தமிழ் உட்பட இந்தியர்கள் பயன்பெறும் கூகுளின் புதிய வசதி


கூகுள் இணையத்தின் ஜாம்பவான் அடிக்கடி பல்வேறு வசதிகளை வெளியிட்டு வாசகர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி அளிக்கும். அந்த வகையில் தமிழர்கள் உட்பட மேலும் ஐந்து மொழிகளை Google Translate பகுதியில் சேர்த்து  பெரும்பாலான இந்தியர்களுக்கு பயனளித்துள்ளது. இதற்க்கு முன்னர் இந்த Google Translate பகுதியில் இந்திய அளவில் ஹிந்தி மொழி மட்டுமே இருந்தது. இப்பொழுது அதிகரித்து வரும் வாசகர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தமிழ்,தெலுங்கு,கன்னடம்,பெங்காலி மற்றும் குஜராத்தி போன்ற ஐந்து மொழிகளுக்கு கூகுளின் இந்த translate வசதி புகுத்தப்பட்டுள்ளது.


கூகுள் மொழிமாற்றம் (Google Translate) என்றால் என்ன: 

பெயரிலேயே இதன் அர்த்தம் தெரிந்திருக்கும் ஆம் இணையத்தில் பல்வேறு மொழிகளில் இணைய தளங்கள் உள்ளன. இந்த தளங்களை படிக்க நாம் அந்த மொழியை தெரிந்திருக்க வேண்டியதில்லை Google Translate உதவியுடன் நமக்கு தெரிந்த மொழியில் மாற்றம் செய்து படித்து கொள்ளலாம்.

இந்தியர்கள் எவ்வாறு பயன்பெறுவார்கள்:

இதற்க்கு முன்னர் கூகுள் மொழிமாற்ற வசதியில் இந்திய அளவில் ஹிந்தி மொழி மட்டுமே இருந்தது. இந்தியாவில் பெரும்பாலானவர்கள் ஹிந்தி பேசினாலும் படிக்க தெரிந்தவர்கள் குறைவே. ஆதலால் நமக்கு புரியாத ஆங்கிலத்தில் மொழியை மாற்றி தப்பும் தவறுமாக படித்து தெரிந்து கொள்வோம். இனி அந்த வேதனை நமக்கில்லை நம்முடைய தாய்மொழியான தமிழிலே மொழியை மாற்றி நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் இது போல மொழியை மாற்றும் பொழுது வாக்கியங்கள் சரியாக அமையாது ஆனால் அதனுடைய உள்கருத்தை நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடியும்.

இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது :

  • இந்த சேவையை பயன்படுத்த கூகுளின் Google Translate இந்த தளத்திற்கு சென்று அங்கு உள்ள காலியான கட்டத்தில் நீங்கள் மொழிமாற்றம் செய்யவேண்டிய வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளவும். 
  • பின்பு TO பகுதியில் நீங்கள் மொழிமாற்றம் செய்யவேண்டிய மொழியை தேர்வு செய்தால் போதும் அடுத்த வினாடியே நீங்கள் தேர்வு செய்த மொழியில் மொழிமாற்றம் செய்யப்படும். 

  • இது மட்டுமல்லாது நீங்கள் மாற்றம் செய்யப்பட எழுத்துக்களின் மீது உங்கள் கர்சரை வைத்தால் அந்த எழுத்துக்கான ஒரிஜினல் வார்த்தையும் காண்பிக்கப்படும். 
  • Hightlight செய்த வார்த்தைகளை பற்றி விரிவாக அங்கிருந்தே நேரடியாக கூகுளில் தேடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. 
  • முழு இணையதளத்தையும் மொழிமாற்றம் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் அந்த மற்ற தளங்களுக்கு சென்று அங்கு உள்ள translate பாரில் நீங்கள் மொழிமாற்றம் செய்ய வேண்டிய மொழியை தேர்வு செய்து Translate கொடுத்தால் முழு தளமும் தமிழில் மாறிவிடும்.


எத்தனை மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாம்:
உலகளவில் சுமார் 63 மொழிகளில் தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கும் மற்ற மொழிகளில் இருந்து தமிழுக்கும் மாற்றம் செய்து கொள்ளலாம். கீழே நீங்கள் மொழிமாற்றம் செய்யும் பட்டியல் உள்ளது இதில் உள்ள மொழிகளில் மொழிமாற்றம் செய்து கொள்ளலாம்.


இந்த பட்டியலில் உள்ள மொழிகளில் மொழிமாற்றம் செய்து கொள்ளலாம். 

No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற