இந்தியாவின் முதல் முஸ்லிம் பணக்காரர்

விப்பேரா நிறுவனத்தின் தலைவர் அஜீம் பிரேம்ஜி 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 8,846 கோடி ரூபாய்) நன்கொடை வழங்க உறுதி அளித்துள்ளார். இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மூன்றாவது மிகப்பெரும் பணக்காரராகக் கூறப்படும் அஜீம் பிரேம்ஜி,
இதற்காக விப்ரோ நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளில் 213 மில்லியன் பங்குகளை அஜீம் பிரேம்ஜி டிரஸ்டுக்கு மாற்றுவார். இந்த டிரஸ்ட் அஜீம் பிரேம்ஜி பவுண்டேஷனின் கல்விசார்ந்த பணிகளுக்கு நிதி உதவி அளிக்கும். கிராமப் பகுதிகளில் கல்விச் சேவையை நடத்தி வரும் அஜீம் பிரேம்ஜி பவுண்டேஷனுக்கு பிரேம்ஜி முன்னர் 700 கோடி ரூபாய் நிதி உதவி செய்திருந்தார்.

இந்தியாவில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற மிகப்பெரும் குறிக்கோளுக்கு நான் முழுமையான உடன் இருப்பேன் என பிரேம்ஜி கூறியுள்ளார்.

சக மனிதர்களை மதிக்கக் கூடிய சமதர்ம சமுதயாத்தை உருவாக்குவதில் சிறந்த கல்வி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே, இந்தியாவின் கல்வித்துறை வளர்ச்சிக்கு குறிப்பிடத் தக்க அளவில் எங்கள் பங்களிப்பை வழங்க விரும்புகிறோம். இதன் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாமும் நம்மால் முடிந்த அளவு நம் சமுதாய முன்னேற்றத்துக்காக இன்ஷா அல்லாஹ் உதவி செய்ய முன் வருவோம் No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற