ஆன்லைனில் வாக்காளர் அட்டை சரிபார்க்கலாம் வாங்க


நீங்கள் பணி(வேலை) காரணமாக வெளிநாட்டில் -வெளி ஊரில் வேலை செய்யலாம். உங்களுக்கான ஒட்டு உரிமை உங்கள் சொந்த ஊரில் இருக்கலாம்.நமக்கு ஒட்டு உள்ளதா - வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண் படி நமது பெயர் - முகவரி விவரம் சரியாக உள்ளதா என எளிதில சோதித்துக்கொள்ளலாம்.நமது பெயர்பார்க்கும் வேலையைஅரசு வெளியிட்டுள்ள தேர்தல் அட்டவணை விவரத்தில் உள்ள விவரங்கள் சரிபார்க்க நாம் ஊருக்கோ ஊரில் உள்ளவர்கள் மூலமோ செய்யவேண்டியதில்லை. வெளிநாட்டில் இருந்தே விவரங்களை சரிபார்க்கலாம். இந்த தளம் செல்ல நீங்கள் இங்கு கிளிக செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்

வருகின்ற விண்டோவில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள். அடுத்துள்ள உங்கள சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்யுங்கள்.(இப்போது உங்களுடைய சட்ட மன்ற தொகுதியை மாற்றி அமைத்துள்ளார்கள்).இதில் முதலில் உள்ள வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாக தேடலாம். அடுத்துள்ள வாக்காளர் பெயர் மூலம் தேட கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் வாக்காளர்பெயர் தட்டச்சு செய்யவும். நீங்கள் வாக்காளர் பெயர் தட்டச்சு செய்வதற்கு வசதியாக உங்களுக்கு தமிழ் கீ-போர்ட் இணைத்துள்ளார்கள். தேவையான எழுத்தை கிளிக் செய்ய அதன் மெய்யெழுத்து அனைத்தும் வரும். தேவையானதை கிளிக் செய்து பெயரை எளிதில் அமைக்கலாம்.

அடுத்துள்ள வாக்குசாவடியின் பெயர் மூலமாகவோ - தெருவின் பெயர் மூலமாகவோ எளிதில் தேடலாம். இது தான் சிறந்த வழி.


பூம்புகார் தொகுதி மற்றும் ஆயப்பாடி வார்டு உறுப்பினர்கள் இங்கு செல்லவும்

தேர்தல் வருவதற்கு முன் உங்கள் வாக்கு உரிமையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.ஒட்டுப்போடுங்கள்.




2 comments:

  1. நான் வைரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று தேடினேன் அதில் வைரத்தை விடமதிப்புள்ள உங்கள் தளத்தில் சுலபமாக கிடைத்தது பல முக்கியமான தகவல்கள் (உ-ம் வாக்காளர் பட்டியல்)அதேபோல் ரேஷன் கார்டுக்கும் உள்ள தளம் எது என்று கூறினால் நிறைய பேர்க்கு உபயோகமாக இருக்கும் என நினைக்கின்றேன் நன்றி

    ReplyDelete
  2. சிவா அவர்களுக்கு நன்றி.. ரேஷன் கார்டு என்றால் அதன் விபரம் அடங்கிய தளம் பற்றி சொல்லுகிறீர்கள் என நினைகிறேன். கூடிய விரைவில் அதற்கான பதிவு இருக்கும். தொடர்ந்து வாருங்கள் நண்பரே..

    ReplyDelete

பதிவுகளை ஈமெயிலில் பெற