இறப்பு செய்தி (16/06/11)
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).

நமக்கு தொழுகை வைக்கும் முன் நாம் தொழுது கொள்வோம்..

நமதூர் பள்ளிவாசல் தெரு (சுருட்டு கட்டை வீடு) முஹம்மது யாசின் அவர்கள் 

(16/06/11) மாலை 5 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்கள்.
(17/06/11) மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
 

 

கட்டிப்பிடித்தச்
சொந்தங்கள் எல்லாம்;
உனை எட்டிவைத்து;
தொட்டுப்பார்த்து
அழுதுச் செல்லும்!

விலையுயர்ந்த
ஆடைகள்;
விலைப்போகாமல்;
வெள்ளை ஆடை
உனைக் கவ்விப்பிடிக்கும்!

ஆர்பரிக்கும்
அழுகைச் சத்தத்துடன்;
உறங்க உன்
இடத்திற்குச் செல்ல;
வழியனுப்பச் சொந்தங்கள்
கூட்டமாய்!

முதலீடுச் செய்த
நன்மைகளும்
தீமைகளும்;
மண்ணறையில்
காத்துக்கிடக்க!

பயணம்
முடியுமுன்னே;
பதிவுச்செய் உன்
இருப்பிடத்தை;
கண்ணீரைக் காணாத
உன் கண்களைக்
கசக்கி அழு பாவத்திற்காக!

No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற