இரைப்பையின் சிறப்புஒரு சாண் வயிறு இல்லாட்டா… உலகத்தில் ஏது கலாட்டா?’ என்பது ஒரு பழைய சினிமா பாடல். நம்மை ஓடி ஓடி உழைக்க வைப்பது வயிறு தான். இரைப்பையின் `நெருப்பு’ அணைந்து விட்டால் உலக இயக்கமே நின்றுவிடும். நமது உடலின் பிரதான கேந்திரம்
இரைப்பை தான். நாம் ஒருநாளைக்கு ஏன் மூன்று முறை மட்டும் சாப்பிடுகிறோம்?


காரணம், செரிமானம் முழுமை அடையும் வரை, மீதமுள்ள உணவை இரைப்பையால் `ஸ்டோர்’ செய்து வைத்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் நாம் ஒருநாளைக்கு ஆறு முறை சாப்பிட வேண்டியிருக்கும். உணவுக் குழாயின் நீடித்த பகுதிதான், இரைப்பை. அரைக்கப்பட்ட உணவின் செரிமானம் இங்கு தொடங்குகிறது. இரைப்பையால் 45 மி.லி. அளவுக்கு விரிவடைய முடியும். எந்த உணவையும் சேமித்து வைப்பது, சிதைப்பது, தள்ளுவதற்கான திறன் இரைப்பைக்கு உள்ளது.


***
இரைப்பையில் பாக்டீரியாக்கள் உடம்பில் ஈரமும், கதகதப்புமான இடங்களில் பாக்டீரியாவால் வாழ முடியும். அந்த வகையில் இரைப்பை அவற்றுக்கு நல்ல வாழிடமாகிறது. வீலோனெல்லா, பைபிடோபாக்டீரியா, லாக்டோ பேசில்லை போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், தாதுப்பொருள்கள், வைட்டமின்கள், சிக்கலான கார்போஹைட்ரேட்களை உடைக்கின்றன. எச். பைலோரி, சால்மோனெல்லா, ஈ. கோலை போன்ற தீங்கு செய்யும் பாக்டீரியாக்களும் இரைப்பையில் காணப்படுகின்றன. இவை, பாதுகாப்புப் படலத்தை ஊருருவி, நோய்த் தொற்றையும், வீக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

***
குடலைக் குறைப்பது விரைவிலேயே இரைப்பை நிரம்பிய உணர்வைப் பெற, இரைப்பையின் அளவைக் குறைக்க முடியும். அதற்கான நடைமுறை, `பேரியாட்ரிக் அறுவைச் சிகிச்சை’ எனப்படுகிறது. கட்டுப்பாடற்ற உடல் பருமன், அதுதொடர்பான நீரிழிவு போன்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். `பாடி மாஸ் இன்டெக்ஸ்’ (பி.எம்.ஐ.) 40-க்கு மேல் உள்ளவர்களுக்கு பொதுவாக பேரியாட்ரிக் அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. சிலநேரங்களில் இரைப்பையில் ஒரு பகுதியைத் தடுப்பது, துணைப் பாதை அமைப்பது, ஒரு பகுதியை அகற்றுவதை விட, `லேப்ராஸ்கோப்’ முறையில் குடலின் மேற்பகுதியில் பொருத்தப்படும் `சிலிக்கான் பாண்ட்’, கொள்ளளவைக் குறைக்கும். இரைப்பையை அதிகம் தொந்தரவு படுத்தாத முறையாகும் இது.

***
உணவு செரிமானமாகும் விதம் அரைக்கப்பட்ட உணவு, இரைப்பையை அடைகிறது. புரதங்களைச் செரிக்கும் பெப்சின் உள்ளிட்ட நொதிகள் இரைப்பையில் சுரக்கப்படுகின்றன. இரைப்பை ஹார்மோனான காஸ்ட்ரின், ஹிஸ்டமைனால் ஹைட்ரோகுளோரிக் அமிலச் சுரப்பு தூண்டப்படுகிறது. உணவில் உள்ள பெரும்பாலான பாக்டீரியாக்களை ஹிஸ்டமைன் கொல்கிறது. புரத செரிமானத்தை பெப்சின் தொடங்குகிறது. இது புரதத்தை பாலிபெப்டைடுகளாகவும், பாலைத் தயிராகவும், நீராகவும் மாற்றுகிறது. இரைப்பையின் தசைச்சுருக்கம், உணவை இரைப்பைப் பாகாக மாற்றுகிறது. அது முன்சிறுகுடலுக்கு அனுப்பப்படுகிறது.

***
வயிற்றுப் பிரச்சினைகள் பெரும்பாலான இரைப்பைப் புண்கள், புற்றுநோய்கள், செரிமானப் பிரச்சினைகளுக்கு ஹெலிகோபாக்டர் பைலோரி என்ற பாக்டீரியாதான் காரணம்.

காஸ்ட்ரிட்டீஸ்-

இரைப்பைச் சுவர் அடுக்கில் ஏற்படும் வீக்கம். அதிகமாக மதுபானம் அருந்துவது, `நான் ஸ்டீராய்டல் ஆன்டி இன்ப்ளமேட்டரி’ வேதிப்பொருட்களை நீண்டநாட்களாகப் பயன்படுத்துவதால் இந்நிலை ஏற்படும். இரைப்பைப் புண் (பெப்டிக் அல்சர்)- இரைப்பைச் சுவர் அடுக்கு அரிக்கப்படுவதால் ஏற்படும் வலி. எரிச்சலான வலி இதன் அறிகுறி.

சிகிச்சை அளிக்காவிட்டால் நிலைமை மோசமாகும். வாந்தி- வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் கூட வயிற்றுப் பொருட்கள் வெளியேற்றப்படுவது. வயிற்றைப் புரட்டுவது, வாந்திக்கு முன் ஏற்படும் உணர்வு. வாந்தியானது நீரிழப்பை ஏற்படுத்தும். குடல்வாய் தசையமைப்பு தளர்வடைய, ரெட்ரோ பெரிஸ்டாலிஸ் வழியாக, சிறு குடலின் மத்தியில் உள்ளவை, மேல்நோக்கி வெளித்தள்ளப்படுகின் றன. வாந்தியின் நிறம், தன்மை, ஏற்படும் கால இடைவெளி ஆகியவை, இரைப்பையின் நிலை யைக் காட்டும்.

நெஞ்சு எரிச்சல்-

இரைப்பைப் பொருட்கள் உணவுக்குழாய்க்குள் ழைவது. உணவுக்குழா யில் பாதுகாப்புத் தடுப்பு இல்லாததால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. இரைப்பைப் புற்றுநோய்- இரைப்பையின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இது ஏற்படலாம். ஆண்டுதோறும் உலகமெங்கும் 8 லட்சம் பேர் இரைப்பைப் புற்றுநோயால் இறக்கிறார்கள். செரியாமை, நெஞ்சு எரிச்சல், பசி மந்தமாவது ஆகியவை ஆரம்பகால அறிகுறி களாகும்.

முற்றிய நிலையில், வயிற்று வலி, வாந்தி உணர்வு, வயிற்றுப்போக்கு, சாப்பாட்டுக்குப் பிறகு வயிறு வீக்கம், எடைக் குறைவு, சோர்வு, வாந்தியில் ரத்தம் போன்றவை காணப்படும்.

*** சிந்தனைக்கு உணவு நாம் மனச்சோர்வான நிலையில் இருக்கும்போது இரைப்பைச் சுரப்புகளும், தசை அலைகளும் ஏறக்குறைய இல்லாமல் போய்விடுகின்றன. மனஇறுக்கமானது அமில உற்பத்தியை அதிகரிக்கிறது. காபி, புகை, மதுப்பழக்கம் ஆகியவையும் அமிலத்தை அதிகம் சுரக்கச் செய்கின்றன.No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற