2010ல் கிரிக்கெட் - ஒரு அலசல்


சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த ஆண்டில் (2010) குறிப்பிடத்தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அது பற்றிய ஒரு அலசல் வருமாறு:
கடந்த ஆண்டில் மொத்தம் 43 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. 98 சதங்கள் விளாசப்பட்டுள்ளன. இவற்றில் 37 வயதான இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 1562 ஓட்டங்கள் குவித்திருக்கிறார். அதிக சதம் (7) அடித்த சிறப்பையும் அவரே பெற்றுள்ளார். அத்துடன்,50 ஆவது டெஸ்ட் சதம் மைல்கல்லையும் எட்டி உலக சாதனை படைத்தார்.

இந்திய அணியைப் பொறுத்தவரை 2010 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் (20),அவுஸ்திரேலியா (20),நியூஸிலாந்து (10) ஆகிய அணிகளுடன் தொடரை வென்றது. தென்னாபிரிக்கா மற்றும் இலங்கையுடன் தொடர்கள் 11 என்ற சமனில் முடிந்தன. தற்போது தென்னாபிரிக்க மண்ணில் நடந்து வரும் தொடரிலும் இந்திய அணி டேர்பனில் முதன்முறையாக வெற்றிபெற்றது.
பந்துவீச்சில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் 800 விக்கெட்டுகளை எட்டியது குறிப்பிடத்தக்கது.
அணி அதிகபட்சம்: இந்தியா 707 ஓட்டம் (இலங்கை,எதிராக) குறைந்தபட்சம்: பாகிஸ்தான் 72 ஓட்டம் ( இங்கிலாந்து எதிராக)
தனிநபர் அதிகபட்சம்: கிறிஸ்கெய்ல் (மேற்கிந்தியா) 333 ஓட்டங்கள் (இலங்கை எதிராக)

அதிக சிக்ஸர்கள் : டிவிலியர்ஸ் (தென்னாபிரிக்கா)18 சிக்ஸர் (11 ஆட்டம்)
ஒருநாள் போட்டி
கடந்த வருடம் மொத்தம் 141 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. 65 சதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 200 ஓட்டங்கள் குவித்து ஒருநாள் போட்டிகளில் இரட்டைச்சதமடித்த முதல் வீரர் என்ற அபூர்வ சாதனையைப் படைத்தார். இந்திய அணியைப் பொறுத்தவரை 15 ஆண்டுக்குப் பிறகு ஆசிய கிண்ணத்தை வென்றது. தென்னாபிரிக்கா (21), அவுஸ்திரேலியா (10), நியூஸிலாந்து (50) எதிரான ஒருநாள் தொடர்களையும் கைப்பற்றியது.
அணி அதிகபட்சம்: இந்தியா 4013 ஓட்டம் (தென்னாபிரிக்கா எதிராக),
குறைந்த பட்சம்: இந்தியா 88 ஓட்டம் (நியூஸிலாந்துக்கு எதிராக)
அதிக சிக்ஸர்கள்: அப்ரிடி (பாகிஸ்தான்)27 சிக்ஸர் (18 ஆட்டம்)
20 ஓவர் கிரிக்கெட்
இந்தக் குறுகிய நேர கிரிக்கெட்டில் உலகக் கிண்ணத்தை முதன்முறையாக இங்கிலாந்து அணி வென்றது இந்த ஆண்டில் நினைவுகூரத்தக்கது.
பிரண்டன் மெக்கலம் (நியூஸிலாந்து), சுரேஷ் ரெய்னா (இந்தியா), மஹேல ஜெயவர்தன (இலங்கை) ஆகியோர் சதமடித்ததும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். மற்றப்படி டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா) அதிக சிக்ஸர்கள் (22) விரட்டியவர்களின் பட்டியலில் இந்த ஆண்டில் முதலிடம் வகிக்கிறார்.

டெஸ்டில் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்
டெண்டுல்கர், இந்தியா,14,1562 ஓட்டங்கள் 7 சதம் உள்ளடங்களாக
சேவாக், இந்தியா,14,1422 ஓட்டங்கள் 5 சதம் உள்ளடங்களாக 
டிராட், இங்கிலாந்து,14,1325 ஓட்டங்கள் 4 சதம் உள்ளடங்களாக
குக், இங்கிலாந்து,14,1287,ஓட்டங்கள் 5 சதம் உள்ளடங்களாக
அம்லா,தென்னாபிரிக்கா,11,1249, ஓட்டங்கள் 5 சதம் உள்ளடங்களாக

முதல் 5 பந்து வீச்சாளர்கள்
ஸ்வான், இங்கிலாந்து,14 போட்டிகளில் 64 விக்கெட்கள்
ஸ்ரெயின், தென்னாபிரிக்கா,11 போட்டிகளில் 60 விக்கெட்கள்
அண்டர்சன், இங்கிலாந்து,12 போட்டிகளில் 57 விக்கெட்கள்
மோர்னே மோர்கல், தென்னாபிரிக்கா,11 போட்டிகளில் 49 விக்கெட்கள்
சகீர்கான்,இந்தியா,9 போட்டிகளில் 49 விக்கெட்கள்
ஒருநாள் போட்டியில் முதல்5 வீரர்கள்
அம்லா, தென்னாபிரிக்கா,15 போட்டியில்1058 ஓட்டங்கள் 5 சதம் உள்ளடங்களாக 
கோக்லி, இந்தியா, 25 போட்டியில் 995 ஓட்டங்கள் 3 சதம் உள்ளடங்களாக 
டிவிலியர்ஸ்,தென்னாபிரிக்கா,16 போட்டியில் 964 ஓட்டங்கள் 5 சதம் உள்ளடங்களாக  
டில்ஷான், இலங்கை, 20 போட்டியில் 921 ஓட்டங்கள் 3 சதம் உள்ளடங்களாக  
இம்ருல் கேயஸ், பங்களாதேஷ், 27 போட்டியில் 867 ஓட்டங்கள் 1 சதம் உள்ளடங்களாக  
முதல் 5 பந்துவீச்சாளர்கள்

ஷிகிப் அல் ஹசன்,பங்களாதேஷ், 27 போட்டிகளில் 46 விக்கெட்கள்
ரையான் ஹாரிஸ்,அவுஸ்திரேலியா,16 போட்டிகளில் 40 விக்கெட்கள்
ஷபியுல் இஸ்லாம்,பங்களாதேஷ் 23 போட்டிகளில் 32 விக்கெட்கள்
ஸ்ருவர்ட் புரோட், இங்கிலாந்து,16 போட்டிகளில் 30 விக்கெட்கள் 
அப்துர் ரசாக், பங்களாதேஷ், 22 போட்டிகளில் 29 விக்கெட்கள்


No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற