உலக மக்கள் தொகையில் நீங்கள் எத்தனையாவது ஆள் என்று பார்க்க வேண்டுமா?உலக மக்கள் தொகை வெற்றிகரமாக 700 கோடியை எட்டி விட்டது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க  மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா.,வின் மக்கள் தொகை நிதியமைப்பு, ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. 
அந்த இணையதளத்தில் நீங்கள் நுழைந்து, உங்கள் வயது, பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், தற்போதைய முகவரி போன்ற தகவல்களை கொடுத்தால் அடுத்த வினாடியில் உலகில் நீங்கள் எத்தனைவது நபர் என்ற எண்ணிக்கை கிடைக்கும். ஐ.நா.,வின் மக்கள் தொகை பிரிவு, மக்கள் தொகை நிதியமைப்பு, க்ளோபல் பூட்பிரின்ட் உள்ளிட்ட ஐ,நா.,வின் பிற அமைப்புகள் வழங்கும் தரவுகளின் அடிப்படையில் இந்த நம்பர் உங்களுக்கு வழங்கப்படும்.

முதலில் கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆகும் அதில் தற்போதைய மக்கள் தொகை எண் இருக்கும். (அதை கவனியுங்கள் ஒவ்வொரு நொடிக்கும் 5 முதல் 10 அதிகமாகி கொண்டே இருக்கும். அவ்வளவு வேகத்தில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டு உள்ளது) அதில் உள்ள Get Started என்ற பட்டனை அழுத்தவும்.


Get Started என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் இன்று விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யவும். 


விவரங்களை பூர்த்தி செய்த பிறகு கீழே உள்ள Proceed என்ற பட்டனை அழுத்தினால் அடுத்த வினாடி உங்களுக்கு முன்னாடி உலகில் எத்தனை பேர் பிறந்து உள்ளார்கள் என காட்டும். 


மற்றும் உங்களுக்கு முன்னர் பிறந்தவர்களின் எண்ணிக்கை கண்டங்களின் அடிப்படையில் பிரித்து காட்டும். 

உங்களுக்கு முன் எத்தனை பேர் பிறந்தார்கள் என்று பாருங்கள். நீங்கள் எத்தனையாவது ஆளாக இந்த உலகத்திற்கு வந்தீர்கள் என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆனால் இந்த உலகத்தை விட்டு எப்பொழுது போவோம் என்பதை யாராலும் சொல்ல முடியாது. நம்மை படைத்த இறைவனால் மட்டுமே அதை தீர்மானிக்க முடியும். 

அதனால் வாழும் காலம் வரை இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். 

இந்த தளத்திற்கு செல்ல -www.7billionandme.org 

குறிப்பு : உலக மக்கள் தொகை, எத்தனை பேர் இறக்கிறார்கள், பிறக்கிறார்கள் என்பதை அறிய இந்த தளத்திலும் விபரம் உண்டு. 1 comment:

  1. இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.


    **** ஆதாமின்டே மகன் அபு *****

    ReplyDelete

பதிவுகளை ஈமெயிலில் பெற