கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் கோலன்களை எப்படி மறைப்பது?


ம்ப்யூட்டரில் பைலை மறைப்பது, போல்டர்களை மறைப்பதுதிரும்ப கொண்டு வருவது போன்ற நடைமுறை செயல்களை அன்றாடம்செய்து பார்த்திருப்பீர்கள்அதற்கும் மேலாக மைகம்ப்யூட்டரில் உள்ள ஹார்டுடிஸ்க் டிரைவ் கோலன்களை அதாவது C: (or) D: (or) E:... இப்படி கோலன்கள்இருக்குமேயானால் அவற்றில் ஏதாவது ஒரு கோலனனை எங்ஙனம்மறைப்பது என்றும்மேலும் CD-Drive Colon மற்றும் Floppy Drive Colon இடம்பெற்றிருந்தால் அவற்றை எப்படி மறைப்பது என்றும் அதுவும் மற்ற மென்பொருள் துணையில்லாமால் நம் கம்ப்யூட்டரில் புகுத்தியுள்ள ஓஎஸ் மூலம் எளிய வழியில் மறைப்பது எப்படி என்றும் பார்க்கலாம்.

முதலில் Start -> Run - ல் diskpart என்று தட்டச்சு செய்து ஓகே கொடுக்கவும்.
படம்-1 யை பார்க்கவும்.

படம்-1

பின்னர் அங்கு தோற்றமளிக்கின்ற CUI மோடில் (அதாவது Dos WIndow)
DISKPART> என்று ஒரு விண்டோ காட்சியளிக்கும் அங்கு list Volumeஎன்றுதட்டச்சு செய்யவும்.படம்2-யை பார்க்கவும்.படம்-2

தட்டச்சு செய்து என்டர் தட்டியவுடன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்டுடிஸ்க் டிரைவின் கோலன்களின் வரிசை காண்பிக்கப்படும்அந்தவரிசைகைகளில் C, D, E,F ... முறையே Volume 0,1,2 .. என்று அட்டவணைபோல் காட்சியளிக்கும்.படம்3-யை பார்க்கவும்படம்-3அவற்றில் எந்த கோலனை மறைக்க வேண்டுமோ அவற்றின் பெயரைஅதாவது Volume நம்பரை 0 அல்லது 1 அல்லது 2 ... என்று கொடுக்கவும்.சான்றாக E: கோலன் என்றால் நீங்கள் அந்த DISK - PART >ல் select volume 3என்று கொடுக்கவும்படம் ௪-யை பார்க்கவும்.


படம்-4


அதன் பின் என்டர் கி தட்டியவுடன் DISKPART> கோலன் வந்து நிற்கும்அங்குremove E என்று செய்வதற்கு பதில் "remove" (இரட்டை குறிக்குள்என்றுதட்டச்சு செய்து என்டர் கொடுக்கவும். படம் 5-யை பார்க்கவும்.
படம்-5


மைகம்ப்யூட்டரில் E:கோலன் மறைக்கப்பட்டிருக்கும்.

Remove செய்தவுடன் ஒரு சில ஆப்பரேட்டிங் (விண்டோஸ் விஸ்ட்டா )சிஸ்டங்ககள் Reboot ஆகும்சிஸ்டம் ரீபூட் (Reboot ) ஆகாவிட்டால் சரி நீங்கள்சிஸ்டத்தை ரீபூட் செய்து விடவும்.


நீங்கள் மறைத்துவைத்துள்ள E: கோலன் List volume ல் தெரியாதுஆனால்அந்த வால்யும் வம்பருக்கு முன்பு ஒரு ஸ்டார் குறி பூட்டப்பட்டிருக்கும்.அவற்றை பார்த்தே நாம் தெரிந்து கொள்ளலாம். E: கோலன்மறைக்கப்பட்டிருக்கின்றது என்றுஇப்போது மறைத்து வைத்துள்ளகோலனை எவ்வாறு திரும்ப கொண்டு வருவது அனைவருக்கும் புதிராகஇருக்கலாம்இது மிகவும் எளிது.

முதலில் Start> Run> diskpart, பிறகு List volume என்று தட்டச்சு செய்யவும்.இனிமேல்தான் கவனம் தேவை . "remove" என்று தட்டச்சு செய்வதற்கு பதில்"assign" என்று கொடுக்க வேண்டும்இபோதுதான் E: கோலன்மைகம்ப்யூட்டரில் காட்சியளிக்கும்மறைக்கப்பட்ட கோலனை வந்தவழியிலும் எடுக்க இயலாதுஇப்படி மறைப்பதனால் அதில் சேமித்துவைத்துள்ள தகவல்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது.

படம்-6

இதேபோல் தான் சிடி டிரைவ் கோலன் மற்றும் ஃப்ளாப்பி டிரைவ்கோலனுக்கும் மேற்சொன்ன வழிமுறையை பின்பற்றலாம்மறைத்தகோலனை எடுக்க ஒரு சிலர் டாஸ் ப்ராம்ப்டுக்கு போய் எடுக்க முயல்வர்ஒருசிலர் Start> Run - ல் E: கோலன் என்று தட்டச்சு செய்து ஓகே கொடுப்பர்.


படம்-7


படம்-8


அவர்களுக்கு Error Message தான் காட்சியளிக்கும். Diskpart கட்டளைPendrive-க்கு பொருந்தாது இந்த நுட்பத்தை விண்டோஸ் எக்ஸ்பீ மற்றும்விஸ்ட்டாவில் பயன்படுத்தி பயன் பெறலாம்.
No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற