ்வகை அறிவை-செயல்களை மேம்படுத்திக் கொண்டோம்எவற்றை எல்லாம்,அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காகவும் மறுமை வெற்றிக்காகவும் வேண்டி கைவிட்டோம்?

தானும் தன்னைச் சார்ந்த தம் குடும்பத்தினர்அண்டைவீட்டினர்உறவினர்கள்தோழர்கள்தான் அன்றாடம் சந்திக்கக் கூடிய தமது சக ஊழியர்கள்,முதலாளிகள்தன் கீழ் - தன் நிர்வாகத்தில் - தன் வீட்டில் பணி புரியும் ஊழியர்கள்தமது வியாபார வாடிக்கையாளர்கள் என்று பலரும் தமதுசீர்திருந்திய செயல்பாடுகள் மூலம் பெற்ற பயன்கள் யாவைபோன்ற பல கேள்விகளையும் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்





பதிவுகளை ஈமெயிலில் பெற