2030-ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொகையில் 26.4 சதவிகிதம் முஸ்லிம்கள் இருப்பார்கள்

முஸ்லீம் மக்கள் தொகையில் தற்போது முதலிடத்தில் இருக்கும் இந்தோனேசியாவை விரைவில் பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்கும் என்று அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது.

அதேபோல 2030-ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 23. 6 கோடியைத் தாண்டும் என்றும் அது கூறுகிறது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம் மக்கள் தொகை, முஸ்லிம் அல்லாத மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் அதிகரிக்கும் என்றும் அது தெரிவிக்கிறது.

இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

அடுத்த 20 ஆண்டுகளில் முஸ்லிம் அல்லாத மக்கள் தொகையைவிட முஸ்லிம் மக்கள்தொகை இரண்டு மடங்கு அதிக வேகத்தில் அதிகரிக்கும்.

தற்போதைய சூழல் தொடர்ந்தால் 2030-ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொகையில் 26.4 சதவிகிதம் முஸ்லிம்கள் இருப்பார்கள். கடந்த 2010ல் இருந்த 6.9 பில்லியன் மக்கள்தொகையில் 23.4 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற