Android இயங்குதளம் மொபைல்களுக்கு சிறந்த மென்பொருட்களின் தொகுப்பு - பகுதி 1

கம்ப்யூட்டர்களில் இணையதளத்தை பயன்படுத்துவதை விட மொபைல்களில் இணையத்தை பயன்படுத்துவது தான் அதிகம். அதற்கு ஏற்ற வகையில் மொபைல்களும் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு இப்பொழுது விற்பனையில் உள்ளது. இப்பொழுது உள்ள மொபைல்களில் ஆண்டிராய்ட் இயங்குதளம் கொண்டவை தான் இணையத்தள பயன்பாட்டிற்கு சிறந்தவையாக உள்ளது. SONY ERICSSON, HTC, SAMSUNG, MOTOROLA போன்ற மொபைல்கள் அனைத்தும் ANDROID இயங்குதளம் கொண்டவைதான்.



எனக்கு தெரிந்தவகையில் நான் பயன்படுத்திய அனுபவத்தில் சிறந்த மென்பொருட்களை இங்கே தொகுத்து உள்ளேன்.


டவுன்லோட் செய்யும் முறை

பெயரின் மேல் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

உங்களது மொபைல் போனில் எந்த இமெயிலில் கூகிள் ப்ளே உள்ளதோ, அதே இமெயில் கொண்டு கம்ப்யூட்டரில் கூகிள் ப்ளேயில் லாகின் செய்து இன்ஸ்டால் செய்தால் தானாகவே உங்களது மொபைலில் டவுன்லோடாகி இன்ஸ்டால் ஆகிவிடும்.


1. AVG ANTIVIRUS

முற்றிலும் இலவசமான சிறிய அளவு மெமரி கொண்ட சிறந்த ஆண்டிவைரஸ். வைரஸ்களை தடுப்பதிலும் ஏற்கனவே உள்ள வைரஸ்களையும் அழிப்பதில் சிறந்த ஆண்ட்டிவைரஸ். சந்தேகத்திற்குரிய இணையதள முகவரிகளை முன்எச்சரிக்கை கொடுத்து தடுத்து நிறுத்துகிறது.


2. MEMORY BOOSTER

மொபைல்களில் தேவையின்றி இயங்கிகொண்டிருக்கும் மென்பொருட்களை தடுத்து நிறுத்த உதவும் இந்த மென்பொருள் மிக அவசியமானவை. நாம் பயன்படுத்தாமல் தானாகவே இயங்கும் மென்பொருட்கள் நம்முடைய RAM மெமரியை அடைத்து கொண்டு மொபைல்களின் வேகத்தை குறைக்கும். இந்த மென்பொருள் கொண்டு நாம் RAM மெமரியை கிளீன் செய்து மொபைல்களின் வேகத்தை அதிகரிக்கலாம்.

3. APPS 2 SD

மொபைல்களில் நிறுவும் மென்பொருட்கள் போன் மெமரியில் இருந்து மெமரி கார்ட்களுக்கு தானாகவே மாற்ற உதவுவதில் மிக சிறந்த மென்பொருள். தேவையின்றி மொபைல்களில் அமர்ந்து கொள்ளும் பைல்களையும் அகற்றும் சக்தி கொண்டது.



4. 3G WATCHDOG

மொபைல்களில் இணையத்தை பயன்படுத்த SIM CARD அல்லது WiFi தான் உபயோகிப்போம். பெரும்பாலும் SIM தான் பயன்படுத்துவோம். குறிப்பிட்ட MB அல்லது GB தான் என நாம் பயன்படுத்துவோம். ஒரு மாதம் உள்ள ப்லான்களை அளவு தெரியாமல் பத்து நாட்களிலேயே முடித்து விடுவோம். எந்த கவலையும் இல்லாமல் இந்த மென்பொருள் கொண்டு நம்முடைய ப்லான்களை குறிப்பிட்டு விட்டால் போதும், நாள், வாரம் என பயன்படுத்திய அளவை காட்டும். அளவை தாண்டினால் எச்சரிக்கை கொடுக்கும்.



5. OPERA MOBILE BROWSER

ஆண்டிராய்ட் மொபைல்களில் இருக்கும் ப்ரௌசெரில் பாட்டு, வீடியோ போன்றவைகளை டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால், டவுன்லோட் ஆகாது. நேரடியாக ஓபன் தான் ஆகும். ஆனால் ஒபேரா ப்ரௌசெரில் டவுன்லோட் செய்ய வேண்டுமா? ஓபன் செய்ய வேண்டுமா? என்று கேட்கும். நமக்கு வேண்டியதை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.

6. SKYPE

இது பெருமான்மைவருக்கு தெரிந்த மென்பொருள் தான். ஆண்டிராய்ட் இயங்குதள மொபைல்கள் அனைத்திலும் இப்பொழுது SKYPE பயன்படுத்தலாம். முன் கேமரா உள்ள அனைத்து மொபைல்களும் சிறப்பான முறையில் வீடியோ காலிங் செய்து பயன்படுதாலாம்.

7. ASTRO

மொபைல்களில் பைல்கள், போட்டோ, வீடியோ போன்றவைகளை பார்க்கவும், காப்பி, பேஸ்ட், மற்றவர்களுக்கு அனுப்ப என பலவகை பயன்பாடு கொண்ட மிக சிறந்த FILE MANAGER. இதில் TASK KILLER, APPLICATION MANAGER என இன்னும் பிற மென்பொருட்களும் உண்டு.



8. PERFECT APPLICATION LOCK

மொபைல்களில் இருக்கும் மென்பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தாத வகையில் பாஸ்வோர்ட் வைத்து லாக் செய்ய உதவும் சுலபமான மென்பொருள். குறிப்பிட்டு ஒவ்வொரு மென்பொருட்களுக்கும் டிஸ்ப்ளே அளவை குறைக்க, தானாகவே ROTATE ஆவதை தடுக்க என பல சிறப்பம்சங்கள் உண்டு.

9. GALLERY LOCK

இந்த மென்பொருள் மூலம் கேலேரியில் உள்ள போட்டோ, வீடியோகளை வெளியில் தெரியாமல் மறைத்து வைக்கலாம். கம்ப்யூட்டரில் கூட பாக்க முடியாத அளவுக்கு மறைத்து வைக்க முடியும். இந்த மென்பொருள் மூலமாகவே மட்டுமே மறைத்து வைத்ததை பாக்க முடியும்.

10. NEWSHUNT

தமிழ் செய்திதாள்களை படிக்க மிகவும் அருமையான மென்பொருள். ஒன்இந்தியா தமிழ், தினமணி, BBC தமிழ் போன்ற செய்திதாள்களை படிக்க முடியும். மற்ற இந்திய மொழிகளையும் இதில் படிக்க முடியும்.



11. WHATS APP

சாட்டிங் செய்ய மிக பிரபலமான மென்பொருள். உங்கள் நம்பர் மூலம் இதில் இணைந்து கொண்டு நண்பர்களிடம் இலவசமாக சாட்டிங், போட்டோ போன்றவைகளை பகிர்ந்து கொள்ளலாம்.




12. TAMIL WEB BROWSER

தமிழ் இணையதளங்களை காண உதவும் மிகவும் பயனுள்ள மென்பொருள். மென்பொருள் பயன்படுத்துவது எப்படி என்பதை என்னுடைய முந்தைய பதிவில் காண இங்கே கிளிக் செய்யவும்

குறிப்பு : ANDROID 4.0 (ICE CREAM SANDWICH) இயங்குதளத்தில் தமிழ் எழுத்துக்கள் எந்த ப்ரௌசெர்கள் உதவியும் இன்றி காணலாம்.



13. TEMPLE RUN (GAME)

மிக மிக பிரபலமான, அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட மென்பொருள். விளையாட விளையாட தூண்டி கொண்டே இருக்கும் அருமையான விளையாட்டு மென்பொருள். மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் பண்ணுங்க



14. CUT THE ROPE (GAME)

அதிகம் சிந்திந்து திறமையாக விளையாட அருமையான விளையாட்டு மென்பொருள். ஒவ்வொரு கயிறையும் சரியான முறையில் வெட்டி, அனைத்து நட்சத்திரங்களையும் எடுத்து, பந்தை தவளை வாயில் விழவைப்பதே இந்த விளையாட்டின் சிறப்பம்சம்.



15. RACING MOTO (GAME)

டிராபிக் அதிகம் உள்ள சாலைகளில் இடிப்படாமல் எவ்வளவு தூரம் பைக்கை திறமையாக பயணிக்கிறோம் என்பதே இதன் சிறப்பம்சம்.


இதன் தொடர்ச்சி பகுதி - 2









பதிவுகளை ஈமெயிலில் பெற