முல்லை பெரியாறா இல்ல அரசியல் அக்கபோரா..?


முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்காக சில தினங்களுக்குமுன் கேரளத்தைச் சார்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லி நாடாளுமன்றத்தைக் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அதற்கு இரு மடங்கு கொண்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தத்தையே காணோம்.
இந்த வித்தியாசத்தை உணர்ந்த அனைவருக்கும்கேரளாவுக்குத் தமிழகம்தான் அநீதியிழைக்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கும். சிலர், "பாதுகாப்பாக இருக்கும் கூடங்குளத்தை வேண்டாம் என்றும் பாதுகாப்பில்லாமல் இருக்கும் முல்லை பெரியாறு அணையை வேண்டும் என்றும் தமிழகம் சொல்வதாக" நக்கல்கூட அடிக்கின்றனர்.

இவ்விஷயத்தில் கேரள அரசியல்வாதிகளின் ஒருங்கிணைந்ததிட்டமிட்டப் பிரச்சாரமும் தமிழகத்தின் பக்கமிருந்து சரியான வகையில் இவ்விஷயம்தொடர்பான விளக்கம் முன்னெடுத்துச் செல்லப்படாமையும் இவ்விஷயத்தில் கேரளத்தின் பக்கம் நியாயமிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திள்ளது உண்மையே! தமிழக அரசியல்வாதிகள்தங்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் தங்களுக்குள்அடித்துக்கொள்வதற்கே நேரமில்லாமல் இருக்கும்போதுஇது போன்ற மக்கள் பிரச்சனைகளுக்காகஉரிமைக்காக குரல்கொடுக்க அவர்களை எதிர்பார்ப்பது நம் அறியாமையே!
படித்தவர்கள் அதிகமுள்ள கேரள மாநிலம்முல்லை பெரியாறு விஷயத்தில் உண்மையாக நடந்து கொள்கிறதாஇப்பிரச்சனையில் யார் பக்கம்நியாயம் உள்ளதுமுல்லை பெரியார் அணையின் வரலாற்றைச் சற்று உற்று நோக்கினால்அது 115 வருட அணையின் பாதுகாப்பு குறித்த பிரச்சனை அல்ல என்பதும் 780 மெகாவாட் மின்சாரத்தைமுல்லை பெரியாறு அணையினைவிட சுமார் மடங்கு அதிகமான 72 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவு உள்ள இடுக்கி அணையில் இருந்து தயாரிக்க தேவைப்படும் தண்ணீரை எப்படி சேகரிப்பது எனும் பிரச்சனையே பிரதானம் என்பதும் புலப்படும்.
முல்லை பெரியார் அணை கேரளாவில் உள்ள தேவிகுளம் தாலுகாவில் அமைந்திருந்தாலும் அவ்விடமானது 1885ல் அப்போதைய திருவாங்கூர்மகாராஜாவால் தமிழகத்துக்கு 999 வருடத்துக்கு லீஸ் கொடுக்கப்பட்டது. வறட்சி மாவட்டங்களான ராமநாதபுரம்திண்டுக்கல்தேனிமதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் தண்ணீர் தேவையைப் போக்குவதில் இவ்வணையின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். இவ்வணை அமைந்துள்ள தேவிகுளம் மற்றும் பீர்மேடு தாலுகாக்களைத் தமிழகத்துடன் இணைக்க மாநிலங்கள் மறுசீரமைப்பு குழு பரிந்துரை செய்தும் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த காமராஜர், "கேரளாவும் இந்தியாவின் ஒரு பகுதி தானேஎதில் இருந்தால் என்ன" என்று அவற்றை தமிழகத்துடன் இணைக்கும்தீர்மானத்தைச் சட்டசபையில் தாக்கல் செய்ய மறுத்து விட்டது தனிக் கதை.
நெய்வேலியிலிருந்து எடுக்கப்படும் மின்சாரம் கேரளாவுக்குக் கொடுக்கப்பட்டாலும் அது கேரளாவின் மின்சார பற்றாக்குறையை ஈடு செய்யமுடியவில்லை. காயன்குளத்தில் இருக்கும் ஒரே ஒரு தெர்மல் பவர் ஸ்டேஷனைத் தவிர தண்ணீரிலிருந்து பெறப்படும் மின்சாரத்தைத்தான் கேரளா முழுமையாக நம்பியுள்ளது.
வட கிழக்கு மற்றும் தென் மேற்கு பருவ காலங்களில் இடுக்கி அணை முழுவதுமாக நிரம்பி வழிந்தால் கேரளாவின் மின் தேவை சரி செய்யப்படும்.1975 ல் பெரியாறு நதியின்மீது கட்டி முடிக்கப்பட்டு மின் உற்பத்தி துவங்கப்பட்ட இடுக்கி அணை, 36 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அது முழுமையான கொள்ளளவை பெறவில்லை. இதனால்கேரளம் நினைத்த அளவுக்கான மின் உற்பத்தியை அதன்மூலம் பெறமுடியவில்லை.  இந்நிலையில்தான் கேரள அரசின் மின் துறை பொறியாளர்கள் முல்லை பெரியார் அணையின் கொள்ளளவை 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்தால் இடுக்கி பெறும் நீர் வரத்து அதிகரிக்கும் என்று அம்மாநில அரசுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.
அப்போது காங்கிரஸ்முஸ்லீம் லீக்கேரளா காங்கிரஸ்ஆர்.எஸ்.பி போன்றவற்றின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அன்றைய கேரள முதல்வர் வாசுதேவன் நாயர் தன்னுடைய மின் துறை அமைச்சர் கோவிந்தன் நாயர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முல்லை பெரியார் அணையின் அளவைக் குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். முல்லை பெரியார் அணை பலவீனமாக இருப்பதாகவும் அதற்கு பாதிப்பு ஏற்பட்டால் இடுக்கிபத்தனம்திட்டாகோட்டயம்ஆலப்புழாஎர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் 35இலட்சம் மக்கள் உயிருக்கு பாதிப்பு என்றும் பரப்புரை நிகழ்த்தப்பட்டால் அணையின் அளவைக் குறைக்கலாம் என்று அள்ளி தெளித்த கோலமாய் அவசர கதியில் முடிவெடுக்கப்பட்டது.
அரசின் முடிவைக் கேரளாவின் முக்கிய பத்திரிகைகளுக்குச் சொல்லப்பட்டு அவையும் அரசாங்கம் சொன்னதை அப்படியே வெளியிட்டன. இந்த நல்ல காரியத்தை முதன்முதலில் மனோரமா நாளிதழ் 1979 ஆம் ஆண்டு துவக்கி வைத்தது. அன்றிலிருந்து இன்று வரை கேரள ஊடகங்கள் தங்கள் பாணியை மாற்றவில்லை. கேரளாவுக்குச் சாதகமாகஅன்றைய தமிழக முதல்வராக இருந்த கேரளாவைச் சார்ந்தவராக சொல்லப்படும் எம்.ஜி.ஆர் கேரளாவின் கோரிக்கையை ஏற்று அணையின் நீர்மட்ட அளவு 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்க ஒப்பு கொண்டார். அதற்கு பக்கபலமாக இருந்தது அன்றைய தமிழக அரசில் நிரம்பியிருந்த கேரளாவைச் சார்ந்த அதிகாரிகள் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.
தற்போதிருக்கும் அணைக்குப் பதிலாக வேறொரு அணையை கட்ட வேண்டும் என்று கேரளா பிடிவாதத்திற்குச் சொல்லப்படும் காரணங்கள் இரண்டு தான். ஒன்று ஒப்பந்தம் அன்றைய ஆட்சியாளர்களால் போடப்பட்டதை மக்களாட்சி நடத்தும் இன்றைய நாளில் ஏற்று கொள்ள தேவையில்லை. இன்னொன்று இதன் தண்ணீரைத் தமிழகம் அனுபவிக்கும் போது பலவீனமாக உள்ள இவ்வணை உடைந்தால் பாதிக்கப்படுவது கேரள மக்களேஎன்பதேயாகும்.
முதல் வாதம் உண்மையென்றால் 1970 ல் மறு ஆய்வு வரும் போது இத்திட்டத்தை நிராகரித்திருக்கலாம். மாறாக அன்றைய கேரள முதல்வர் அச்சுதமேனன் (காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி செய்த இந்திய கம்யூனிஸ்டு தலைவர்)அதற்கு கொடுக்கப்படும் பணத்தை மட்டும் ஆறு மடங்கு அதிகமாக கேட்டது. அப்போது தமிழகத்தை ஆண்ட திமுகவின் கருணாநிதியும் ஒப்பு கொண்டார்.
கேரளா எழுப்பும் பாதுகாப்பு பிரச்சனை விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனென்றால் பாதிக்கப்படும் மக்கள் எம்மாநிலத்தைஎம்மொழியை,எம்மதத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும் பாதிப்பு மனித குலத்துக்கே.
நவீன இந்தியாவின் கோவில்கள் என நேருவால் வர்ணிக்கப்பட்ட 1948 ல் கட்டப்பட்ட பக்ரா நங்கல் அணையும் 1956ல் கட்டப்பட்ட நாகர்ஜுனா சாகர் அணையும் இன்று வரை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்பாக உள்ளது. ஆந்திர மக்களால் நீர்பாசன தந்தை என போற்றப்படும் சர் ஆர்தர் காட்டன் 1852-ல் கோதாவரி அணையில் 3.62 கிலோ மீட்டர் தூரத்துக்குக் கட்டிய தெளலேஸ்வரம் அணை ஆந்திராவின் கடலோர மாவட்டங்களைத் தென்னிந்தியாவின் நெற்களஞ்சியமாக மாற்றியது. 150 ஆண்டுகளைக் கடந்தும் இவ்வணை எவ்வித பாதுகாப்பு பிரக்சனையும் இல்லாமல்இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தியுள்ளது. இவ்வணையில் ஓடும் நீர் 3500 டிஎம்சி என்பதும் வெறும் 15 டிஎம்சி தண்ணீரே சர்ச்சைக்குள்ளான முல்லை பெரியாறில் ஓடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1904ல் கட்டப்பட்ட பேச்சிப்பாறை அணை நாஞ்சில் நாட்டை வளப்படுத்துவதோடு கூடங்குளத்தில் உள்ளஅணு மின் நிலையங்களின் ரியாக்டர்களைக் குளிர்விக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு அணையின் பாதுகாப்பு என்பது எத்துணை ஆண்டுகள் என்பதில் அல்லமாறாக எவ்வாறு பராமரிக்கபடுகிறது என்பதில் தான் என்பதற்கு அழகான எடுத்துகாட்டுசுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் கரிகால சோழனால் கட்டப்பட்டதாக சொல்லப்படும் திருச்சியில் உள்ள கல்லணை.
தண்ணீரின் மேலுள்ள ஆசைக்காக கேரளத்தவர்களின் வாழ்வோடு விளையாடுவதாக தமிழ்மக்களைச் குறை சொல்வது சரி அல்ல. இன்னும் சொல்லப் போனால்அணையின் அடியை உயர்த்தும் வழக்கில் தமிழகத்துக்கு எதிராகவே அன்றைய சுற்றுசூழல் அமைச்சரும் இன்றைய 2ஜி புகழ் ராசாஅணையின் அளவை உயர்த்துவது சுற்று சூழலைப் பாதிக்கும் என மத்திய அரசின் சார்பில்  மனு செய்தார். இதற்கு பிறகும் உச்சநீதி மன்றம் உத்தராஞ்சலில் உள்ள ரூர்கி பொறியியல் கல்லூரிபுதுடெல்லி ஐஐடியில் உள்ள சிறந்த பொறியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்தே தமிழக அரசு அணையை உயர்த்த உத்தரவிட்டது.
நீர்வளம் என்பது மனிதகுலத்துக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய கொடைகளில் ஒன்று. அதை மானுடத்திற்குப் பயன்படவிடாமல் தடுக்க மனிதஉயிர்களுக்கு ஆபத்து என்று மனிதர்களின் உணர்வுகளை அரசியலாக்குவது சரியான செயலல்ல. வெறும் 15 டிஎம்சி கொள்ளளவு உள்ள முல்லை பெரியாறு அணையிலிருந்து வரும் டிஎம்சி தண்ணீர் (மீதமுள்ளவை அதிலேயே தங்கி இருக்கும்) கொச்சினையே துடைத்தெறிந்து விடும் என்று பயமுறுத்துவது அதிலும் பக்கத்திலேயே 555 அடி உயரமுள்ள இடுக்கி அணையை வைத்து கொண்டு சொல்வது நேர்மையான செயலல்ல.
மேலும் முல்லை பெரியார் அணை கடல் மட்டத்திலிருந்து 2889 அடி உள்ள நிலையில்அது உடைந்தால் மூழ்கி போய் விடக்கூடும் என சொல்லப்படுகிற குமுளி கடல்மட்டத்திலிருந்து 3100 அடியும் வண்டி பெரியார் 3350 அடியும் வெலப்பாறை 4850 அடியும் உள்ளது. எனவே முல்லை பெரியார் அணை உடைந்தால் பாதிப்பு என்பது விஷமத்தனமான கூச்சலாகவே படுகிறது.
 முல்லை பெரியாறு விஷயத்தில் கேரள அரசு ஆரம்பத்திலிருந்தே பிடிவாதமாக தம் நிலைப்பாட்டிலேயே இருப்பதும் சரியான செயலல்ல. ஒருமுறைக்கு இரு முறை உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு கூறிய நிலையில், 136 அடியிலிருந்து 152 அடியாக அணை மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் கூறிய இரண்டாவது தீர்ப்பினைத் தொடர்ந்து உடனடியாக கேரள அரசு 2006 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக அணை மட்டத்தை உயர்த்தக்கூடாது என சட்டசபையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது.
நீதிமன்ற அவமதிப்பைக் கேரள அரசு செய்தபோதும்அதன் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு தம் தீர்ப்புக்கே மாற்றமாக மீண்டும் முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியது. இந்தக் குழுவின் தீர்ப்பு நாளை(டிச-5) வர இருக்கும் நிலையில்அத்தீர்ப்பும் தமக்கு எதிராக அமைந்துவிடும் என்ற அச்ச உணர்வின் காரணத்தாலேயே கேரள அரசியல் கட்சிகள் மக்கள் உணர்வுகளைத்தூண்டிவிட்டுக் குளிர்காய முனைகின்றன. இதில் முக்கிய தேசிய கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் ஒரே நிலைப்பாட்டையே எடுத்துள்ளது அதிர்ச்சியளிக்க வைக்கிறது. மறியல்நாடாளுமன்ற ஆர்ப்பாட்டம்உண்ணாவிரதம்கடையடைப்பு என காங்கிரஸும் பாஜகவும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை என்ற வகையில் கேரளாவில் அரசியல் விளையாட்டு விளையாடும்போதுதமிழகத்தில் இக்கட்சிகள் இருக்கின்ற இடமே தெரியவில்லை!
இதில் ஓரளவு மனதுக்கு ஆறுதலான விஷயம்தமிழக பொதுப்பணித்துறையின் மூத்த பொறியாளர்களால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட"முல்லை பெரியாறு அணை" குறித்த விவரணப்படமேஇதுகூட எத்தனை பேர்களைச் சென்றடைந்தது என்பது தெரியவில்லை.
இதற்கிடையில்இவ்விஷயம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளில் கேரள அரசின் நிலைப்பாட்டை அறிவிக்கும்போது,கேரள அட்டர்னி ஜெனரல், "முல்லை பெரியாறு அணை தகர்ந்தால் பொதுமக்களுக்குப் பிரச்சனையேதும் ஏற்படாது" என்று உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். இதனைப் பொறுக்க முடியாத கேரள அரசுஅவர்மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இத்தனை நடந்த பிறகும் தமிழக அரசியல்வாதிகளின் பக்கமிருந்து எந்தச் சலனத்தையும் பெரிய அளவில் காணோம். கேரள அரசியல்வாதிகளின்நாலாந்தர அரசியல் விளையாட்டுக்கு மயங்கிய நிலையில் அமையாமல் குறைந்தபட்சம்நியாயம் ஜெயிக்கும் வகையில் நாளைய தீர்ப்பு அமைய வேண்டுமெனவாவது வேண்டுவோம்No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற