பேஸ்புக்கில் வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்ய


பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இதன்மூலம் நம் வேலைகளை எல்லாம் மறந்து நண்பர்களோடு அரட்டையில் மகிழ்கிறோம். இப்பொழுது மேலும் ஒரு படி மேலே சென்று நம் நண்பர்களின் முகத்தை பார்த்து கொண்டே எப்படி அரட்டை அடிப்பது என காண்போம்.


  • முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • அடுத்து இந்த லிங்கில் FACING CALL செல்லுங்கள்.
  • வரும் பக்கத்தில் உள்ள Go to App என்ற பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து உங்களுக்கு வேறு ஒரு பக்கம் ஓபன் ஆகும். அதில் உள்ள Allow என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.


  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அந்த பக்கம் முழுவதும் லோட் ஆகும் வரை பொறுமை காக்கவும்.
  • உங்களுக்கு பக்கம் திறக்கும் அதில் Allow என்ற பட்டனை அழுத்திவிடவும்.
  • அவ்வளவு தான் உங்கள் கணக்கில் வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது. 
  • இவ்வசதியை பயன்படுத்த உங்கள் கணினியில் வெப் கேமரா அல்லது மைக்ரோபோன் வசதி இருக்க வேண்டும்.
  • இதில் உள்ள invite friends என்ற வசதி மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களை இணைத்து அவர்களோடு வீடியோ சேட்டிங்கில் பேசி மகிழலாம்.


No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற