அடுத்தவருடம் வரைவிடுப்பட்ட அம்பாய்
சூடானக் கண்ணீர் – வழிந்தாலும்
நிரம்பிக்கொண்டே இருக்கும்
உன் நினைவுகள் மட்டும்!

கடும் பளுச் சுமக்கும்
என் தோள்களும்;
தோற்றுத் துவண்டுத்தான் போகும்
உன்னை நினைக்கையிலே!

உண்ண நேரமில்லா
நாட்டிலே உன்னை
எண்ணிக் கொண்டிருப்பேன்;
நாட்களைத் தள்ளிக்கொண்டிருப்பேன்!

போர்வைக்குள் புகுந்தப்பின்னே
முட்டி நிற்கும் அழுகை;
சத்தமில்லாச் சரவெடி!

இரவினில் இமையைத் தொடும்
உறக்கமும் தர்ணா செய்ய;
விழித்துக்கொண்டே
உன்னை நினைத்துக்கொண்டிருப்பேன்;
விழிகளை நனைத்துக்கொண்டிருப்பேன்!

பணம் புரட்டப் பாலையில்
மனம் தவிக்கும் வேலையில்
புன்னகைக்கும் உன்
புகைபடம் மட்டும் ஆறுதலாய்
அடுத்தவருடம் வரை!


No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற