இஸ்லாமிய குணநலன்கள்



1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?
பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.

(
காண்க அல்குர்ஆன் 31:17 42:43)சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)


2. 
மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?
நற்செயல்களை செய்தலும்தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:11029:4

3. 
இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?
தந்தையின் திருப்தி :
இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.

(
அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்தப்ரானி.தாய்க்கு நன்மை செய்வது :
இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்எனக் கேட்டேன்உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்நல்லதுசெய்யப்படத் தகுதியுடையவர் யார்என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்நல்லது செய்யப்பட தகுதியுடையவர்யார்எனக்கேட்டேன்உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்நல்லது செய்ய தகுதியானவர் யார்எனக் கேட்டேன் உனதுதந்தைஅடுத்து (உன்நெருங்கிய உறவினர்கள்அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம்தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்திர்மிதிஅபு தாவூத்,மேலும் காண்க அல்குர்ஆன் 17:24 31:15)

4 . 
பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன?
ரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)பொருள்என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும்பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறேஇவர்கள் மீது நீ கருணை புரிவாயாக

5 . 
பெற்றோரை திட்டாமல் இருப்பது ?
ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும்என்று நபி (ஸல்அவர்கள் கூறியதும் (அதுஎப்படி ஒருவன்(தன் பெற்றோரைத்திட்டுவான்என்று நபித்தோழர்கள் கேட்டனர்ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும்,தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்என்றுநபி (ஸல்கூறினார்கள்இதை அப்துல்லாஹ்இப்னு அம்ரு(ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)
தீய குணங்கள்


1 . 
தற்பெருமை

(
நபியேநீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்நிச்சயமாக (இப்படி நடப்பதால்நீர் பூமியை பிளந்து விடவும்முடியாதுமலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமாதற்பெருமையும்ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்அவர்கள்கூறினார்கள்.

(
அறிவிப்பவர்ஹாரிஸா இப்னு வஹப் (ரலிநூல்புஹாரி,முஸ்லிம்)

2 . 
கொடுமை
அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டுஉங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றிஅஞ்சுங்கள்ஏனெனில்அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும்இல்லை என்று நபி (ஸல்அவர்கள் முஆத் (ரலிஅவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராகஅனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்:புஹாரி)

3 . 
கோபம்

(
பய பக்தியுடையவர்கள்கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்மனிதர் (கள் செய்யும் தவறுகளை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)நபி (ஸல்அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார்கோபம் கொள்ளாதேஎன்றார்கள்பலமுறைகேட்ட போதும்கோபம் கொள்ளாதேஎன்றார்கள்.

(
அறிவிப்பவர்அபு ஹூரைரா (ரலிநூல்புஹாரி)

4 . 
பிறர் துன்பத்தை கண்டு மகிழல்
உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதேஇறைவன் அவன் மீது கருணை புரிந்துஉன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்திர்மிதி).

5. 
பொய்
எவன் பொய்யனாகவும்நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல்குர்ஆன்:39:3)சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியதுபொய்சந்தேகமானது என நபி (ஸல்கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலிநூல்கள்:அஹமத்நஸயீதிர்மிதிஇப்னு ஹிப்பான்)

6. 
கெட்டவற்றை பேசுதல்
எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும்ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன்அல்லன். (நூல்:முஸ்லிம்)

7. 
இரட்டை வேடம் போடுதல்
மறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளைபார்ப்பீர்கள்ஒருமுகத்துடன் (ஒருகூட்டத்திடம்செல்வார்கள்வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்செல்வார்கள் என நபி (ஸல்கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா(ரலி)நூல்கள்:புஹாரிமுஸ்லிம்)

8. 
பாரபட்சம் காட்டுதல்
நபி (ஸல்கூறினார்கள் (இன மத மொழிவெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன்அதற்காகபோராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்பெற்றோருக்கோ அல்லது நெருங்கியஉறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம்கூறுகிறீர்களோஅவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும்ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல்குர்ஆன்:4:135)

9. 
வரம்பை மீறிய புகழ்ச்சி – 
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள்(அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலிஆதாரம்முஸ்லிம்ஃ மிஷ்காத்)
10. பரிகாசம்
முஃமின்களேஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்),அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறேஎந்தப்பெண்களும்மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்யவேண்டாம்ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக்கொள்ளாதீர்கள்இன்னும்(உங்களில்ஒருவரைடியாருவர் (தீயபட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறுதீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோஅத்தகையவர்கள்அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)

11. 
வாக்குறுதி மீறல்
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்நிச்சயமாக வாக்குறுதி (பற்றிமறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)நயவஞ்சகனின் அடையளங்கள் மூன்றுபேசினால் பொய்யே பேசுவான்வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான்நம்பினால் மோசடிசெய்வான் என நபி (ஸல்அவர்கள் கூறினார்கள். (நூல்புஹாரிஃ முஸ்லிம்)

12. 
சண்டை
அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்சச்சரவு செய்துகொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலிஅவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)

13. 
குறை கூறல்
குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)இறை நம்பிக்கையாளர்களேஉங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம்உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்தசகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை!) அதை நீங்கள் வெறுப்பீர்கள்மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12)

14. 
பொறாமை
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல்பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூதுமிஷ்காத்)

15. 
கெட்ட பார்வை

(
நபியேஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்துதாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல்குர்ஆன் 24:30)கண்கள் செய்யும் சைகைகளையும்உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)செவிபார்வைமனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றிநிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)
நற் குணங்கள்

1. 
நிதானம்
இன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்குறைக்கவும் மாட்டார்கள்எனினும்இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67)உன் நடையில் மிக வேகமோஅதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன் 31:19)

2. 
எளிமை
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்நீங்கள் கேட்கவில்லையா, 'எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்அடையாளமாகும்திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.' (அறிவிப்பவர்அபுஉமாமா (ரலிநூல்கள்:அபுதாவூத்மிஷ்காத்.நபி (ஸல்அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதேசொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள்ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்முஆது இப்னு ஜபல் (ரலிநூல்:முஸ்னத்அஹ்மத் மிஷ்காத்)

3. 
தூய்மை
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்அபு மாலிக் அல் அஷ்அரி (ரலிநூல்முஸ்லிம்)

(
நபியே!) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக! (அல்குர்ஆன் 74:4)

4. 
மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்
மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்அபுஉமாமா (ரலிநூல்அபுதாவூதுதிர்மிதிஅஹ்மத்
உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள்இது இஸ்லாத்தின் சிறப்புக்களில்ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்புஹாரி)

5. 
நாவடக்கம்
இரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்பாதுகாத்துக்கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி)எவர் இறைவனையும்மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லது மௌனமாக இருக்கவும். (நூல்:திர்மிதி)

6. 
அன்பாக பேசுதல்
கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தைவிடமேலானவையாகும்தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263)

7. 
பிறருக்கு உதவி புரிதல்
நபி (ஸல்அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலிஅறிவிக்கிறார்கள். (நூல்:புஹாரிமுஸ்லிம்)நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர்அதன்ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக்கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்புஹாரிமுஸ்லிம்மிஷ்காத்)

8. 
உண்மை பேசுதல்
ஈமான் கொண்டவர்களேஅல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ! உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன்9:119)விளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்அபுதாவூத்)

9. 
நன்றி செலுத்துதல்
மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்அஹ்மத்திர்மிதி)நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டுநோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்அபுஹூரைரா (ரலிநூல்திர்மிதிஃ மிஷ்காத்)

10. 
வெட்கப்படுதல்
திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டுஇஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்இப்னு மாஜா)அண்ணல் நபி (ஸல்அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலேஉயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர்:அனஸ் (ரலிநூல்புஹாரிமுஸ்லிம்)
11. தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்)
அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால்,பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான்புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச்செல்கிறதுமாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்உமர் (ரலிநூல்திர்மிதி)

12. 
தவ்பா (மன்னிப்பு கோருதல்)
எவர் பாவமன்னிப்புக் கோரிமேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளைஇறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70)அல்லாஹ்வின் மீது சத்தியமாகநிச்சயமாக நான்ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம்பொறுத்தருள தேடிஅவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்நூல்புஹாரி

13. 
உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல்
நபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும்முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்திர்மிதி)தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள்அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்துகொண்டே இருந்ததுஉடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டிகிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்துஅந்த நாய்க்குபுகட்டினாள்இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான்நூல்புஹாரி,முஸ்லிம்







No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற