Android மொபைல்களில் தமிழ் இணையதளங்களை எப்படி பார்ப்பது?

யாராவது இணையத்தளம் பயன்படுத்தாமல் இருக்கீர்களா? என்று கேட்கும் அளவிற்கு இப்பொழுது இணையத்தளம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. அதுவும் தமிழில் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. தமிழில் கிடைக்காதது எதுவும் இல்லை என்கிற அளவுக்கு உள்ளது.

கம்ப்யூட்டரில் இணையதளத்தை பயன்படுத்துவதை விட மொபைலில் பயன்படுத்துபவர்கள் தான் அதிகம். மொபைலில் தமிழ் எழுத்துக்கள் படிப்பதற்கு சில சிரம்பங்களும் உண்டு. மொபைலில் தமிழ் எழுத்துக்களை எப்படி பார்ப்பது, படிப்பது என்பதை இப்போ பாப்போம்.

Nokia மொபைல்களில் எப்படி தமிழ் இணையதளங்களை பார்ப்பது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆனால் Android மொபைல்களில் தமிழ் இணையதளங்களை பார்ப்பது எப்படி என்று நாம் இதில் பார்க்க போகிறோம்.

நான் பல முறை முயற்சித்தும் என்னால் பார்க்க முடியவில்லை. கடைசியாக இப்பொழுது பல போராட்டத்திற்கு பின்பு எப்படி என்று அறிந்துகொண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் Market க்கு செல்லுங்கள். பின்பு கீழே உள்ள படத்தில் உள்ளது போல் SETT TAMIL என டைப் செய்து கொள்ளுங்கள்.


பின்பு SETT Sinhala/Tamil web browser என இருக்கும் லிங்கை கிளிக் செய்து Download செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 


இந்த Browser ல் எல்லா தமிழ் இணையதளமும் நாம் பார்க்கலாம். Facebook தளத்தில் கூட நாம் தமிழில் உள்ளதை பார்க்கலாம். 



நாம் தமிழில் பார்க்க மட்டும் தான் முடியுமா எழுத முடியாதா? ஏன் முடியாது முடியும்.

Market க்கு சென்று Panini Tamil என டைப் செய்து கொள்ளுங்கள். டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 





பின்பு Settings சென்று Language & Keyboard Settings சென்று கொள்ளுங்கள். அதில் Panini keypad என்று இருக்கும் இடத்தில் டிக் செய்து கொள்ளுங்கள். 


ஏற்கனவே இன்ஸ்டால் செய்துள்ள Browser  ஐ திறந்து கொள்ளுங்கள். எங்கே டைப் பண்ண வேண்டுமோ அங்கே அழுத்தி பிடித்து கொள்ளுங்கள் Input Method  என வரும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள். 



அதில் Panini என வரும் அதை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இப்போ தமிழில் டைப் பண்ணுங்க என்ஜாய் பண்ணுங்க. 


Search பண்ற இடத்தில் தமிழில் தெரியாமல் இருக்கும். ஆனால் நாம் டைப் பண்ண பிறகு எழுத்துக்களின் மேல் நாம் என்ன டைப் பண்ணோம் என்று தெரியும். 

Search கொடுத்த பிறகு கீழே உள்ள படத்தை போல் தமிழில் அணைத்து இணையதளத்தையும் பார்க்கலாம்.











பதிவுகளை ஈமெயிலில் பெற