ஆயப்பாடி பைத்துல்மால்


06-06-2010

ا لسلام عليكم ورحمة الله

இது நான் பதியும் 100 வது பதிப்பு.உங்கள் ஆதரவுக்கு நன்றி.இந்த பதிப்பு நம்ம ஊர் சம்பந்தம்மாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.அதனால் நம்ம ஊரில் உள்ள பைத்துல்மால் பற்றி பதிகிறேன்.


முதலில் பைத்துல்மால் என்றால் என்ன என்று பாப்போம்(எனக்கு தெரிந்தது)?

சுருக்கமாக சொன்னால் பைத்துல்மால் என்பது வட்டி இல்லாமல் கடன் மற்றும் உதவி செய்யும் வங்கி போல.இதன் மூலம் நாம் பல உதவிகளை செய்யலாம்.இருக்க பட்டவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுதல்.

நம் செலவுகள் போக நம்பிடம் உள்ள பணத்தில் நம்மால் முடிந்த உதவியை செய்ய முன்வர வேண்டும்.லட்ச கணக்கில் கோடி கணக்கில் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை.ஆயிரம் ருபாய் கொடுத்தால் கூட போதும்.அது கூட இல்லாதவர்களுக்கு போய் சேரும் இன்ஷா அல்லாஹ்.நம்மளால் முடிந்த அளவிற்கு உதவி செய்யலாம்.

சரி இதை எப்படி கொடுக்க வேண்டும் என்று கேட்கிரிர்களா?

இதற்கு நமதூர் ஜமாத் சார்பாக கூட்டு கணக்கு (Joint Account) திறந்து உள்ளார்கள்.இதற்கு பொறுப்பாளர்களாக ஜமாத் சார்பாக இருவர் நியமிக்கபட்டுள்ளர்கள்.
(விபரம் கீழே உள்ளது)

இந்த கணக்கில் பணத்தை சேமித்து வைத்து கொண்டு உதவி கேட்டு வரும் அல்லது நாமே தேடி போய் நமதூர் மக்களுக்கு உதவி செய்ய முடியும். ஜமாத் நிர்வாகிகள்,பைத்துல்மால் நிர்வாகிகள் கூடி எவ்வளவு தொகை,இவர்கள் உதவி பெற தகுதியானவர்களா என்று முடிவு செய்து பணம் கொடுப்பார்கள்.

குறிப்பு : பணம் கொடுத்தவர்கள் யார் வேண்டுமானாலும் கணக்கு விபரங்களை கேட்கலாம்.உதவி பெற தகுதியானவர்களை பரிந்துரையும் செய்யலாம்.
உதவி கேட்டு வரும் நபர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.


எந்த மாதிரி உதவிகள் செய்யலாம்?


  • ஏழை மற்றும் இல்லாதபட்டவர்களின் இல்ல திருமணத்திற்கு உதவி செய்யலாம்
  • ஏழை மாணவர்களின் படிப்பு செலவிற்கு உதவி செய்யலாம் 
  • உடல்நிலை குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யலாம்
  • ஹலாலான தொழில் தொடங்க உதவி செய்யலாம்.
  • ஆண்கள் இன்றி வருமானம் இன்றி தவிக்கும் குடும்பத்துக்கு உதவி செய்யலாம்
  • ஏழ்மையானவர்களுக்கு வெளிநாடு செல்ல உதவி செய்யலாம்.


இன்னும் நிறைய உதவிகள் பைத்துல்மால் மூலம் செய்ய முடியும் இன்ஷா அல்லாஹ்.

இதனால் நமக்கு என்ன பயன்?

கண்ணுக்குத் தெரியாத எங்கேயோ உள்ளவர்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம் உதவிடுங்கள் என்று கேட்டு வரும் இயக்கங்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் நம் சகோதரர்கள் (உண்மையில் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கொடுக்கிறார்கள்).ஆனால் அந்த இயக்கங்கள் சரியான முறையில் உதவி செய்கிறார்கள் எனபதற்கு என்ன நிச்சயம்?அவர்கள் சாபிடுகிரார்களா இல்லை உண்மையில் உதவி செய்கிறார்களா என்பதற்கும் என்ன நிச்சயம்?என்ன செஞ்சா நமக்கு என்னா நாம நல்ல எண்ணத்துல தான் கொடுத்தோம் என்று நினைக்க வேண்டாம்?ஏன் அப்படி கண்ணுக்கு தெரியாத,உண்மையில் உதவி செய்கிறார்களா இல்லையா என்ற சந்தேகத்தில் உதவி செய்ய வேண்டும்?உழைத்த பணத்தை ஏன் மற்றவர்கள் ஏமாற்றி திங்க வேண்டும்?

இதற்கு நம் கண் முன்னே நமக்கு நன்கு தெரிந்த நம் ஊர் அல்லது பக்கத்துக்கு ஊரில் வசிக்கும் நம் இஸ்லாமிய சகோதர்களுக்கு கொடுக்கலாம் அல்லவா?நமக்கும் உதவி செய்தோம் அதன் மூலம் ஒருவர் பயன் அடைந்தார் என்ற சந்தோஷமும்,மறுமையில் நன்மையும் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.

உதாரணமாக வடகரையில் பைதுல்மாலின் இருப்பு தொகை இப்பொழுது 1 கோடிக்கு மேல் உள்ளது.பல உதவிகளை செய்து வருகிறார்கள்.
ஆனால் நமதூரில் கொஞ்சம் தாமதமாக தான் ஆரம்பித்து உள்ளோம்.ஹைர்.நம்மளாலும் இதை விட அதிகமாக உதவி செய்ய முடியும் இன்ஷா அல்லாஹ்.

நாம் அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே இதை நல்ல முறையில் பயனுள்ள முறையில் கொண்டு செல்ல முடியும்.ஏதோ துவங்கினோம் கூட்டம் போட்டோம் என்று விட்டு விட கூடாது.

ஏதோ பைதுல்மாலாம்! என்னமோ ஆரம்பிச்சி இருக்காய்ங்க!! எத்தன நாளைக்கு என்று பாப்போம்!!! என்று ஒன்னுத்துக்கும் உதவாதவர்களை போல் தயவு செய்து பலா கழுவி விட்டு போக வேண்டாம்?(இப்படி பல பேர் பேசி நான் கேட்டேன் அதான் சொல்றேன் தவறாக நினைக்க வேண்டாம்)


நமதூருக்காக நமதூர் மக்களக்குகாக நமக்காக நம் சகோதர்களுக்காக நல்ல எண்ணத்தில் உருவாக்க பட்ட இந்த பைதுல்மாலை நல்ல முறையில் நாம் தான் செயல்படுத்த வேண்டும் சகோதர்களே.எல்லா வெறுப்புகளையும் விட்டு நம் ஊருக்காக உங்களால் முடிந்த உதவியை இன்ஷா அல்லாஹ் செய்யுங்கள்.

உண்மையில் பைத்துல்மால் வரவேற்கத்தக்க மிகவும் அவசியமானா ஒன்று.இன்ஷா அல்லாஹ் இந்த பைதுல்மாலை நாம் தொடர்ந்து பயனுள்ள வகையில் நடக்க ஒத்துழைப்பும்,பண உதவியும்,துவாவும் செய்வோம்.


வங்கி கணக்கு விபரம் 


பைத்துல்மால், 
ஜாமியா மஸ்ஜித்,
வக்ப் நிர்வாக சபை,
ஆயப்பாடி.

M.முஹம்மது முஸ்தபா 
A.அப்துல் குத்தூஸ் 

A/C No  : 104101000010401
Bank      : Indian Overseas Bank
Branch   : Thirukkalacherri  


1 comment:

  1. assalamu alaiku ungaludaya karuthu nallathuku eanna seithalum

    ReplyDelete

பதிவுகளை ஈமெயிலில் பெற