இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்!.சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ,இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்


மார்க்க சம்பந்தமான இல்மு (அறிவு) எனக்கு இருக்கிறதோஇல்லையோஇருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் மனைவி – மக்கள்குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றிகூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோஇருந்தாலும்... நான் ஒருமுஸ்லிம்! 

இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான, பிதத்தான செயல்கள் நடப்பதைக்கண்டும், அவரவர் குழிக்கு  அவரவர்  பதில்  சொல்லட்டும்என   பேசாமல்  இருந்து விடுகிறேன்இருந்தாலும்... நான் ஒருமுஸ்லிம்!  

மறுமை நாளைக்காக எதை சேர்த்து வைத்திருக்கிறேன் என்றுஎண்ணிப் பார்க்க இந்த அவசர கால உலகத்தில் எங்கே முடிகிறதுஇருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

ஐந்து வேளைத் தொழுவது கடமை என்பதும்,   . தொழாதவன் காஃபிர்என்பதும் எனக்குத் தெரியும் ஆனாலும்  தொழ மனமில்லை , மனமிருந்தாலும்  என் வேலைப் பளுவினால் என்னால் தொழ முடியவில்லை என காரணம் சொல்லிகொள்கிறேன் இருந்தாலும்...நான் ஒரு முஸ்லிம்!

மக்களுக்கு  பயந்து வெள்ளிக்கிழமை  ஜூம்மா தொழுகைக்கும்,வருடத்தில் இரு முறை வரும் பெருநாள் தொழுகைக்கும்தவறாமல் சென்றுவிடுவேன்முறையாக மற்ற நேர தொழுகைகளை வேண்டுமென்றே விடுவது பாவச்செயல் என்று தெரியும்  ஆனாலும் மக்களின் பார்வையில் ........ நான் ஒரு முஸ்லிம்

தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறதுஎனினும்கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்திட மனம் இடம் தரவில்லை,இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்து ஓரளவு என் குடும்பத்திற்காகஉழைத்து சேர்த்து விட்டேன்இப்போது உம்ராஹ்ஹஜ் செல்லும்அளவுக்கு என் உடலில் தெம்பும் பணமும்   இருக்கிறது  ஆனால்இன்னும் அதனுடைய எண்ணம்  வரவே  இல்லை   இருந்தாலும்... நான்ஒரு முஸ்லிம்! 

பள்ளியிலும்வீட்டிலும் மவ்லீது ராத்தீபு, ஞானப்புகழ்ச்சி களை நல்ல மெட்டுகளில், ராகங்களில்  ஓதி இறையருள் பெற முயற்சிக்கிறேன்.இதெல்லாம்  தவறாக இருக்கும்  என  உள்மனம் கூறுகிறது,இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்
உன்னையே வணங்குகிறோம்உன்னிடமே உதவி கோருகிறோம்!என்று அல்லாஹ்விடம் தொழுகையில் ஒப்பந்தம் செய்துவிட்டு  அவ்லியாக்கள்ஞானியாக்கள்பெரியார்களிடம் உதவிதேடுவது என் இரத்தத்தில் ஊறிப்போய்விட்டதுஇருந்தாலும்... நான்ஒரு முஸ்லிம்
நாட்டம் நிறைவேற அவ்லியாவுக்கு நேர்ச்சை , உண்டியலில் பணம்,ஆடு , கோழி என நேர்ந்து கொடுத்து அவரது  சன்னதியில் சென்றுயாசீன் பாத்திஹாவெல்லாம் ஓதி துஆ கேட்டு சந்தோசம் அடைகிறேன்.இது குர்ஆன்-ஹதீஸில் இல்லை, நபிவழியும் இல்லை என ஆதாரங்களுடன் எனக்கு தெரிய வந்தாலும் என் மன ஆறுதலுக்காக,அபிவிருத்திக்காக இதை ஓதுவதற்கு ஏற்பாடு செய்கிறேன்.இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம் 
குழந்தைக்கு தர்காவில் அவ்லியா சன்னிதானத்தில்  சென்று பெயர்வைக்கிறேன்காணிக்கைஸ்பெஷல் நேர்ச்சை சகிதமாக எனவசதிகேற்ப செய்து மகிழ்கிறேன் இதெல்லாம் அனாச்சாரம்,பிதத்துக்கள்நபி வழி இல்லை , மாற்று மதத்தவர்களின் செயல்கள்,பாவச்செயல்கள்  என சொல்கிறார்கள்உண்மைதானோ ? என்னவோதெரியவில்லைமுன்னோர்கள் காட்டித்தந்த வழியல்லவா,அதனால் செய்துகொண்டுதான் இருக்கிறேன்...  இருந்தாலும்... நான்ஒரு முஸ்லிம்! 
பலர் பாராட்ட பெருநாள்கள்   அன்று பாட்டுக்கச்சேரியை  விமரிசையாக நான் முன்னின்றுநடத்தியிருக்கிறேன்  இன்னும்  நடத்தவேண்டும் என ஆசையாகத்தான் இருக்கிறது. இஸ்லாமில் இசை ஹராம் என சொல்கிறார்கள் ஆனால் மனம் லயித்து போவதால் விட  முடியவில்லை இருந்தாலும்... நான்ஒரு முஸ்லிம்! 
தாடி வளர்ப்பது வாஜிபான சுன்னத் என தெரிகிறது ஆனாலும் பொருட்படுத்தாமல் என் மனைவியின் ஆசைக்காக, என் சுயநலத்திற்காக, சுன்னத்தான தாடியை சிரைத்துவிட்டேன்,இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்
வட்டி ஹராம் வாங்கக்கூடாது, கொடுக்கக்கூடாது  என்று வான்மறைக்கூறினாலும் கூட  குறைந்த வட்டியில் தொழில் வளர்ச்சிக்காக,வீடுகட்டகடை ஆரம்பிக்கபைக் சவாரிக்காக வட்டி வாங்க வேண்டியநிர்பந்தம்என்ன செய்வதுஇருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்

சினிமா, சீரியல் , ஆடல் பாடல்  போட்டிகள் , கச்சேரிகள் , நாடகம் , பார்க்கக் கூடாதாம்ஹராமாம் !  இந்த காலத்தில் நடக்கக்கூடியகாரியமா என்ன?  மக்கள் பாராட்டும் விதமாக நான் ஆடல் , பாடல்போட்டிகளில் என் பிள்ளைகள்  கலந்து கொள்ள அனுமதி yalikkiren ,இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்
கடவுள்இறை அச்சம் ,பாவம்புண்ணியம்நீதிநியாயம்உண்மை, கண்ணியம் , மரியாதை , சகோதரத்துவம், அன்பு , பண்பு   என்றெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கிறது.  ஏதோஉலகத்திலே பிறந்துட்டோம்முளைக்கிற செடி வளர்ந்து மரமாகிறமாதிரி நாமும் வளர்ந்துட்டோம்ஏதோ வாழந்துட்டு  இருக்கிறோம்.ஊரோடு இணைந்து போகத்தானே வேண்டும்இஸ்லாமியஅடிச்சுவட்டில் இக்காலத்தில் வாழ்ந்தால் உலகம் நகைக்காதா?இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்
ரேசன் கார்டிலும்வாக்காளர் அட்டையிலும்பள்ளி கல்லூரிசான்றிதழ்களிலும், ஜமாஅத் உறுப்பினர்  படிவங்களிலும் ,  மட்டுமேமுஸ்லிமாக இருக்கிறோம் இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மதுவும்விலைமாதுவும் இஸ்லாத்தில் ஹராமானது,தண்டனைக்குரியது  , சமுதாயத்திலும் மிக கேவலமானது ஆனாலும்தொழிலாக போய்விட்டதால் நேரடியாகவும் மறைமுகமாகவும்  செய்ய வேண்டிய சூழ்நிலையாக இருக்கிறது இருந்தாலும்... நான் ஒருமுஸ்லிம்!


இருந்தாலும் நான் ஒரு முஸ்லிம் "   என்பதன் விளக்கம்
பிறப்பால் ஒருவர் முஸ்லிமாக இருப்பதால் மட்டுமே ஒருவர் முஸ்லிம் ஆகிவிடமுடியாது. "லா இலாஹா இல்லால்லாஹ்" என்ற கலிமத்து தவ்ஹீதை உரிய முறையில் உணர்ந்து , வாயால் மொழிந்து , செயல்களால் செயல்படுத்தினால் தான் இதன் உண்மையை உணர்ந்து நடக்கிற உண்மையான முஸ்லிம் என்று நாம் சொல்லிக்கொள்ள முடியும் .
இந்த கலிமத்து தவ்ஹீதில் சொல்லப்பட்டுள்ள  வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை  ஒருமைப்படுத்தாதவர்கள் , நேரமில்லை என்று அலட்சியமாக இருப்பவர்கள்,  குர் ஆன் மற்றும் சஹியான ஹதீகளை தெரிந்துகொள்ள முயற்சியே செய்யாதவர்கள்   அல்லது தெரிந்தும் பாராமுகமாக இருப்பவர்கள்,  குர்ஆன், சுன்னாக்களின் அடிப்படையில் முஷ்ரிக்குகள் அல்லது காஃபிர்கள் என்று தள்ளப்பட்டுவிடுகிற நிலைமைக்கு ஆளாகிவிடலாம்..... எல்லாம் வல்ல     அல்லாஹ்வே மிக்க  அறிந்தவன் .ஆகவே  உண்மையான முஸ்லிமுக்குரிய அடிப்படையில் வாழாமல் அல்லது அடிப்படை இஸ்லாத் தில்  அறிந்தவைகளை (தெரிந்தும்)  கூட  வாழ்க்கையில் செயல்படுத்தாமல் அந்த கட்டுரையில் சொல்லப்பட்ட   நிலைகளில் இருப்பவர்கள்   தங்களை ஒரு முஸ்லிம் என்று எப்படி சொல்லிகொள்ளமுடியும்?   ஆனால்  சமூகத்திற்காக சர்வ சாதாரணமாக  நடைமுறையில் நாம் முஸ்லிம் என்றே சொல்லிகொள்கிறோம். இதனை உணர்த்தும் விதத்தில்  இஸ்லாமை உரிய முறையில்  கடைபிடிக்கிறோமோ  இல்லையோ   "  இருந்தாலும் நான் ஒரு முஸ்லிம் "  என்று நம் வாழ்க்கையை இன்னும் ஓட்டிகொண்டிருக்கிறோம்குறிப்பு :
யார் யாரெல்லாம் இந்த நிலைகளில் இன்னும் இருந்துகொண்டே இருக்கிறோமோ நாம் அனைவரும் இது விஷயத்தில் ஒரு  சுய பரிசோதனை செய்து நம் செயல்களை இஸ்லாமிய வழிகளில் மாற்றிகொள்வது  உண்மையிலேயே  நன்மையான காரியமாத்தான் இருக்கும் என்பது எனது அன்பான கருத்து
No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற