உலகின் 10 ஈகோ படைத்த வீரர்கள் பட்டியலில் யுவராஜ் சிங்

இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் நடத்திய உலகின் 10 ஈகோ படைத்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் யுவராஜ் சிங் இடம் பெற்றுள்ளார்.
சமீப காலமாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் யுவராஜ் சிங். இந்த நிலையில் அவரை டென்ஷனாக்கும் வகையில் இந்த கருத்துக் கணிப்பு வந்துள்ளது.

சமீப காலத்தில் விளையாட்டுத்துறையில் அதிகம் ஈகோ படைத்தவர்களாக உள்ளவர்கள் குறித்த பட்டியல் இது. இதில் டாப் 10 வீரர்கள் பட்டியலில் யுவராஜுக்கம் இடம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து டெய்லி டெலிகிராப் கூறுகையில், தனது ஈகோவால் பல பாதகங்களை சந்தித்து வருகிறார் யுவராஜ்சிங். இவரது ஈகோவால்தான் ஐபிஎல் தொடரில் அவர் இடம்பெற்ற அணி தோல்வியைத் தழுவியது.
அவரது வங்கி இருப்பு உயர்ந்து கொண்டே வருவதைப் போல இடுப்பு சுற்றளவும் (குண்டாகி விட்டாராம்), ஈகோவும் கூட உயர்ந்து கொண்டே போகிந்றன. ஆனால் அவரது விளையாட்டுத் திறன் குறைந்து கொண்டே வருகிறது.
இதன் விளைவு இலங்கையில் நடந்த போட்டித் தொடரில் கலந்து கொண்ட இந்திய அணியில் 12வது வீரராக, தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார் என்று அது கூறியுள்ளது.
ஈகோ பிடித்தவர்கள் பட்டியலில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சனும் இடம் பிடித்துள்ளார். இவர்கள் தவிர குத்துச்சண்டை ஜாம்பவான் முகம்மது அலி, கால்பந்து பயிற்சியாளர் ஜோஸ் மொரின்ஹோ, கூடைப்பந்தாட்ட ஜாம்பவான் மைக்கோல் ஜோர்டான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற