அஸ்ஸலாமு அலைக்கும்...
நமதூரில் வெள்ளிகிழமை (01/07/11) ஜும்மா தொழுகைக்கு பின் நடைபெற்ற ஜமாத் கூட்டத்தில் புதியதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதற்கு முன்பு 5 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள். ஆனால் இம்முறை 3 நிர்வாகிகளே தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர்.
இதற்கு முன் பொறுப்பில் இருந்த இருவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதியதாக ஒருவர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.
முத்தவல்லி தலைவராக அண்ணன் முஸ்தபா (புதுமனை தெரு) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே துணை தலைவராக இருந்துள்ளார்.
முத்தவல்லி துணை தலைவராக அண்ணன் ஜகபர் ஹுசைன் (கீழ தெரு) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே துணை செயலாளராக இருந்துள்ளார்.
முத்தவல்லி துணை தலைவராக புதிதாக அண்ணன் பதுருதீன் (புதுமனை தெரு) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முத்தவல்லி தலைவர் மற்றும் காசாளர்
முஹம்மது முஸ்தபா
முத்தவல்லி துணை தலைவர்
ஜகபர் ஹுசைன்
முத்தவல்லி துணை தலைவர்
முஹம்மது பதுருதீன்
மென்மேலும் ஊர் வளர்ச்சி அடையவும், மார்க்க வழியில் சிறப்பாக பணியாற்றவும் வல்ல இறைவனிடம் துஆ செய்வோம்.இன்ஷா அல்லாஹ்.

Tweet
No comments:
Post a Comment