பிரசவ வலி

என் வயிற்றில்
ஒளிந்துக்கொண்ட
உன்னால்
பசி மறந்தேன்;

பரிகாசங்களுக்கு
நடுவேத் திணறி;
புன்னகையில்
பூரித்தப்போதும்;

சிலிர்த்து நின்ற என்
மயிற்கால்களால்;
நிற்கத் துணிவிழந்த
என் பாதங்கள்
பிரசவத்தை எண்ணி!

வலியெடுத்த என் இடுப்பினால்
விழிப்பிதிங்கி நான் சரிய;
உறவுகள் மருத்துவமனையில்
காவல்காரர்களாய்!

முள் குத்தினாலும்
திட்டித் தீர்க்கும் என் வாய்;
துடித்த வலியால்
கதறினாலும்;
மனம் வரவில்லை;
கருவில் ஒளிந்திருக்கும்
உன்னைக் கரித்துக்கொட்ட!

விழிகள் இருண்டு;
உதடுகள் வறண்டு;
உள்ளம் மிரண்டு;
குரலுக்குள் மிச்சம் வைத்த
ஒசையையும் கொட்டித்தீர்த்து;
விரல்கள் வியர்வையில் நனைய
வழிந்தோடும் கண்ணீர்கள்
காதோடு ஏதோ இரகசியம் பேசக்;
கட்டுப்பட்ட என் கரங்கள்
மருத்துவச்சியின் பலத்திற்கு முன்!

என் வலிகள்
உன் அழுகைக்கு முன்
பலியாக;
அழுத என் விழியும்
அசதியில் அயர்ந்துவிட;
விழித்துப் பார்க்கையில்
மலர்ந்த என் முகம்;
உன் முகம் கண்டுNo comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற