இணைய வேகத்தை அதிகரிக்க கூகுள் குரோம் 10 - புதிய பதிப்பு


இணைய உலவிகளில் சிறந்த இடத்தை பிடித்துள்ள கூகுள் குரோம் உலவி கூகுளின் வெளியீடாகும். தற்போது கூகுள் குரோமின் புதிய பதிப்பை அனைவருக்கும் இலவசமாக அளிதுள்ளது. கூகுளில் தற்போது வெளியிட்டிருக்கும் பதிப்பிற்கான முக்கிய நோக்கமே இணைய வேகத்தை அதிகரிப்பது தான். கூகுளின் தாரகமந்திரமே எளிமை,புதுமை,பாதுகாப்பு ஆகியவையே. இது தம் வாசகர்களின் திருப்தியை மனதில் கொண்டு உருவாக்கியதே இந்த உலவி கூகுள் குரோம். இதிலும் பல மாற்றங்கள் செய்து வெளியிட்டு உள்ளது இந்த Google Chrome 10. 


  • கூகுள் குரோம் பொதுவாக தானாகவே அப்டேட் ஆகி கொள்ளும். ஆகவே நீங்கள் கூகுள் குரோம் திறந்து Settings பகுதிக்கு சென்று About Chrome என்பதை க்ளிக் செய்தால் நீங்கள் எந்த பதிப்பை உபயோக படுத்துகிறீர்கள் என தெரியும். 
  • அதில் கீழே உள்ளதை போல செய்தி வந்தால் நீங்கள் இந்த பிரவுசரை திரும்பவும் இணைக்க வேண்டியதில்லை. ஏற்க்கனவே இந்த வசதியை பயன்படுத்தி கொண்டு உள்ளீர்கள்.  • இப்படி இல்லாமல் பழைய பதிப்பையே இன்றும் உபயோகித்து இருந்தால் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி பெற்று கொள்ளவும்.No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற