பூமி - ஓர் ஆய்வு

அண்டம் (Universe) 93 பில்லியன் (~) ஒளி ஆண்டுகள் விட்டம் கொண்ட 

பால்வழிதிறள் (Milky way) விண்மீன்திரள் (Galaxy) என அனைத்தையும் 

உள்ளடக்கியது. 


பிரபஞ்சத்தின் ஒவ்வொரு கோள்களும் ஒரு பாதையை அமைத்து
கொண்டு சுற்றுகின்றன. பூமி தன்னை தானே சுற்றி சூரியனையும் 
சுற்றுகிறது, சூரியன் விண்மீன் (Galaxy) மண்டலத்தை 225 (~) மில்லியன் 
ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது, அந்த விண்மீன் மண்டலம் 
அண்ட மையத்தை 550km/s என்ற வேகத்தில் சுற்றிவருகிறது, அந்த 
அண்ட மையம் எதை சுற்றுகிறது என்று கண்டுபிடிக்க படவில்லை. 


இவைகள் எல்லாம் எதற்காக சுற்றுகின்றன? உலகம் இயங்குவதற்காக, 
இப்படி சுற்றவில்லை என்றால் உயிரினமே இல்லை எனலாம். இவைகள் 
தான் பூமியில் உயிர்கள் வாழ முதற்காரணம்.

உயிர்கள் வாழ அத்தியாவசியமான தேவைகள் காற்று, நீர் எங்கோ 
அறிவியல் பாடத்தில் படித்த ஞாபகம் இவைகள் மட்டும் இருந்தால் 
உயிர்கள் வாழ்ந்துவிடுமா என்றால் இல்லை, (தற்போதைய கூற்றுப்படி) 
பூமி சூரியனிலிருந்து உள்ள தூரம், பூமி சுழலும் வேகம், புவியின் ஆச்சு 
சாய்வு, ஈர்ப்பு விசை, தட்ப வெப்ப நிலை, வேதியல் மூலக்கூறு 
உருவாகும் தன்மை, வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான சக்தி 
(வெப்ப ஆற்றல் விதிப்படி) ஆகியவை உயிர்கள் வாழ்வதற்கு 
அத்தியாவசியமாக உள்ளன. இவை அனைத்தும் மற்ற கிரகங்களில் 
இருக்கின்றனவா என்கிற ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டு 
இருக்கிறது என்றாலும் இதுவரையில் எந்த ஒரு முழுமையான 
கிரகமும் நமது குடும்பத்தில் மட்டும் அல்லாமல் அண்டம் முழுவதும் 
அப்படி இருப்பதாக அறிகுறி கூட இல்லை.

பூமியும் மற்ற கிரகங்களை போன்ற ஒரு கிரகமே அதுவும் 
சூரியனிலிருந்து தான் பிரிந்து வந்தது என்று கூறப்படுகிறது, 
அதுவும் மற்ற கிரகங்களை போன்று சூரியனை சுற்றுகிறது, 
சுற்றுவதற்கு ஈர்ப்பு விசை காரணமாக இருந்தாலும், அந்த 
ஈர்ப்பு விசையால் மோதாமல் சரியான ஈர்ப்பு விசையில் 
சுற்றுகின்றன. எப்படி?

சுற்று பாதையை அவைகளுக்கு அமைத்து கொடுத்தது யார்? 
இந்த ஒழுங்கமைப்பை எங்கிருந்து கற்றன. உலகம் இயங்கவேண்டும் 
என்ற நிலையை உருவாகியது யார்?

இவ்வுலகில் எத்தனையோ லட்சக்கணக்கான கிரகங்கள் இருந்தாலும் 
அதில் சூரியனும் சந்திரனும் ஒளி தருவது மட்டும் அல்லாமல் பல்வேறு 
வழிகளில் நம்முடைய வாழ்க்கைக்கு முதல் ஆதாரமாக இருக்கிறது, 
எப்படியெனில் சூரியன் ஒளி தருவதனாலேயே உயிரினங்கள் 
சக்தியை பெற்றி வாழ்க்கை நடத்துகின்றன. இந்த சூரியன் 
இல்லையெனில் நமக்கு வாழ்வே இல்லை எனலாம், எதற்காக சூரியன் 
நமக்கு ஒளி தரவேண்டும்? சந்திரனை எடுத்துக்கொள்வோம். சந்திரன் 
சூரியனின் ஒளியை கிரகித்து அதை இரவில் நமக்கு பிறதி பலிக்கிறது. 
சந்திரன் எதற்காக சூரிய ஒளியை கிரகித்து இரவில் நமக்கு ஒளி தரவேண்டும். 
சூரியனும் சந்திரனும் பூமிக்காகவே இயங்குகின்றன, ஒளியையும் தந்து 
முறையே நேரத்தையும் நாள் கணக்கையும் நமக்கு தருகின்றது.


சூரியனிடமிருந்து பலவகையான கதிர்கள் வெளிவருகின்றன. உதாரணமாக
 காம கதிர்கள், எக்ஸ் கதிர்கள் போன்றவை, அதில் அதிக அலைநீளம் 
கொண்ட புறஊதா கதிர்கள் நமக்கு ஆபத்தானவை, அந்த புற ஊதா 
(UV – Ultra Violet) கதிர்களிடமிருந்து நமக்கு பாதுகாப்பு கவசமாக 
இருப்பது ஓசோன் (Ozone) என்ற வாயு, இது பூமியின் மேற்பரப்பில் 
15 முதல் 45 கிமீ உயரத்தில் வளிமண்டலத்தின் அதிகமான பகுதியை 
உள்ளடக்கி உள்ளது. ஓசோன் படலம் இல்லையெனில் இவ்வுலகில் 
எந்த உயிரும் வாழவே முடியாது. இவைகள் எதற்காக நம்மை 
பாதுகாக்க வேண்டும்? அனைத்து உயிர்களும் வாழ வேண்டும் 
என்று யார் இதை செய்தது?

இதுமாட்டுமல்லாமல், பல ஆயிரக்கணக்கான வால் நட்சத்திரங்களும் (Comet)
 எரி கற்களும் (Asteroids) பூமியை நோக்கி வருகின்றன, அவைகள் முழு 
கற்களாக வந்தால் பூமிக்கும் உயிர்களுக்கும் சேதமாகும், 
அந்த எரிகற்கள் பூமியின் வெளிபகுதியிலேயே எரிக்கப்பட்டு, தூள் தூளாக 
விழுகின்றன. எதற்காக அவைகள் எரிக்கப்பட்டு உயிர்கள் காக்க பட வேண்டும்?

பூமி தனது அச்சில் 23.4° செங்குத்தாக சாய்ந்து இருப்பது அனைவரும் 
அறிந்தது, இதனால் பூமியில் விழும் சூரிய ஒளி வெவ்வேறு இடங்களில் 
வேறுபடுகின்றது. இதுவே தட்பவெப்ப நிலையை உண்டாக்குகின்றன. 
சூரியனை நோக்கி இருக்கும் போது கோடைகாலமும் விலகி இருக்கும் 
போது குளிர்காலமும் ஏற்படுகின்றது. இந்த ஆச்சு சாய்வை நிலைபடுத்துவதில் 
சந்திரன் முக்கிய பங்குவகிக்கிறது.

சந்திரனின் வெப்பம் அதிகம், இது உயிர்கள் வாழ ஏற்ற ஒரு கிரகம் அல்ல, 
அது போல வியாழன் என்ற கிரகத்தில் பூமியை விட 350 மடங்கு ஈர்ப்பு விசை 
அதிகம். அதனாலயே தினந்தோறும் விண்கற்களும் வால் 
நட்சத்திரங்களும் வியாழனில் விழுந்துகொண்டிறுக்கின்றன. 18 ம் 
நூற்றாண்டில் தொடங்கிய ஒரு பெரும்புயல் இன்றளவும் வியாழன் 
கிரகத்தில் வீசிகொண்டே இருக்கின்றனவாம். இப்படி மற்ற அனைத்து 
கிரகங்களை பார்த்தாலும் ஈர்ப்பு விசை அதிகம், மிக குறைவு, காற்று 
இல்லை, தண்ணீர் இல்லை என்று உயிர் வாழ்க்கைக்கு தேவையான 
எதாவது ஒரு குறைபாடு இருக்கும். ஆனால் பூமிக்கு மட்டும் இந்த சம 
நிலையை ஏற்படுத்தியது யார்??


பூமிக்கு தாயான சூரியன் பூமிக்கு பிள்ளையான சந்திரன் இரண்டிலும் 
மனிதன் வாழ தேவையான எதுவும் இல்லாத போது இடைப்பட்ட பூமிக்கு 
மட்டும் எங்கிருந்து வந்தது அந்த சக்தி? இதுவும் மற்ற கிரகங்களை 
போன்றே சுற்றி கொண்டுருக்கிறது. பூமிக்கு மட்டும் எப்படி உயிர் வாழ 
அத்தியாவசிய தேவைகளான பொருள்கள் உருவாகின? பூமிக்கு உருவானது 
எனில் அனைத்து கிரகங்களுக்கும் அல்லவா உருவாகி இருக்க வேண்டும்.

தேவைகேற்ப ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக மாறுகிறது 
(பரிணாமவாதிகள் கருத்துப்படி) என்று கூறும்போது அவைகள் மற்ற 
கிரகங்களின் சுற்றுசூழலுக்கு ஏற்ப உருவாகி இருக்க வேண்டும் அல்லவா? 
ஏன் உருவாக வில்லை?

மிதமான தட்பவெப்பம், கடல் அலைகள், மழை, பனிக்கட்டி என ஏன் 
அனைத்தும் பூமிக்கே சரியாக நிகழ வேண்டும்?

இதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன, பிரபஞ்சம் தானாக உருவானதா! 
இல்லை திட்டமிட்டு வடிவமைக்க பட்டதா?


No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற