போட்டோக்களை அழகுபடுத்த Ashampoo Photo Commander 8 - லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்கம் செய்ய


போட்டோக்களை அழகுப்படுத்தவும், மாற்று வேலைகளை செய்யவும் இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. அதுவும் இலவசமாக நிறைய மென்பொருள்கள் கிடைக்கிறன. இவற்றில் வசதிகள் யாவும் குறைவு. போட்டோக்களை எடிட் செய்ய புகழ்பெற்ற மென்பொருள் போட்டோசாப் ஆகும். இந்த மென்பொருளை தான் தற்போது அதிக இடங்களில் பயன்படுத்தி வருகிறனர். போட்டோக்களை எடிட் செய்ய உதவும் மற்றொரு மென்பொருள்தான் இந்த Ashampoo Photo Commander 8 ஆகும். இந்த மென்பொருளுடைய சந்தை மதிப்பு £29.99 ஆகும். இதனை தற்போது இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.



சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவவும். கடைசியாக நிறுவி முடிக்கும் போது லைசன்ஸ் கீயை பெறுவதற்கான விண்டோ தோன்றும் அதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். பின் உங்களுடைய மின்னஞ்சலுக்கு ஒரு லிங் அனுப்பபடும் அதில் சுய விவரங்களை உள்ளிடவும். இறுதியாக உங்களுக்கான லைசன்ஸ் கீ கிடைக்கும். APHCFF-7770EC-3FD08A மென்பொருளுக்கான இலவச லைசன்ஸ் கீ இதுபோன்ற அமைப்பில் கிடைக்கும். அந்த கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். இதில் கீயானது முழுமையாக தெரியாது மறைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் அளவில் பெரியதாகும் 99.1 MB ஆகும்.


இந்த மென்பொருளை கணினியில் நிறுவிய பிறகு இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். இதில் தோன்றும் ஆப்ஷனை பயன்படுத்தி போட்டோக்களை எடிட் செய்து கொள்ள முடியும். படங்களை எடிட் செய்யவும், அளவினை மாற்றியமைக்கவும், கணினி திரையை படம் பிடிக்கவும். புதியதாக ஒரு படத்தை உருவாக்கவும், சீடி/டிவிடி க்களில் படங்களை பதிவேற்றவும். படங்களை slideshow வாக உருவாக்கவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது. மேலும் பல்வேறு வசதிகள் இந்த மென்பொருளில் உள்ளது. பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் பதிலை கூறவும். இந்த மென்பொருள் பயனளிக்க கூடியது ஆகும்.

மென்பொருளை பதிவிறக்கம் செய்ய சுட்டி







No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற