பாலைவனத்தில் நான்..
தொட்டுப்பார்த்துத்
தொங்கி நிற்கிறாய்
என் வீட்டு ஜன்னலில்;
சொட்டுச் சொட்டாய்
விழுந்தப்பின்னும்
கட்டிப்பிடுத்துக் குளிர்
அடிக்கிறாய் என் கண்களில்!

காய்ந்துப்போன மண்ணை;
மணம் கொடுத்து எழுப்புகிறாய்;
ஓய்ந்துப்போனப் பின்னும்;
தெருவில் ஓட்டமாய் ஓடுகிறாய்!

நீந்திச் செல்ல
நீச்சல் குளமாய்;
முட்டி நனைய நிற்போம்;
தாவிக் குதிக்கும்
தவளையைக் கண்டுத்
தலைதெறிக்க ஓட்டம்!

குருதிக் சுவைக்கக்
கொசுக் கூட்டம்
படையெடுத்து நுழையும்;
விளக்கு வெளிச்சத்தில்
ஈசைகள் பூப்போல மலறும்!

முத்தம் கொடுக்கும் சேறு
விரல் இடுக்கில்
புண்ணைக் கொடுத்து ரசிக்கும்;
விடுப்புக்கொடுத்தப் பள்ளியைக்
கண்டு மனம் சந்தோஷத்தில் இனிக்கும்!

மாய்ந்துப்போன நினைவுகள்;
ஈரம் கொடுக்கும் விழிகளில்;
காய்ந்துப்போன இதயத்தில்;
காயம் கொடுக்கும் தழும்புகள்!

ஏங்கி நின்று வானம் பார்த்தாலும்;
வரவில்லை இங்கே இன்னும்;
வந்தாலும் ஒளிந்துக்கொண்டே
வெறிச்சிப் பார்ப்போம்
பால்கனியில் நின்று;
நனையச் சொல்லி
மனம் சொன்னாலும்
நகர மறுக்கும் பாதம்;
நனைந்துவிட்டால் நழுவி விடும்
ஓருநாள் சம்பளம்;
காய்ச்சலில்!
No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற