கணினியை பாதுக்காக்க இலவசமான அவாஸ்ட் ஆன்ட்டி வைரஸ் புதிய பதிப்பு


நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் நம்முடைய கணினிக்கு ஆபத்தும் வளர்ந்து வருகிறது. தினம் தினம் புது புது வைரஸ்களும், மால்வேர்களும் உருவாகிக்கொண்டே (சாரி உருவாக்க படுகிறது) இருக்கிறது.  

இதனை தடுக்க நாம் பல ஆன்டிவைரஸ்களை உபயோகபடுத்துகிறோம். இணையத்தில் ஏராளமான இலவச ஆன்ட்டி வைரஸ் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் உபயோகபடுத்த படுகிறது. இப்பொழுது இந்த ஆண்ட்டிவைரசில் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. அதாவது 5.1.889 என்ற பதிப்பில் இருந்து 6.0.1000 வெளியிடப்பட்டுள்ளது.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்: 

  • அவஸ்ட் மென்பொருளை அனைவரும் உபயோக படுத்த காரணமே வைரஸ் மற்றும் மால்வேர்களை சரியாக கண்டறிந்து அளிக்கிறது.
  •  கணினியில் ஏதாவது புதிய வைரஸ் நுழைய முயன்றாலே தகவல் தெரிவித்து அதை அழித்து விடுகிறது.
  • இணையத்தில் சில மால்வேர் பாதிக்க பட்ட தளங்களுக்கு சென்றால் நமக்கு தகவல் தருகிறது.
  • ஹார்டிஸ்கில் குறிப்பிட்ட அளவே இடத்தை எடுதுகொல்வதால் இதனால் கணினியின் வேகம் குறைவதில்லை. 
  • வேகமாக பைல்களை ஸ்கேன் செய்ய கூடியது.

புதிய பதிப்பின் சிறப்பம்சங்கள்:


  • பைல் உபயோகித்து கொண்டிருந்தாலும் ஸ்கேன் செய்யும்.
  • ஸ்க்ரீன் சேவர்களையும் ஸ்கேன் செய்யும் வசதி.
  • கணினி பூட் ஆகும் போதே ஸ்கேன் செய்யும் வசதி NT/2000/XP உபோகிப்பவர்களுக்கு மட்டும்.
  • E-mail Scanner. மேலும் பல வசதிகள் இதில் அடங்கியுள்ளது ஆகவே இந்த மென்பொருளை கணினியில் நிறுவி உங்கள் கணினியை பாதுகாத்து கொள்ளுங்கள்.  
No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற