மொபைல் போனில் இனி மொபைல் பேங்கிங்


இந்தியாவில் உள்ள வங்கிகள் தங்களின் சேவைகளை மொபைல் மூலமாக அளிப்பதில், அதிலும் குறிப்பாக எஸ் எம் எஸ் (குறுஞ்செய்தி) மூலம் கொடுப்பதில் முனைப்புடன் செயல்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் பணப்பரிமாற்ற விபரங்கள் & அக்கவுண்ட் விபரங்களை அறிதல் போன்றவற்றுக்காக வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இச்சேவையைப் பெறுவதற்கான சேவைக்கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடும். சில வங்கிகள் இச்சேவையை இலவசமாகவும், சில வங்கிகள் வருடாந்திர கட்டணத்தை வசூலித்தும் அளிக்கின்றன. ஆனால் வங்கிகளின் மொபைல் வழிச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு ஆகும்மொபைல் கட்டணங்களை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சில வங்கிகள் தனிப்பட்ட ஒரு மென்பொருளை ஒவ்வொருவருடைய கைபேசியிலும் (மொபைல் போனில்)உட்செலுத்தி தனி நபர்மொபைல் பேங்கிங் சேவையை அளிக்கத் துவங்கி உள்ளன. ஆனால் ஜிபிஆர்எஸ் வசதி கொண்ட செல்போன்களில் மட்டுமே இது சாத்தியம். ஆனால், இம்முறையைச் செயல்படுத்துவது மிகவும் சுலபம். வங்கிகளின் இந்த புதிய முறையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.


மொபைல் பேங்கிங் மூலம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கீழ்க்கண்ட சேவைகளை அளிக்கிறது
 • பணப்பரிமாற்றம் செய்தல் (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளைகளிலும், தேசிய எலக்ட்ரானிக் நிதிப் பரிமாற்றம் (NEFT) மூலம் பிற வங்கி நிறுவனங்களுக்கும்)
 • பண இருப்பு விபரம்/சுருக்கமான கணக்கு விபர அறிக்கை
 • செக்புக் பெற விண்ணப்பம்.
 • பயன்பாட்டுச் சேவைக் (தொலைப்பேசி ,மின்சாரம்,குடிநீர்..) கட்டணங்கள் செலுத்துதல்.
 • மொபைல் காமர்ஸ் (மொபைல் டாப்-அப்,வணிகக் கட்டணம் செலுத்துதல்,எஸ்பிஐயின் இன்சுரன்ஸ் பிரிமியம் செலுத்துதல்).


எஸ்பிஐயின் மொபைல் வங்கிச் சேவையின் சிறப்பு அம்சங்கள்
 • மொபைல் வங்கிச் சேவையைப் பெற வாடிக்கையாளர் வங்கியில் தன்னைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 • இச்சேவை மூலம் பணப்பரிமாற்றம் மற்றும் கட்டணம்/பொருள் வாங்கிய தொகை செலுத்தலுக்கான உச்சவரம்பு ஒரு நாளுக்கு முறையே ரூ.5000 & ரூ.10000/- ஆகும். இதன் ஒரு மாத உச்சவரம்பு ரூ.30000/- ஆகும்.
 • இச்சேவை இலவசமாக அளிக்கப்படுகிறது. எனினும் எஸ்எம்எஸ் மற்றும் ஜிபிஆர்எஸ் கட்டணங்களை வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும்


பதிவு செய்யும் முறை:
 • மொபைல் போனில் பின்வருமாறு டைப் செய்து 567676 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புக. ‘MBSREG <இடைவெளி> <மொபைலின் கம்பெனி பெயர்> <இடைவெளி> <மொபைல் மாடல்> ‘ எ.கா: MBSREG Nokia 6600
 • உங்கள் கைபேசி ஜாவா மென்பொருள் கொண்டு செயல்படுமெனில் உங்களுக்கான பயனாளர் ஐடியும், எம்பின் நம்பர் (MPIN) எனப்படும் தனிநபர் அடையாள எண்ணும்(ரகசிய எண்) மற்றும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோட் செய்யத் தேவையான இணையதள முகவரியையும் எஸ்எம்எஸ் மூலம் பெறுவீர்கள். இதற்கு ஜிபிஆர்எஸ் இணைப்பு இருக்க வேண்டும்.
 • விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்தவுடன் எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்ட பயனாளர் ஐடியுடன் இணையதளத்தினுள் நுழைக.
 • பயனாளர் ஐடியை எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்டபடியே டைப் செய்க.
 • மொபைல் பேங்கிங் செயலியைத் திறந்தவுடன் உங்களின் எம்பின்(MPIN) எண்ணை மாற்ற கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.
 • அவ்வாறு கேட்கப்படவில்லையெனில் “Settings" என்ற முதன்மை மெனுவில் உள்ள “Change MPIN” என்பதைத் தேர்வு செய்க.
 • “old MPIN” என்ற இடத்தில் எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்ட 'எம்பின்'எண்ணையும், “new MPIN” என்ற இடத்தில் நீங்கள் விரும்பும் புது 'எம்பின்' எண்ணையும் குறிப்பிடுக. இந்த புது 'எம்பின்' எண்ணை “Confirm new MPIN” என்ற இடத்திலும் குறிப்பிட வேண்டும்.பின்னர் அவற்றை அனுப்புக.
 • நீங்கள் புது 'எம்பின்' எண்ணை மாற்றியது எஸ்எம்எஸ் மூலம் உறுதி செய்யப்படும்.
 • 'எம்பின்' எண்ணை மாற்றியதற்கான உறுதிப்படுத்தும் எஸ்எம்எஸ் பெற்றவுடன் ஒரு ரகசிய கேள்வியைத் தேர்ந்தெடுத்து அதற்கான பதிலை அளிக்க வேண்டும். இதற்கு “Settings" என்ற முதன்மை மெனுவில் உள்ள “Validate Account” என்பதைத் தேர்வு செய்க. இதில் ஏதேனும் ஒரு கேள்வியைத் தேர்ந்தெடுத்து பதில் அளிக்கவும்.
 • இந்த ரகசிய கேள்வியையும் அதற்கான பதிலையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் 'எம்பின்' நம்பரை மறந்துவிட்டாலோ அல்லது இச்சேவையை ரத்து செய்ய விரும்பினாலோ இது உங்களை அடையாளம் காண தேவைப்படும்.
 • பின்னர் அருகாமையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் வழியாக இதனை ஆக்ட்டிவேட் செய்யுங்கள்.
 • ஏடிஎம் கார்டை நுழைத்தபின் ‘Services’ என்ற மெனுவில் ‘Mobile Banking’என்பதை தேர்ந்தெடுங்கள்
 • “Mobile Banking” என்பதன் கீழ் ‘Register’ என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் மொபைல் எண்ணைக் கொடுங்கள். பதிவினை உறுதிப்படுத்த மீண்டும் மொபைல் எண்ணைக் கொடுங்கள்.
 • மேற்கண்ட செயல்முறைகளை முடித்தவுடன் உங்கள் மொபைல் பேங்கிங் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.
 • இதன் பின்னர் மொபைல் பேங்கிங் சேவையின் கீழ் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பெறலாம்.
இங்கு கிளிக் செய்யவும் எஸ்பிஐயின் மொபைல் பேங்கிங் சேவையைப் பற்றிய மேலும் விபரங்களுக்கு

மொபைல் வழி வங்கிச் சேவைகளை அளிக்கும் வங்கிகளில் சில பின்வருமாறு:


Source : மின்னாட்சி

வினாடிகளில் பணப் பரிவர்த்தனை!

போஸ்டட் : புதன்கிழமை, நவம்பர் 24, 2010, 15:31

 மொபைல் போன்கள் மூலம் இனி சில வினாடிகளில் பணப் பரிவர்த்தனை செய்யும் அதிவேக மொபைல் பேங்கிங் முறை மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மொபைல் பேங்கிங் வாடிக்கையாளர்களுக்குப் புதிதில்லை என்றாலும், பல வாடிக்கையாளர்களுக்கு இதில் திருப்தியில்லை. நம்பகத் தன்மை இல்லாதது, தொழில் நுட்ப ரீதியாகப் புரியாதது மற்றும் வெளிப்படைத்தன்மை குறைவு என பல பிரச்சினைகள் இந்த மொபைலே பேங்கிங்கில்.

இதையெல்லாம் விட முக்கியப் பிரச்சினை, கால விரயம். ஒரு பரிவர்த்தனையை முடிப்பதற்குள் தலையைப் பிய்த்துக் கொள்ள வைப்பார்கள் மொபைல் பேங்கிஙம் வாடிக்கையர் சேவையாளர்.

இந்த தொல்லைகளை அனுபவிப்பவதற்குப் பதில், ஒரு நடை வங்கிக்கே போய் வந்துவிடலாம் என்ற எண்ணமே கடைசியில் மிஞ்சுவதால், மொபைல் பேங்கிங் என்பது இந்தியாவில் தோற்றுப்போன சிஸ்டமாகிவிட்டது.

அதற்கு உயிர் தரும் வகையில் துரிதமான மொபைல் பேங்கிங்கை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனை என்.பி.சி.ஐ எனும் நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்த சேவையை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்ணை வங்கியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யும் வாடிக்கையாளருக்கு 3 இலக்க ரகசிய எண் அளிக்கப்படும்.

ஒவ்வொரு வங்கிக்கும் தேசிய வங்கி அடையாள எண் அளிக்கப்படும். பணம் அனுப்புவோர் மற்றும் அதைப் பெறுவோர் இந்த எண்ணை தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் செல்போன் பண பரிவர்த்தனை எண்ணும் அளிக்கப்பட வேண்டும்.

இந்த 2 எண்களையும் சரியாக குறிப்பிட்டு பண பரிவர்த்தனை செய்தால் 7 விநாடிகளில் பணப் பரிமாற்றம் முடிந்துவிடுமாம். அந்த எண்ணை அழுத்துங்கள், இந்த எண்ணை அழுத்துங்கள், பிறந்த தேதியைச் சொல்லுங்கள், முகவரி சொல்லுங்கள் என்ற சிக்கல் இல்லாத, அதேநேரம் பாதுகாப்பான சேவை இது என்கிறார்கள்.

இப்போதைக்கு பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., யூனியன் வங்கி, எஸ் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி ஆகிய 7 வங்கிகள் இந்த சேவையை அளிக்க ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றுள்ளன.

மேலும் 50 வங்கிகள் இந்த நெட்வொர்க்கில் இணையப் போகின்றனவாம். விரைவி்ல் நாடு முழுவதும் இந்த சேவை கிடைக்குமாம்.
பதிவுகளை ஈமெயிலில் பெற