50 வது 100 - டெண்டுல்கர்

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 136 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 620 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.காலிஸ் இரட்டைச் சதம் அடித்தார். ஆம்லாவும் பீட்டர்சனும் சதம் அடித்தனர்.நேற்று 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 190 ரன் எடுத்திருந்தது. டிராவிட் 28 ரன்னுடனும், இஷாந்த் சர்மா 7 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.இன்று 4வது நாள் ஆட்டம தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இசாந்த் சர்மா 23 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து டிராவிட்டுடன் தெண்டுல்கர் ஜோடி சேர்ந்தார். டிராவிட் 43 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
பின்பு லட்சுமண் 8 ரன்னிலும், ரெய்னா 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அப்போது இந்தியா 277 ரன்னுக்கு 6 விக்கெட் என தோல்வியை எதிர்பார்த்தது. பின்னர் டெண்டுல்கருடன் சேர்ந்த தோணி அதிரடியாக ஆடினார். சிறப்பாக விளையாடிய டெண்டுல்கர் தனது 50 வது சதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்ட் வரலாற்றில் முதன் முதலாக இச்சாதனையை சாதித்திருக்கிறார் டெண்டுல்கர். 197 பந்துகளில் சதம் எடுத்தார். சாதனை மேல் சாதனை படைத்து வரும் டெண்டுல்கரின் இச்சாதனையை மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். 
 7வது விக்கெட்டுக்கு 172 ரன்கள் குவித்திருந்த போது தோணி 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹர்பஜன் சிங் 1 ரன்னில் அவுட் ஆனார். இந்தியாவின் ஸ்கோர் 454 ரன்னாக இருக்கும்போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தெண்டுல்கர் 107 ரன்னுடனும், ஸ்ரீசாந்த் 3 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை விட 30 ரன்கள் பின் தங்கி உள்ளது. இன்னும் 2 விக்கெட்களே இருப்பதால் நாளை மழை குறுக்கிடாவிட்டால் தென் ஆப்ரிக்கா வெற்றி பெறுவது நிச்சயம் - அது இன்னிங்ஸ் வெற்றியா இல்லையா என்பது நாளை தெரிந்து விடும்

No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற