இளம் மனைவி..


விழிகளில் நீர்
கோர்த்துக்கொண்டு;
வழிகளைப் பார்த்துக்கொண்டு;
உனக்காகக்
காத்துக்கொண்டிருக்கிறேன்;
அறையினில் வந்தால்
உன் நறுமணத்தால்;
நசுங்கிப்போகும் என் மனம்;
நீ இல்லையென்றாலும்
எதிரொலிக்கும் உன்
குரல் ஒலி பிரம்மையாக!

சந்தோஷங்களை உன்
செவிகளுக்கு எடுத்துச்செல்ல;
இடையில் தரகராகத்
தொலைப்பேசி!
திறந்துவிடும் உதடுகளால்;
பளிச்சிடும் பற்கள்;
உன் அழைப்பைக்கண்டு;

துண்டிக்கக் காத்துக்கொண்டிருக்கும்
தொலைப்பேசி இருப்பால்;
இருப்புக்கொள்ளாது என்
மனம் உன் அழைப்பை
வெறுத்துத் தள்ளாது!

பணம் எடுக்க
ரணம் கொடுத்துப்;
பயணம் சென்றாய்;
இளமைத் தவித்து;
கனவை இறுக்கிப்பிடித்து;
இளம் மனைவி உனக்காக;
உன் விடுமுறைக்காக!

No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற