பிறப்பிலிருந்து பேச்சு வராத குழந்தையை பேச வைத்து லண்டன் மருத்துவர்கள் சாதனை!பேசுவது சாத்தியமில்லை என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட குழந்தைக்கு இப்போது சத்திர சிகிச்சை மூலம் பேச்சு வந்துள்ளது.


செவினிபெரிடே என்ற குழந்தைக்கு பிறப்பு முதலே வாயிலிருந்து சத்தம் வெளியேறும் காற்றுக் குழாயில் அடைப்பு.

ஏனைய குழந்தைகளைப் போல் வாய்விட்டு அழ முடியாது. பிறந்து சில வாரங்களில் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. மருத்துவர்கள் சத்திரசிகிச்சை மூலம் கழுத்துப் பகுதியில் ஒரு குழாயைப் பொருத்தி விட்டனர்.

அதன் துணையோடு தான் சுவாசம். பெற்றோர்களான வென்ஜோ 40 வயது மற்றும் கெவின் 30 வயது ஆகியோர் பெரும் வேதனையடைந்தனர்.


  • Click to open image!Click to open image!
  • Click to open image!Click to open image!
  •  

இந்தக் குழந்தையின் கழுத்தில் ஒரு மணி கட்டி வைத்திருந்தார்கள். அதற்கு டிங்கர்பெல் என்று பெயரும் வைத்திருந்தார்கள். குழந்தை தனியாக இருக்கின்ற சந்தர்ப்பங்களில் தனக்கு பெற்றோரின் உதவி தேவைப்பட்டால் இந்த மணியைத் தான் அழுத்தும்.

இந்தப் பின்னணியில் தான் காற்றுக்குழாயை விரிவுபடுத்தும் சத்திர சிகிச்சையை டாக்டர்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர். சத்திர சிகிச்சை முடிந்து குழந்தையின் பேச்சைக் கேட்க பெற்றோர்கள் பெரும் ஆவலாக இருந்த போது கண்விழித்த அந்தக் குழந்தை பெற்றோரைப் பார்த்து ஹலோ என்றது.

அவ்வளவு தான் பெற்றோருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. இந்த நொடிக்காகத் தான் இவ்வளவு காலம் காத்திருந்தோம். இது நடக்கும் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை என்று தமது மட்டில்லா மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.

சுவாசத்துக்காகப் பொருத்தப்பட்டுள்ள மூச்சுக்குழாயையும் விரைவில் அகற்றிவிட முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை பெற்றோரை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற