தனி மனிதனால் சாதிக்க முடியுமா? பாகம் 1

எந்த ஒரு தனி மனிதனின் மேடைப்பேச்சு மட்டுமே எதையும் சாதித்துவிட இயலாது என்ற விஷமத்தனமான, விவேகமற்ற பிரச்சாரத்தை சிலர் வேகமாக செய்கின்றனர். இவர்கள் வரலாறு தெரியாத வடிகட்டிய முட்டாள்கள். ஏனென்றால்,

கியூபா விடுதலைக்கு குரல் தந்து விதை நட்டவன் ஃபிடல்காஸ்ரோ, லிபியா விடுதலைக்கு வித்திட்ட உமர்முக்தார், தென் ஆப்ரிக்கவிடுதலைக்கு தனிமனிதனாய் தனித்து நின்ற நெல்சன் மண்டேலா, சிங்கப்பூர் விடுதலைக்கு வித்திட்ட லீ குவான்யூ, இந்தோனேசியா சுகர்னோ, மலேசியா சுகர்த்தோ, அமெரிக்க லிங்கன்

- பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்துக்கு இந்திய மண்ணில் முதல் விதை நட்ட ராபர்ட் கிளைவ், பிரஞ்சுப் புரட்சிக்கு துள்ளி எழுந்த நெப்போலியன் ஸ்டாலின், முஸோலினி சர்ச்சில், மார்டின் லூதர்கிங், கன்பியூசியஸ், சீஸர்,ஆண்டனி, அலெக்ஸாண்டர், சாக்ரட்டீஸ், பித்தகோரஸ், செகுவாரா, மாசெதுங், மகாத்மா காந்தி, முகம்மது அலி ஜின்னா, பர்மாவின் ஆங் சாங் சூக்கி, நமது பெருமானார் (ஸல்) அவர்களும், ஏசுநாதரும், புத்தரும் தனிமனிதனாகவே துவங்கிய இயக்கங்களால்தான் உலகளாவிய இயக்கத்தை தோற்றுவிக்க முடிந்தது.

சிறு விதையினுள் பெரும் விருச்சகமே உள்ளது என்ற எதார்த்தத்தை உணராத மடையர்களின் வாதங்களை உதறி எரிந்து நடக்க கற்றுக் கொள்ளுங்கள்.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது முகம்மது அலி ஜின்னா பிரிவினையின் பக்கமும் ஏனைய முஸ்லீம் தலைவர்கள் இந்திய தேசிய காங்கிரஸின் பக்கமும் நின்றார்கள். ஜின்னா தனிமனிதனாய் நின்றார் வென்றார். ஆனால் அபுல்கலாம் ஆஸாத், ஜாகிர் ஹுசைன்,பக்ருதீன் அலி அஹமதுவும் இன்னும் பல தலைவர்களும் கூட்டாய் நின்று காங்கிரஸோடு கூடி நின்றனர்.என்றாலும், இவர்கள் காங்கிரஸில் இருந்து முஸ்லிம் மக்களுக்கு என்ன நன்மையை செய்தார்கள்? எதுவும் இல்லை. 

இந்தியாவில் அன்றைய முஸ்லீம் ஜனத்தொகை 21 கோடி - அதில் சுமார் பதினோரு கோடி முஸ்லிம்கள் தான்.அதிலும் குறிப்பாக மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் முகமது அலி ஜின்னா பக்கம் நின்றார்கள். பாகிஸ்தான் என்ற நாடு உதயமானது.அவர்கள் தங்களது ஜீவாதார உரிமையுடன் வாழ்கிறார்கள்.. அவர்களுக்கு மதச்சுதந்திரம் முழுமையாக உள்ளது. அதே சமயம் இந்திய யூனியன் பகுதியில் மிஞ்சிய10கோடி முஸ்லிம்கள் காங்கிரஸாருடன் கை கோர்த்திருந்தனர். என்றாலும், இன்றுவரை நமது உரிமைகள் காக்கப்படவில்லை மாறாக,நாம் படிப்படியாய் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு மிரட்டப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றாத்தாரக் குடிமக்களாக நடத்தப்படுகிறோம். மதசார்பின்மை என்பது காற்றில் பறந்த கதையாகிவிட்டது!
ஒரே ஒரு அம்பேத்கார் தமது தாழ்த்தப்பட்ட 9 கோடி மக்களுக்கு 140 பாராளுமன்ற ரிஸர்வு தனித்தொகுதிகள் பெற்றுத் தந்தார். ஆனால் பல முஸ்லீம் தலைவர்கள் ஒன்று கூடி நின்றும் ஒரு சீட்டு கூட பெற முடியாமல் முடிவில் மனவருத்தத்துடன் மரணமடைந்தனர். சில தலைவர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டோம் என்று கூட வெளியே சொல்ல முடியாமல் போனது. முடிவில் அபுல் கலாம் ஆஸாத் ஒரு நூல் எழுதி, அதை தான் மரணமடைந்து 30 ஆண்டுகளுக்கு பின் வெளியிடும் படி உயில் எழுதி ஒளித்து வைத்து விட்டு போன கதையும், ராஜீவ் அரசு அந்நூலை வெளியிடலாமா? வேண்டாமா? என்று பாராளுமன்ற சர்ச்சை மூலம் முடக்கிப் போட்டதை நாடறியும்!

நேருவுடன் கைகோர்த்து நின்ற ஷேக் அப்துல்லா மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. அவரை காஷ்மீரில் சிறை வைக்காது கொடைக்கானலில் சிறைவைத்து, தங்கக் கூண்டில் தவிக்க வைத்தனர். ஹைதராபாத் நிஜாமும், ஆற்காடு நவாபும் ராணுவத்தால் பணிந்து குனிந்து போயினர். ராணுவங்களில் முஸ்லிம்களை சேர்க்காமல் திட்டமிட்டே ஆட்சியாளர்கள் சீக்கியர்களையும் கூர்க்காக்களையும் சேர்த்தனர். அதேபோல் கேரள முஸ்லீம்கள், மாப்பிள்ளைமார்கள், கலகக்காரர்கள் என்று சித்தரிக்கப்பட்டு ஒழிக்கப்பட்டனர். மராட்டிய முஸ்லீம்கள் சேரிகளில் குடிபுகுந்தனர். பீகாரிலும், உ.பி.யிலும், குஜராத்திலும் முஸ்லீம்கள் மீது கலவரபயத்தை ஏவிவிட்டு அவர்களையும் முடக்கிஒ போட்டனர். அன்று மிரண்ட முஸ்லீம்கள் (கேரளாவைத் தவிர) வேறு எங்கும் தலைதூக்காது இன்னும் கூனிக் குறுகி குனிந்து வாழ்கிறார்கள். இதுதான் முஸ்லிம்களின் இதுவரையான வாழ்க்கைச் சுருக்கம்......
முஸ்லிம்களின் இந்த நிலைமாற தீர்வுகள்தான் என்ன? முஸ்லிம்களை பீடித்துள்ள போலி பய உணர்விலிருந்து மீண்டுவரும் வழி எது?அவர்கள் இழந்த உரிமைகளை பெறுவது எப்படி? அதற்கானஒரே பதில் " ஒன்றுபடுவோம் ஒதுங்கிக் கூடுவோம் " பிற அரசியலை புறக்கணிப்போம் என்பதுதான்.

இந்தியாவெங்கும் 20 கோடி முஸ்லீம்கள் இருந்தும் பாராளுமன்றத்தில் என்றுமே 10 எம்.பி.களுக்கு மேல் போனதே கிடையாது. பஞ்சாயத்து தேர்தல்களில் கூட முஸ்லீம்கள் பெரும்பான்மையாய் உள்ள பகுதிகளை ரிஸர்வு (தனி)தொகுதியாக்கியும் பெண்கள் தொகுதியாக்கியும் திட்டமிட்டு முடக்கிப் போட்டார்கள். இந்தியாவில் சீக்கியர்கள் 2 கோடிக்கும் குறைவே ஆனாலும் 1985-ம் இந்திரா படுகொலைக்கு மறுநாள் டெல்லியில் நடந்த கலவரத்தில் 3000 பேருக்கும் மேல் சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சீக்கிய அகாலிதள்கள் தொடர்ந்து போராடி நஷ்டஈடு பெற்றதுடன் வழக்கு மன்றம் மூலம் பி.சி.சுக்லா உள்பட பலரை கம்பி எண்ண வைத்தார்கள்.
ஆனால் பிவாண்டியில், மீரட்டிலும், பாகல்பூரிலும், பம்பாய், லக்னோ, டெல்லி, சூரத், சென்னை, கோவை போன்ற பல ஊர்களில் சங்பரிவார கயவாளிகளால் பல்லாயிரம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். பலமுறை கொள்ளையடிக்கப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இன்றுவரை ஒருவனும் தண்டிக்கப்படவில்லை. ஒருவருக்கும் நஷ்ட ஈடு கிடைக்கவில்லை.. ஆனால், குற்றவாளிகளான அத்வானிகளும்,பால் தாக்ரேக்களும் தங்கத்தேர்களில் பவனி வருவதைத்தான் காண்கிறோம்!
http://2.bp.blogspot.com/_fLJWpDE7S5o/Sz1dkyRbWvI/AAAAAAAAA-Q/k9SQrnLAWNw/s320/1250A%5B1%5D.30..12.09.jpg
இது கடந்த கால வரலாறு. ஆனால், இன்று மேற்ப்படி இனத்தைச் சேர்ந்த இவர்களெல்லாம் தேசபக்தர்களாகி விட்டார்கள். யாரையுமே கொல்லாத முஸ்லிம்கள் தேசவிரோதிகள் ஆக்கப்பட்டுள்ளோம். அவர்கள் உரிமைகளை கேட்கக்கூட முடியாத பாவிகளாக்கப்பட்டு உள்ளார்கள். இந்த அவலங்களை எழுதினால் ஏடுகள் பத்தாது. எனக்குள் ஒரு எரிமலையே புதைந்துள்ளது. சகோதரர்களே! நாமும் நமக்குறிய பங்கினைப் பெற வேண்டும் அதற்கு எந்தப் பாதை சிறந்தது முடிவானது உறுதியான இலக்குடையது. பலநாள் சிந்தித்தேன் - சிந்தித்தேன் - இரு வழிகள் தெரிந்தது.
No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற