நோன்பு - ஹதீஸ் (பாகம் - 1)


“ மக்கள் பிறையை பார்த்தார்கள்நபி(ஸல்அவர்களிடம் நானும் பிறையை பார்த்ததாக செய்தி கொடுத்தேன்
.(அதனால்நபி(ஸல்அவர்கள் நோன்பு நோற்றார்கள்மக்களையும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள்,
நூல்: அபுதாவூத்

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு நாட்டுபுறத்தார் வந்து, “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் பிறையை பார்த்துவிட்டேன்”
என்று கூறினார். அதற்கு, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைதவிர வேறும் யாரும் இல்லை என நீ சாட்சி கூறுகிறாயா?”
என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர் “ஆம்” என்றார். (பின்னர்) “நிச்சயமாக முஹம்மத் அல்லாஹ்வுடைய தூதர்
என்று நீ சாட்சி கூறுகிறாயா?” என நபி(ஸல்) கேட்டார்கள், அதற்கவர் “ஆம்” என்றார். (பின்னர்) “பிலாலே,
நாளை நோன்பு நோற்குமாறு மக்களுக்கு அறிவுப்பு செய்யுங்கள்!” என்று நபி(ஸல்) கூறினார்கள்”
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்கள் : அஹ்மத், அபுதாவூத், நஸயி, திர்மிதி, இப்னுமாஜா

நோன்பு – சில ஹதீஸ்கள் (நிய்யத்ஸஹர் உணவு)


ஃபஜ்ர்
 தொழுகைக்கு முன்னர் எவர் நோன்பிற்கான நிய்யத்(எண்ணம்கொள்ளவிள்ளையோ அவருக்கு நோன்பு இல்லை” என்று நபி(ஸல்அவர்கள்கூறினார்கள்
அறிவிப்பவர்ஹஃப்ஸா(ரலிஅவர்கள் - நூல்அஹ்மத்அபுதாவூத்நஸயிதிர்மிதி,

ஸஹர் உணவு உண்ணுங்கள்ஏனனில் அதில் பரகத் உள்ளது” என்று நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்அனஸ் இப்னு மாலிக்(ரலிஅவர்கள் - நூல் : திர்மிதி


“(சூரியன் மறைந்தவுடன்) நோன்பு திறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்” என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு சஅத்(ரலி) அவர்கள் -  நூல் : புஹாரி, முஸ்லிம்


“(சூரியன் மறைந்தவுடன் விரைவாக) நோன்பை துறப்பவனே என்னுடைய அடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவன் ஆவான்”என்று அல்லாஹ் கூறுகின்றான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் - நூல் : திர்மிதி


:உங்களில் எவரேனும் நோன்பை திறந்தால்அவர் பேரிச்சம் பழத்தை கொண்டு நோன்பு திறக்கட்டும்அது அவருக்கு கிடைக்கவில்லைஎனில் தண்ணீரை கொண்டு நோன்பு திறக்கட்டும் ஏனெனில் அது தூய்மையானது” என்று நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்சுலைமான் இப்னு ஆமிர் அள்ளப்பிய்யு (ரலிஅவர்கள்
நூல் : அஹ்மத்அபுதாவூத்நஸயிதிர்மிதிஇப்னுமாஜா


ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்” என்று கூறியதற்கு, “எது உன்னை அழித்தது?” என்று நபி(ஸல்) அவர்கள் கேகேட்டர்கள். “ரமலானில் என் மனைவிஉடன் உறவு கொண்டுவிட்டேன் என்று கூறினார். “உன்னால் ஒரு அடிமையை விடுதலை செய்ய இயலுமா?” நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர்,”இயலாது” என்றார். “அப்படியானால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க இயலுமா?” அவர், “இயலாது” என்றார். “அப்படியானால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க இயலுமா?” என்று கேட்டார்கள், அதற்கும் அவர் இயலாது என்று கூறினார். பின்னர்(அங்கேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் ஒரு சாக்கு கொடுக்கப்பட்டது அதில் பேரிச்சம் பழங்கள் இருந்தன.(அதை அவரிடம் வழங்கி) “இதை தர்மம் செய்வீராக” என்றனர். அதற்கவர், :எங்களைவிட ஏழைகளுக்கா? இந்த மதினாவுக்குள் எங்களைவிட ஏழைகள் எவரும் இல்லையே?” என்றார். அதை கேட்ட நபி(ஸல்) அவர்கள் தமது கடைவாய் பற்கள் தெரியும் அளவிற்கு சிரித்தார்கள்.”நீர் சென்று உமது குடும்பத்தாருக்கு இதை கொடுப்பீராக!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் - நூல் : அஹ்மத், புஹாரி, முஸ்லிம், அபுதாவூத், நஸயி, திர்மிதி, இப்னுமாஜா“நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியை) முத்தமிடுவார்கள்,மேலும், நோன்பு நோற்ற நிலையில் கட்டியணைப்பார்கள், ஆனால், அவர்கள் தம் இச்சையை கட்டுபடுத்தி கொள்ளும் சக்தியுடையவராக இருந்தார்கள்”
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள் - நூல் : புஹாரி, முஸ்லிம், 

ஹதீஸ் : 689

“எவர் நோன்புபிருக்கும் நிலையில் மறதியாக உண்ணுகிறாரோ, பருகிறாரோ அவர் தம்முடைய நோன்பை பூர்த்தியாக்கி கொள்ளட்டும்.(நோன்பை முறித்துவிட வேண்டாம்) – ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணசெய்தான், பருகச்செய்தான்” என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்
அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி) அவர்கள் - நூல் : புஹாரி, முஸ்லிம்,

 ஹதீஸ் : 690

“எவர் ரமலான் மாதத்தில், மறதியாக நோன்பை முறித்து விட்டாரோ, அவர் மீது களாவும் இல்லை, பரிகாரமும் இல்லை” என்று இந்த ஹதீஸ் ஹாகிமில் இடம் பெற்றுள்ளது – மேலும் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது

 ஹதீஸ் : 691

“எவருக்கு (நோன்பு நோற்ற நிலையில்) அவரையும் மீறி வாந்தி வந்ததோ, அவர் மீது(நோன்பு) களா இல்லை. இன்னும் எவர் (நோன்பு நோற்ற நிலையில்) வேண்டுமென்றே வாந்தி எடுத்தாரோ, அவர் மீது (நோன்பு) களாவாகும்”என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்
அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி) அவர்கள் - நூல் : அஹ்மத், அபுதாவூத், நஸயி, திர்மிதி, இப்னுமாஜா
(ஹதீஸ் தரம் : இமாம் அஹ்மத்(ரஹ்) இதை குறையுடைய ஹதீஸ் என்று கூறுகிறார். இமாம் தாரகுத்னி இதை பலமானது என்று கூறுகிறார்)

ஹதீஸ் : 694

“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் பயணத்திலும் நோன்பு நோற்கும் சக்தி பெற்றவனாக இருக்கிறேன், அதனால் என் மீது குற்றமா?” என்று நான் கேட்டதற்கு, :இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள சலுகையாகும். எவர் அதை எடுத்து கொண்டாரோ அவர் சிறப்படைந்தார். இன்னும் எவர் நோன்பு நோற்க விரும்பினாரோ அவர்மீது குற்றமில்லை” என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்
அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ர் அல் அஸ்லமீ (ரலி) அவர்கள் - நூல் : முஸ்லிம்

 ஹதீஸ் : 695

“(நோன்பு நோற்க இயலாத) முதிய வயோதிகர்களுக்கு ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக, ஓர் ஏழைக்கு ஸஹர் மற்றும் இப்தார் உணவு கொடுக்கவேண்டும். அவர்கள் அந்த நோன்புகளை நோற்க வேண்டியதில்லை” என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் - நூல் : தாரகுத்னி, ஹாகிம்

ஹதீஸ் : 683

“எவர் பொய் சொல்வதையும், அதன்படி செயல் படுவதையும் அறிவீனமாக நடப்பதையும் விட்டுவிட வில்லையோ, அவர் உண்ணுவதையும், பருகுவதையும் அல்லாஹ்விற்கு தேவை இல்லை” என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்
அறிவிப்பவர்அபுஹுரைரா (ரலிஅவர்கள் - நூல் : புஹாரி, அபுதாவூத்

ஹதீஸ் : 716
இறைநம்பிக்கையோடும், நன்மையைநாடியும், எவர் ரமளானில் (இரவுகளில்) நின்று வணங்குகிறாரோ அவருடைய கடந்த காலப் பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிடும்” என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்
அறிவிப்பவர்அபுஹுரைரா (ரலிஅவர்கள் - நூல் : புஹாரி, முஸ்லிம்
நோன்பு – சில ஹதீஸ்கள் (பொறுப்பாளரின் கடமை)

ஹதீஸ் : 698

“தன் மீது நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் எவர் இறந்து விடுகிறாரோ, அவருடைய நோன்பை அவருடைய பொறுப்பாளர் நோற்பார்” என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்
அறிவிப்பவர்ஆயிஷா(ரலிஅவர்கள் - நூல் : புஹாரி, முஸ்லிம்No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற