6 நாளில் 15 மாடி கட்டிடம் சீனர்கள் அதிரடி வேகம்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
பீஜிங்:இரண்டு ரூம்ஒரு ஹால்ஒரு கிச்சன்ஒரு டாய்லெட் வைத்து சாதாரணமாக ஒரு வீடு கட்டுவதற்கே  நமக்கு கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்கள் ஆகிவிடுகிறது. 15 மாடி ஓட்டலை ஆறே நாளில் கட்டி முடித்து  அசத்தியிருக்கின்றனர் சீன கட்டிட தொழிலாளர்கள்.சீனாவின் ஹுனான் மாகாணம் சாங்ஷா நகரில்தான் இந்த  சாதனை நடத்தப்பட்டுள்ளது. இங்கு அர்க்’ என்ற பெயரில் 15 மாடி ஓட்டல் கட்ட முடிவு செய்யப்பட்டது.  கட்டிடத்தை ஒரே வாரத்தில் முடித்து தருவதாக ஒப்புக்கொண்டது பிராட் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி என்ற  கட்டுமான நிறுவனம்.


அதிரடியாக வேலைகள் தொடங்கப்பட்டன. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் களமிறங்கினர். இரவுபகலாக  நடந்தது வேலை. ஐந்து நாள் 16 மணி நேரம்.. அதாவது மொத்தம் 136 மணி நேரத்தில் அனைத்து  வேலையையும் முடித்துவிட்டு ஓட்டல் ஓனரின் கையில் சாவியை கொடுத்துவிட்டார் கட்டுமான அதிபர்.
இந்த இமாலய சாதனை பற்றி கட்டுமான நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இப்படித்தான் பில்டிங் கட்ட வேண்டும் என்று பக்காவாக பிளான் செய்துவிட்டால் கட்டுவதற்கு தாமதம்  ஆகாது. எத்தனை தொழிலாளர்கள் தேவைஎன்னென்ன பொருட்கள் தேவை என்பதையும் துல்லியமாக  திட்டமிட்டால் தாமதத்துக்கு வழியே இல்லை. மேலும்ஏற்கனவே கட்டி தயாராக வைத்திருக்கும்  பொருட்களை அசெம்பிள் செய்துதான் இக்கட்டிடம் பெரும்பாலும் கட்டப்பட்டிருக்கிறது. வீடு கட்டும் செலவில்  கூலிதான் அதிகமாகும். விறுவிறுவென அபார வேகத்தில் வேலை முடிவதால் கூலி குறையும். வீடு கட்டும்  செலவும் கணிசமாக குறையும்.

சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். தொழிலாளர்கள் அனைவரும் பரபரப்புடன்தான் வேலை பார்த்தார்களே தவிர,  பதற்றத்துடன் அல்ல. சிறிய விபத்துகூட இல்லாமல் பணி முடிந்திருக்கிறது.சீக்கிரம் முடித்ததால்  ஏனோதானோ என கட்டியதாக நினைக்காதீர்கள். வெளி சத்தம் உள்ளே கேட்காத வகையில் சவுண்ட் ப்ரூப்  கொண்டது இக்கட்டிடம். தீ பிடித்தாலும் பாதிக்கப்படாது. தரைக்கு மேலே கட்டிடம் கட்டுவதைத்தான்  விரைவுபடுத்த முடியும். பேஸ்மென்ட் போடுவதில் இந்த வேகத்தை காட்டுவது ஆபத்து. அதனால்ஒரு மாதம் பொறுமையாகஆனால் மிகவும் வலிமையாக பேஸ்மென்ட் போட்டிருக்கிறோம். ரிக்டர் அளவுக்கு பூகம்பம்  ஏற்பட்டாலும் கட்டிடத்தில் சின்ன கீறல்கூட விழாது.இவ்வாறு கன்ஸ்ட்ரக்ஷன் அதிகாரிகள் கூறினர். சிறப்பாக  திட்டமிட்டால் ஒரு வாரத்தில் 30, 40 மாடிகூட கட்ட முடியும் என்று நம்பிக்கையுடன் சொல்கின்றனர்.No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற