இந்தியாவில் முஸ்லிம்களே இருக்க கூடாது.. RSS

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)                            நாம் வரலாற்றில் ஒரு போதும் மறக்க முடியாத

மிகவும் கொடூரமான நிகழ்வு குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை 2002. அன்று

நடந்த அசுரத்தனத்தை இந்தியா முழுதும் கொண்டு செல்வோம் என்று கொக்கரித்தது
RSS மற்றும் மோடி அரசு. கலவரம் மன்னிககவும் இனசுத்திகரிப்பு ஏனென்றால்
கலவரமென்றால் இரு தரப்பிலும் பாதிப்பு இருக்க வேண்டும் ஆனால் எங்கெல்லாம்
முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சனைகள் வருகின்றதோ அங்கெல்லாம் பாதிப்பு
என்பது முஸ்லிம்களுக்கு தான்.

இதில் ஈடுபட்ட அனைத்து கொடும் பாவிகளும் தான் எந்த அளவுக்கு இதில் நடந்து
கொண்டேன் என்று தன் வாயாலேயே கூறியதை டெஹல்கா பத்திரிக்கை நிருபர் திரு
ஆஷிஷ் கேதான் ( மாற்று மத சகோதரன்) தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பதிவு
செய்து நேரடி ரிப்போர்ட்டாக மக்களுக்கு எடுத்து காட்டினார் ஆனாலும்
இன்றும் அவர்கள் சுதந்திரமாக நாட்டில் உலா வருகிறார்கள். இது வரை
ஒருவரும் தண்டிக்கப்படவில்லை. அந்த இனச்சுத்திகரிப்பில் கலந்து கொண்டதை
மிக பெருமையாக பாபு பஜ்ரங்கி என்ற அரக்கன் கூறியதையும் டெஹல்கா நமக்கு
படம் பிடித்து காட்டியது, அதில் கவுஸர் பானு என்ற நிறைமாத கற்பிணியான
முஸ்லிம் பெண்ணை ( நம்ம சகோதரி தாங்க) தான் வயிற்றை கீரி குழந்தையை
வெளியில் எடுத்து பெட்ரோலை ஊற்றி கொழுத்தினான். பின் அதை தனது
சூலாயுதத்தால் குத்தி மேலே தூக்கி கொக்கரித்தான் இப்படி - முஸ்லிம்கள்
அனைவரும் இப்படித்தான் கொல்லப்படுவார்கள் என்று.
(அட முஸ்லிம்கள் தானப்ப கொல்லப்படுவார்கள் நமக்கு தான் TNTJ,
INTJA,TMMK,JAQH,MNMK இப்படி பல பேர்கள் இருக்கே நல்ல வேளை நம்ம இல்லை
யாரோ முஸ்லிம்கலாம் ????????????)
இவ்வாறு நாம் நினைத்தாலும் நம் எதிரிகள் நம்மை முஸ்லிம்களாகத்தான்
பார்க்கிறான். இந்த பிஞ்சுகுழந்தை ( இதை எழுதும் போது என் கண்கள்
கலங்குகிறது) என்ன தப்பு செய்தது முஸ்லிம் வயிற்றில் பிறந்ததை தவிர.அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கேட்கின்றான்

4:75. பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும்

பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக்
காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும்
இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து
தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக
உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை
செய்கிறார்கள்.
யார் அந்த உதவியாளன்????
ஆனால் நாம் இன்று எவ்வாறு இருக்கின்றோம் நான், என் வீடு, என் உடைமை
இன்னும் கொஞ்சம் அதிகம் போயி என் இயக்கம் இப்படி திரிகின்றோம்.இதுவா
இஸ்லாம், இதுவா நம் தூதர் முஹம்மது ரஸூல்(ஸல்) அவர்கள் காட்டி தந்தது.
இதையா அல்லாஹ் விரும்புகிறான் சிந்தியுங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்
முஸ்லிமாக இன்ஷா அல்லாஹ் முஹ்மீனாக
(சிந்திக்க கூட நேரமில்லை அந்த அளவிற்கு எதிரி நமமை மிகைத்து சென்று
கொண்டிருக்கிறான் நாம் விழிப்படைய வில்லையானால் அல்லாஹ் தான் நம்மை
பாதுகாக்க போதுமானவன்).
இத்துடன் குஜராத்தில் கொடூரமான முறையில் எவ்வாறு கொலை செய்யப்படுகிறான்
நம் முஸ்லிம் சகோதரன் என்பதையும் இனைத்துள்ளேன்.நேற்று நம் சகோதரன்??? நாம் விழிப்படையவில்லையானால்

நாளை ????
No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற